Sunday, November 10, 2019

ரேவதி நட்சத்திரம்

ரேவதி


ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆள்பாதி ஆடைபாதி என்பதற்கு முழுஉதாரணமாய் உங்களது உடைகளையும் ஆபரணங்களையும் பேணிக் காப்பீர்கள். மற்றவர்களை கவரும் விதமாய் உங்களது செயல்பாடுகள் அமைத்துக் கொள்வீர்கள்ள. மனதிற்கு பிடித்தமான உணவு வகைகளை ருசித்து சாப்பிடுவீர்கள். மற்றவர்களால் புகழப்படும் காரியங்களை செய்வதில் அதிக ஆர்வம் கொண்டிருப்பீர்கள். பிராயணம் செய்வதிலும் அதிக நாட்டம் உடையவராய் இருப்பீர்கள். வருங்காலத்திற்கான சேமிப்பை மேற்கொள்வதில் அனைத்து வழிகளையும் பின்பற்றுவீர்கள். பெண்களிடம் பிரியம் உடையவர், பாதி நாள் மிகுந்த செல்வத்துடன் இருப்பார், நல்லவன், பிறர்சொல்கேட்பவர். நல்ல குணவான், அழகான கண்களை உடையவர், வாய் சாதுரியர், பிராமணர்களை வணங்கும் பக்தியுள்ளவர், புத்திமான், இரப்போருக்கு இல்லையென்று கூறாதவர், பழி பாவத்திற்கு அஞ்ச மாட்டான்.


பழி பாவத்திற்கு பயந்தவர்கள்.  நேர்மையாக வாழ்பவர்கள், பேச்சில் இனிமை, கொடுக்கல் வாங்கலில் நாணயம், உள்ளவர். தேவை இல்லாமல் பேசும் குணம் அறவே கிடையாது. மற்றவர்கள்  பேச்சைக் காது கொடுத்துக் கேட்பதில்லை. சுதந்திரப் பிரியர்கள் ரகசியம் காக்கத்  தெரியாது. ஆனால் இவர்கள் சந்தேகப் பிராணிகள்.  எவ்வளவுதான் உயிருக்கு உயிராக பழகினாலும நம்ப மாட்டார்கள்.  நம்பி விட்டால் அவர்களை விட்டு விலகுவதே இல்லை.
மனம் போலவே நடப்பார்கள். தனக்கு சரி என்று தோன்றியதை  துணிந்து செய்வார்கள். மற்றவர்  அபிப்ராயங்களைப்  பற்றி யோசிப்பதில்லை.
சுய முயற்சியில்  முன்னுக்கு வருவார்கள். புத்திசாலித்தனம், சாமர்த்தியம் என்பது கூடப் பிறந்தது.  22 வயது வரை சோதனை காலம். பின் வாழ்க்கையில் உயர்ந்து உன்னத நிலையை எட்டிவிடுவார்கள்.
1. ரேவதி முதல் பாதத்தில் பிறந்தவர் கலகப்பிரியன், நிபுணன், வித்துவான், கிலேசன், சந்தோஷி.
2. ரேவதி இரண்டாம் பாதத்தில் பிறந்தவர் திருடன், தீரன், சௌக்கியவான், கோபி, கருமி, சஞ்சலம் உடையவன், மெலிந்த சரீரம் உடையவன்.
3. ரேவதி மூன்றாம் பாதத்தில் பிறந்தவர் புத்தியற்றவன், பாபி, வஞ்சக குணம் உள்ளவன், தரித்திறன், நல்ல குணம் இல்லாதவர்.
4. ரேவதி நான்காம் பாதத்தில் பிறந்தவர் தீரன், சத்தியம் பேசுபவர், இழிந்த குலத்தவர், சுகவான், பகைவரை வெல்பவர்.

பெயர் நாமம்
முதல் பாதம்: தே என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது 
2-வது பாதம்: தோ என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது 
3-வது பாதம்: ச என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது 
4-வது பாதம்: சி என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது 

இவர்கள் தங்களது நட்சத்திர அதிதேவதையான சனி பகவானை வழிபடுவதன் மூலம் வாழ்வில் வெற்றிகள் அதிகரிக்கும்.



நட்சத்திர அதிதேவதை : ஈஸ்வரன்
பரிகாரத் தெய்வம்  : பெருமாள்
நட்சத்திர குணம்  : தேவ கணம்
விருட்சம்   : இலுப்பை 
மிருகம்   : பெண் யானை
பட்சி   : வல்லூறு
கோத்திரம்  : அகத்தியர்
அனுகூல, அதிர்ஷ்ட மலர் – கருங்குவளை
அனுகூல தெய்வம் – சனீஸ்வரன்
அனுகூல, அதிர்ஷ்ட கல் – நீலக்கல்
அனுகூல, அதிர்ஷட நிறம் – கருநீலம்
அனுகூல, அதிர்ஷ்ட எண் – 6, 8

நட வேண்டிய மரம் 
1 ம் பாதம் - பனை
2 ம் பாதம் - தங்க அரளி
3 ம் பாதம் - செஞ்சந்தனம்
4 ம் பாதம் - மஞ்சபலா
பிறந்த நட்சத்திரத்திற்கு ஏற்ற மரத்தை நட்டு வைத்தால் நிச்சயம் நன்மை எற்படும்.

தொழில் 
நிதித்துறை, நீதித்துறை, கடல் சார்ந்த தொழில்கள், ஆன்மிகம் சார்ந்த பணிகள் இவர்களுக்கு வளர்ச்சியை தரும்.


நட்பு , திருமணம் 


 அசுவினி, மகம், மூலம், உத்திரம், உத்திராடம், மிருகசீரிடம், அவிட்டம், புனர்பூசம், பூசம், அனுஷம், உத்திரட்டாதி.

பகை 
வேதை  (ஆகாத நட்சத்திரம்) – மகம்
திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் – அசுவினி, ஆயில்யம், மகம், மூலம், கேட்டை, ரேவதி

நோய் 
நட்சத்திரத்திற்கு உரிய விளைவுகள்
இடுப்புவலி, கடுவன், கரப்பான், வீக்கம், திரிதோடம், தீச்சுரம், நீர்வேட்கை

அகத்தியர் அருளிய  நட்சத்திர மந்திரம்
ஸ்வர்ணப் ப்ரதாயினி சூட்சும சகாயினி ரேவதி தேவி சஹாய க்ருபே.

குரு மூல மந்திரம் : 
ரேவதி நட்சத்திரம்  - மீன  இராசி:
ஓம் ஸ்ரீம் ஸம் அம் உம் ஐம் ஜீம் ஓம் சுந்தரானந்தர் என்ற வல்லபச் சித்தரே நம:

காயத்திரி மந்திரம் 

ஓம் விச்வரூபாய வித்மஹே
 பூஷ்ண தேஹாய தீமஹி 
தன்னோ ரைய்வதி ப்ரசோதயாத்

மந்திரம் குறைந்தது 9 முறையாவது  அல்லது 108 , அதிக பட்சம் 1008 முறை ஜெபிப்பதன் மூலம் நம் வாழ்வில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் பறந்தோடும்.

உத்திரட்டாதி நட்சத்திரம்

உத்திரட்டாதி





உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் அனைத்து செயல்களும் முழுமையாக முடிக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தை வலுவாக கொண்டவராய் இருப்பீர்கள். உங்களிடம் ஒப்படைக்கப்படும் எந்த காரியமும் முழுமையாக செய்துவிடுவீர்கள். உடல் ஆரோக்கியத்தை மிகவும் ஆர்வமாக பேணிக்காப்பீர்கள். எந்த சூழ்நிலையையும் சமாளிக்க்கூடிய மனநிலையை வளர்த்துவிரும்புவீர்கள். மற்றவர்களிடம் உண்மையான உழைப்பையும் நேர்மையான செயல்களையும் எதிர்பார்ப்பீர்கள். உங்களது நேர்மையான செயல்பாடுகளால் மற்றவர்களிடம் உங்களுக்கான மதிப்பை அதிகரித்து கொள்வீர்கள். மிகுந்த சுற்றத்தாரை உடையவர், கோள் சொல்லும் குணம் உடையவர், நீதிமான் பிறருக்கு உதவி செய்பவர், வித்தையில் விருப்பம் உடையவர், தாம்பூலப் பிரியர், நாடுகள் சுற்றுபவர், பரந்த காதும், பரந்த மார்பும் உடையவர், புத்திமான், பெண்களுக்கு இனியன், பொய்யன், பிறர் தொழிலை விரும்பி செய்பவர், நல்லவருக்கு நல்லவர். வழக்கை தொடுப்பதில் பலவான்.


ஏழையோ, பணக்காரனோ அனைவரையும சமமாக  நினைப்பார்கள், களங்கம் இல்லாத மனம்,  பிறருக்கு துன்பத்தை தராத குணம் உள்ளவர்கள் . கோபம் வரும்.  அந்த கோபம் உடனே மாறிவிடும். ஒருவர் மீது அன்பு வைத்துவிட்டால் அவர்களுக்காக எதையும் செய்வார்கள். எளிதில் உணர்ச்சி வசப்படுவது இவர்கள் குறை. புண்படுத்தினாலோ , சிறுமைப் படுத்தினாலோ பொறுக்க மாட்டார்கள்.  சிங்கம் போல் சீறுவார்கள். ஒரே சமயத்தில்  பல விஷயங்களில் ஞானத்தையும், அறிவையும் பெற  முடியும்.
பள்ளிப் படிப்பு  குறைவாக இருந்தாலும் அனுபவ படிப்பு  அதிகம். கற்றவர்களைக் கவரும் விதத்தில் இவர்கள்  செய்கை இருக்கும். சுறுசுறுப்பு மிக்கவர்கள் . ஒரு  செயலை துவங்கி விட்டால் முடிக்கும் வரை  விடமாட்டார்கள். இவர்கள் வாழ்க்கை திருப்பமே திருமணத்திற்கு பிறகுதான் வருகிறது.
1. உத்திரட்டாதி முதல் பாதத்தில் பிறந்தவர் கோபி, சஞ்சலமானவர், தருமவான், மயிர் நிறைந்த உடல் உடையவர், சிரேஷ்டன்.
2. உத்திரட்டாதி இரண்டாம் பாததில் பிறந்தவர் ரோஷம் உடையவர், சாது, தரித்திர்ர், நல்ல குணவான், நல்ல நடை உடையவர், அறிவுள்ளவர்.
3. உத்திரட்டாதி மூன்றாம் பாதத்தில் பிறந்தவர் பலமுள்ளவர், துன்மார்க்கர், கடவுள் பக்தி நிறைந்தவர், முன்கோபம் உடையவர், எல்லா நேரத்திலும் இன்பத்தோடு இருப்பவர், கலகம் மூட்டுவர்.


4. உத்திரட்டாதி நான்காம் பாதத்தில் பிறந்தவர் புலவர், சொல்லில் வாட்டம் உடையவர், பேதி உடையவர், குடும்பி, கோபி, கிலேசம் உள்ளவர்.

பெயர்  நாமம்
முதல் பாதம்: து என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது 
2-வது பாதம்: ஸ்ரீ என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது 
3-வது பாதம்: தி என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது 
4-வது பாதம்: த என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது 

இவர்கள் தங்களது நட்சத்திர அதிதேவதையான காமதேனுவை வழிபடுவது நல்லது.

நட்சத்திர அதிதேவதை- : காமதேனு
பரிகார தெய்வம்  : துர்க்கை
நட்சத்திர கணம்  : மனுஷ கணம்
விருட்சம்   : வேம்பு
மிருகம்   : பசு
பட்சி    : கோட்டான்
கோத்திரம்   : அகத்தியர்
அனுகூல, அதிர்ஷ்ட மலர் – கருங்குவளை
அனுகூல தெய்வம் – சனீஸ்வரன்
அனுகூல, அதிர்ஷ்ட கல் – நீலக்கல்
அனுகூல, அதிர்ஷட நிறம் – கருநீலம்
அனுகூல, அதிர்ஷ்ட எண் – 2, 6, 8
நட வேண்டிய மரம் 
1 ம் பாதம் - வேம்பு
2 ம் பாதம் - குல்மோகர்
3 ம் பாதம் - சேராங்கொட்டை
4 ம் பாதம் - செம்மரம்
பிறந்த நட்சத்திரத்திற்கு ஏற்ற மரத்தை நட்டு வைத்தால் நிச்சயம் நன்மை எற்படும்.

தொழில் 
சுரங்கம், இயந்திரங்கள், இரும்புபொருட்கள், உணவு விடுதி போன்றவற்றால் இவர்களின் வாழ்க்கை வளம் பெறும்.

நட்பு , திருமணம் 


 ரோகிணி, அஸ்தம், திருவோணம், சதயம், புனர்பூசம், ரேவதி.

பகை 
வேதை  (ஆகாத நட்சத்திரம்) – பூரம்
திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் – பரணி, பூரம், பூசம், உத்திரட்டாதி, அனுசம், பூராடம்

நோய்  
நட்சத்திரத்திற்கு உரிய விளைவுகள்
வயிற்றுப்புண், பெருநோய், நஞ்சு, சுரம், அம்மை,  சொறி, சிரங்கு, பித்தப்பை, காமாலை

அகத்தியர் அருளிய  நட்சத்திர மந்திரம்

 சங்க பதுமநிதி சகாய ரட்சக உத்திரட்டாதி தேவி சஹாய க்ருபே.

குரு மூல மந்திரம் :
உத்திரட்டாதி நட்சத்திரம்  - மீன  இராசி:
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் றீம் ஐம் க்ளீம் ஓம் சுந்தரானந்தர் என்ற வல்லபச் சித்தரே நம:

காயத்திரி மந்திரம் 

ஓம் அஹிர் புத்ந்யாய வித்மஹே 
ப்ரதிஷ்டாபநாய தீமஹி 
தன்னோ உத்ரப்ப்ரோஷ்டபத ப்ரசோதயாத்

மந்திரம் குறைந்தது 9 முறையாவது  அல்லது 108 , அதிக பட்சம் 1008 முறை ஜெபிப்பதன் மூலம் நம் வாழ்வில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் பறந்தோடும்.

சதயம் நட்சத்திரம்

சதயம்


சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புத்தகங்களை படிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பீர்கள். மற்றவர்களை கவரக்கூடிய குண நலன்களை கொண்டிருப்பீர்கள். உற்சாகமான மனநிலை கொண்டவராய் இருப்பீர்கள். கோபமான சொற்களை பொறுக்கமாட்டார். ரோகம் உடையவர், இனியவர், பக்திமான், கை, கால் வலுவுள்ளவன், அழகிய வாயை
உடையவர், பொய் பேசமாட்டார். அரசர்க்கு இனியவர், நீராடுவதில் விருப்பம் உடையவர். பகைவரை வெல்பவர், செல்வம் உள்ளவர், வழக்கு உரைப்பவர். பார்ப்பதற்கு வசீகரமான தோற்றம் கொண்டிருப்பர். பால் பாக்கியம் பெற்று செல்வவளத் தோடு வாழ்வர். பொறுமை மிக்க இவர்கள், விசாலமான சிந்தனையுடன் செயல்படுவர். மனதில் எண்ணியதை நிறைவேற்றுவதில் வல்லவர்கள். தீர்க்கமான யோசனைக்குப் பிறகே செயலில் ஈடுபடுவர். செயல்களில் திறமையும், நல்ல நடத்தையும் கொண்டிருப்பர்.


உண்மை, சத்தியம் தவறாதவர்கள்.  உண்மையை நிலைநாட்ட என்ன விலை கொடுக்கவும் தயங்காதவர்கள். இந்த விடாப்பிடி லட்சியத்தால் மற்றவர்களோடு கருத்து மோதல்களையும் சமாளிக்க வேண்டி இருக்கும்.
கோபக்காரர்கள்.  ஆனால் அடுத்த கணம் தணிந்து விடும். தற்பெருமை  புகழ்ச்சி என்பது பிடிக்காது.  இவர்களிடம் ஆயிரம் திறமைகள்  இருந்தாலும், அதை வெளிபடுத்தத் தெரியாது.
பெரும்பாலும் முற்பகுதி வாழ்க்கை சோதனை களமாக அமைகிறது. வாலிபம் கடந்த பிறகுதான் வாழ்க்கை சிறக்கிறது. குடும்ப வாழ்க்கை  சிறப்பாக அமைவதில்லை. திருமணம் ஆகாமலேயே இருப்பவர்களும் உண்டு என்றாலும் வாய்க்கும் வாழ்க்கைத்துணை நற்குணங்கள் அமையப் பெற்றிருப்பார்கள்.
1. சதயம் முதல் பாதத்தில் பிறந்தவர் குணவான், அழகர், உதாரண், சீலன், பசு, பிரமாணர்களின் மேல் அன்புடையவர்.
2. சதயம் இரண்டாம் பாதத்தில் பிறந்தவர் கோபம் உடையவர், கிலேசம் உடையவர், வஞ்சகன். ஆசாரம் அற்ற இழிந்த குலத்தவர்.
3. சதயம் மூன்றாம் பாதத்தில் பிறந்தவர் நல்ல காரியங்களை எல்லாம் முடிப்பவர், பசி உள்ளவர், வயிற்றுநோய் உள்ளவர், பித்தன், சேவக விருத்தி செய்பவர், புத்திமான்.

பெயர் நாமம் 
முதல் பாதம்: கோ என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது 
2-வது பாதம்:  என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது 
3-வது பாதம்: ஸி என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது 
4-வது பாதம்: ஸு என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது 

இவர்கள் தங்களது நட்சத்திர அதிதேவதையான யமதர்மனை வழிபடுவதால், நலம் உண்டாகும்.



4. சதயம் நான்காம் பாதத்தில் பிறந்தவர் நஷ்டத்தை உணர்பவர், நினைத்த காரியத்தை முடிப்பவர், நல்லவர், சுகவான்.

நட்சத்திர  அதிதேவதை : யமன்
பரிகார  தெய்வம் :  துர்க்கை
நட்சத்திர  கணம் :  ராட்சஸ கணம்
விருட்சம்  :  கடம்பு(பாலில்லா மரம்)
மிருகம்பெண்  :  குதிரை
பட்சி   :  அண்டங் காக்கா
அனுகூல, அதிர்ஷ்ட மலர் – மந்தாரை
அனுகூல தெய்வம் – பத்ர காளி
அனுகூல, அதிர்ஷ்ட கல் – கோமேதகம்
அனுகூல, அதிர்ஷட நிறம் – கருமஞ்சள்
அனுகூல, அதிர்ஷ்ட எண் – 8, 9

நட வேண்டிய மரம்
1 ம் பாதம் - கடம்பு
2 ம் பாதம் - பரம்பை
3 ம் பாதம் - ராம்சீதா
4 ம் பாதம் - திலகமரம்
பிறந்த நட்சத்திரத்திற்கு ஏற்ற மரத்தை நட்டு வைத்தால் நிச்சயம் நன்மை எற்படும்

தொழில் 
வானியல் ஆராய்ச்சி, ஜோதிடம், பத்திரிகை போன்ற துறைகளில் இவர்கள் பிரகாசிப்பார்கள்.

நட்பு , திருமணம் 


 புனர்பூசம், விசாகம், ரோகிணி, திருவோணம், மிருகசீரிடம், அவிட்டம், ரேவதி.

பகை 
வேதை  (ஆகாத நட்சத்திரம்) – ரோகிணி, திருவாதிரை
திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் – ரோகிணி, திருவாதிரை, அஸ்தம், சுவாதி, திருவோணம், சதயம்

நோய்  
நட்சத்திரத்திற்கு உரிய விளைவுகள்
 என்பு சுரம், குளிர் சுரம், பிடிப்பு, கண்நோய், வளி நோய்  நீரேற்றம், வாய்ப்புண், தொண்டைப்புண்


அகத்தியர் அருளிய  நட்சத்திர மந்திரம்

 மூலிக சேவித முனிப்ரசாத சதய தேவி சஹாய க்ருபே.

குரு மூல மந்திரம் :
 சதயம் நட்சத்திரம் - கும்ப  இராசி:
ஓம் ஸ்ரீம் ஐம் க்ளீம் சௌம் ஸ்ரீம் ருங் ஸ்ரீம் ஸம் ஸ்ரீ சட்டைநாதரே நம:

காயத்திரி மந்திரம்

ஓம் பேஷஜயா வித்மஹே 
வருண தேஹா தீமஹி 
தன்னோ சதபிஷக் ப்ரசோதயாத்

மந்திரம் குறைந்தது 9 முறையாவது  அல்லது 108 , அதிக பட்சம் 1008 முறை ஜெபிப்பதன் மூலம் நம் வாழ்வில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் பறந்தோடும்.


அவிட்டம் நட்சத்திரம்

அவிட்டம்


அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எப்போதும் சுறுசுறுப்பான மனநிலையைக் கொண்டவராய் இருப்பீர்கள். மற்றவர்களுக்கு பிரதிபலன் எதிர்பாராமல் உதவும் எண்ணம் கொண்டவர். உடல் ஆரோக்கியத்தை பேணுவதில் மிகுந்த கவனம் செலுத்துவீர்கள். மிகுந்த ஜாக்கிரதை உணர்வோடு செயல்படுவீர்கள். சிக்கனத்தில் அதிக நாட்டம் கொண்டிருப்பீர்கள். நெறியான தொழிலைச் செய்பவர், ஒருவருக்கும் பயப்படமாட்டார்கள், தியாகி, உயரமான நாசி உடையவர், ஒருவர் சொல்லையும் பொறுக்கமாட்டார். மாமிச பட்சண பிரியர், பெற்றோருக்கு விருப்பமானவர்,

பெண்களுக்கு இனியவர், செல்வம் உடையவர், அழகர், அறிவாளி, பிறரின் பொருளை அபகரிக்க மாட்டார்கள். செல்வவளமும் மக்கள் செல்வாக்கும் இவர்களுக்கு இருக்கும். கம்பீரமான தோற்றம் கொண்டிருப்பர். மனோதிடம் பெற்றிருப்பர். கோபம் இவர்களின் இயல்பாக இருந்தாலும் தேவையான விஷயங்களில் நிதானத்தையும் கடைபிடிப்பர். மனைவியின் பேச்சுக்கு மதிப்பளிப்பர்.


சிறந்த அறிவாளி. எடுத்துக் கொள்ளும் வேலைகளை சிறப்பாக செய்து முடிக்கும் திறமைசாலி.  மனம், வாக்கு,  செய்கையால் யாருக்கும் தீங்கிழைக்க நினைப்பதில்லை.  பக்திமான்கள். தன் சுய முயற்சியால் வாழ்க்கையில் வெற்றி பெறுவார்கள்.
பிறர் கருத்து தனக்கு  ஒத்து வராவிட்டால் கடைசிவரை ஒத்துக்  கொள்ளப் போவதில்லை. குடும்ப நிர்வாகத்தைப்  பொறுத்தவரை தலைமை பொறுப்பில் இருப்பார்கள். கிரகபலம் நன்றாக இருந்தால் பிறப்பு வசதியான குடும்பத்தில் அமையும். தாராள மனப்பான்மை உடையவர்கள்.
எந்த விசயமானாலும் அலசி ஆராய்ந்து  தீர்க்கமாக முடிவெடுப்பார்கள். சில சமயம் அவசர முடிவுகளை எடுத்து விட்டு ஆபத்தில் மாட்டிக் கொள்வதும் உண்டு. அந்நியர் பொருள்மீது  ஆசை இல்லாதவர்கள். மற்றவரால் மதிக்கப்படும் இவர்கள் மதிப்பான வாழ்க்கையை அமைத்துக் கொள்வார்கள்.  திருமண வாழ்க்கை திருப்தியாக அமையும். பெரும் செலவு செய்பவன் கணவனாக  வருவான் என்கிறது சாஸ்திரம் பக்தி மார்க்கத்தில் அதிகம் நாட்டம்  கொண்டவர்கள். படிப்பதிலும், தன்னை அலங்கரித்துக்  கொள்வதிலும் அதிகம் நேரம் செலவளிப்பார்கள்.
1. அவிட்டம் முதல் பாதத்தில் பிறந்தவர் காமி, பசி, பொறுக்க இயலாதவர், மனக்கிலேசம் உடையவர், நிஷ்டூரகர், ஸ்தூலதேகம் உடையவர், கறுப்பு நிறம் உடையவர்.
2. அவிட்டம் இரண்டாம் பாதத்தில் பிறந்தவர் கெட்டவர், வஞ்சகர், சத்தியவார், புத்திமான், விடாமுயற்சி உடையவர், சாஸ்திரவாதி, தருமம் உடையவர், தரித்திரம் உடையவர்.
3. அவிட்டம் மூன்றாம் பாதத்தில் பிறந்தவர் குணசீலன், இளைத்த உடல் உடையவர், திடமான மனம் உடையவர், நல்ல நடத்தை உடையவர், சிவந்த நிறம் உடையவர்.

4. அவிட்டம் நான்காம் பாதத்தில் பிறந்தவர் தனவான், குரூரன், ஸ்தூல தேகத்தை உடையவர், கர்வி, வஞ்சகன், மயிர் அழகுள்ளவர்.

பெயர் நாமம்
முதல் பாதம்: க என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது 
2-வது பாதம்: கி என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது 
3-வது பாதம்: கு என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
4-வது பாதம்: கே என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது 

இவர்கள் தங்களது நட்சத்திர அதிதேவதையான வசுக்களை வழிபடுவது நல்லது.

நட்சத்திர அதிதேவதை- :அஷ்ட  வசுக்கள்
பரிகார தெய்வம்      :முருகன்
நட்சத்திர கனம்   –   :ராட்சஸ கனம்
விருட்சம்       :வன்னி (பாலில்லா மரம்)
மிருகம்       :-பெண் சிங்கம்
பட்சி     :வண்டு
கோத்திரம்   -:புலஸ்தியர்
அனுகூல, அதிர்ஷ்ட மலர் – செண்பகமலர்
அனுகூல தெய்வம் – சுப்பிரமணியர்
அனுகூல, அதிர்ஷ்ட கல் – பவழம்
அனுகூல, அதிர்ஷட நிறம் – சிகப்பு
அனுகூல, அதிர்ஷ்ட எண் – 5

நட வேண்டிய மரம் 
1 ம் பாதம் - வன்னி
2 ம் பாதம் - கருவேல்
3 ம் பாதம் - சீத்தா
4 ம் பாதம் - ஜாதிக்காய்
பிறந்த நட்சத்திரத்திற்கு ஏற்ற மரத்தை நட்டு வைத்தால் நிச்சயம் நன்மை எற்படும்

தொழில் 
காவல்துறை, ராணுவத்துறை, அறிவியல் தொழில்நுட்பத்துறை, இரும்புத்தொழில், பிரிண்டிங் போன்ற தொழில்கள் இவர்களுக்கு ஏற்றது.

நட்பு , திருமணம் 


சுவாதி, சதயம், பூசம், அனுஷம், உத்திரட்டாதி, அசுவினி, மூலம், உத்திராடம், ரோகிணி, திருவோணம்.

பகை 
வேதை  (ஆகாத நட்சத்திரம்) – மிருகசீரிஷம்
திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் – மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம்

நோய் 
நட்சத்திரத்திற்கு உரிய விளைவுகள்
நஞ்சு,  வளி நோய் , சன்னி, முப்பிணி, ஐயப்பெருக்கு, சொறி, கபம்


அகத்தியர் அருளிய  நட்சத்திர மந்திரம்

காவிரி கங்கா கதிரல சேவித காந்த அவிட்ட தேவி சஹாய க்ருபே.

குரு மூல மந்திரம் : 
அவிட்டம்  நட்சத்திரம் 1,2ம் பாதம் - மகர  இராசி:
 ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் க்ளீம் சௌம் ஸ்ரீ கொங்கணச் சித்தரே நம:

அவிட்டம்  நட்சத்திரம் 3,4ம் பாதம் - கும்ப  இராசி:
ஓம் ஸ்ரீம் ஸ்ரீம் றீம் ஹ்ரீம் ஸ்ரீ திருமூலரே நம:

காயத்திரி மந்திரம் 


ஓம் அக்ர நாதாய வித்மஹே 
வசூபரீதாய தீமஹி 
தன்னோ சரவிஹ்டா ப்ரசோதயாத்

மந்திரம் குறைந்தது 9 முறையாவது  அல்லது 108 , அதிக பட்சம் 1008 முறை ஜெபிப்பதன் மூலம் நம் வாழ்வில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் பறந்தோடும்.

திருவோணம் நட்சத்திரம்

திருவோணம் நட்சத்திரம்


ஸ்ரீமகாவிஷ்ணுவின் நட்சத்திரம். கேரளத்தில் வாமன அவதாரத்துக்குக் காரணமான மகாபலியைப் போற்றும் வகையில், ஓணம் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. இதனை சிரவணம் என வடமொழியில் குறிப்பிடுவர்.

திரிபுரத்தை எரிக்க சிவபெருமான் போரிட்டபோது, அவர் அமைத்த தேரிலும் ஆயுதங்களிலும் பல்வேறு தேவர்களும் சிவபெருமானுக்குச் சேவை செய்ததாக சிவபுராணம் கூறுகிறது. அதில் மேருமலை வில்லாக, 

மகாவிஷ்ணு அஸ்திரமானார். அதன் கூரான முனையில் அக்னியும் மறு முனையில் யமனும் அமர்ந்திருந்தனர். திரிபுரம் எரித்து அசுர சம்ஹாரம் நிகழ்ந்தது என்பது புராண வரலாறு. திருவோணமும் ஓர் அம்பு அல்லது அஸ்திர வடிவில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

திருவோணம் நட்சத்திரம் முதல் பாதம்:
செவ்வாய் இதன் அதிபதி. இதில் பிறந்தவர்கள் சௌகரியத்தை விரும்புவர். தனக்காக எவ்வளவு வேண்டுமானாலும் செலவழிப்பவர்கள், பிறருக்கு செலவழிக்க யோசிப்பார்கள். உடல்நலக் குறைவு அவ்வப்போது ஏற்படும். காரியம் சாதிப்பதில் வல்லவர்கள்.

திருவோணம் நட்சத்திரம் இரண்டாம் பாதம்: 
சுக்கிரன் இதனை ஆட்சி செய்பவர். இவர்கள் சுகத்தை விரும்புபவர்கள். திறமைசாலிகள். தலைமை தாங்கும் இயல்பும், தெய்வபக்தி உள்ளவர்கள். பெரியோர்களை மதிப்பவர்கள்.

திருவோணம் நட்சத்திரம் மூன்றாம் பாதம்: 
புதன் இதன் அதிபதி. நிறைவான ஞானம், பக்தி உடையவர்கள். யோகி போல வாழ்பவர்கள். தர்மம் செய்வதிலும் கலைகளிலும் ஈடுபாடு கொண்டவர்கள். கோபம், குணம் இரண்டும் இருக்கும்.

திருவோணம் நட்சத்திரம் நான்காம் பாதம்:
 சந்திரன் இந்தப் பாதத்தை ஆட்சி செய்கிறார். இவர்கள் சௌகரியமும், சௌபாக்கியமும் பெற்று வாழ்பவர்கள். பாசமும் நேசமும் மிக்கவர்கள். குடும்பத்தை நேசிப்பவர்கள். நட்பு மிக்கவர்கள். நியாயவாதிகள். உடனடிக் கோபமும் உடனடி சாந்தமும் இவர்கள் இயல்பு.

பெயர் நாமம் 

முதல் பாதம்: ஜு என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
2-ம் பாதம்: ஜே என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது 
3-ம் பாதம்: ஜோ என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது 
4-ம் பாதம்: சு என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது 

மகாவிஷ்ணுவை வழிபட்டால் இவர்களுக்கு நன்மைகள் பெருகும்.

நட்சத்திர அதிதேவதை-  : விஷ்ணு
பரிகார தெய்வம்   :- அம்மன்
நட்சத்திர கனம் :- மனுஷ கனம்
விருட்சம்     :- எருக்கு
மிருகம்      :- பெண் குரங்கு
பட்சி       : நாரை அல்லது மாடப்புறா
கோத்திரம்    : அகத்தியர்
அனுகூல, அதிர்ஷ்ட மலர் – அல்லி

அனுகூல தெய்வம் – பார்வதி

அனுகூல, அதிர்ஷ்ட கல் – முத்து, நீலக்கல்
அனுகூல, அதிர்ஷட நிறம் – பச்சை
அனுகூல, அதிர்ஷ்ட எண் – 4


நட வேண்டிய  மரம் 
1 ம் பாதம் - வெள்ளெருக்கு
2 ம் பாதம் - கருங்காலி
3 ம் பாதம் - சிறுநாகப்பூ
4 ம் பாதம் - பாக்கு
பிறந்த நட்சத்திரத்திற்கு ஏற்ற மரத்தை நட்டு வைத்தால் நிச்சயம் நன்மை எற்படும்

தொழில்
சுரங்கம், பெட்ரோலியம், இயந்திரத் தொழில் போன்ற துறைகளில் இவர்கள் ஈடுபட்டால் வளர்ச்சி அடைவர்.


நட்பு , திருமணம் 
மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம், புனர்பூசம், விசாகம், உத்திராடம், ரேவதி.




பகை 

வேதை  (ஆகாத நட்சத்திரம்) – திருவாதிரை

திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் – ரோகிணி, திருவாதிரை, அஸ்தம், சுவாதி, திருவோணம், சதயம்

நோய் 

நட்சத்திரத்திற்கு உரிய விளைவுகள் ஐயநோய், ஐவகை வலி , மூட்டு, வீக்கம், வளி நோய்  அக்கினி மாந்தம் , மலக்கட்டு


அகத்தியர் அருளிய  நட்சத்திர மந்திரம்

மணிமய பூஜித சாந்த சொரூபிணி திருவோண தேவி சஹாய க்ருபே.

குரு மூல மந்திரம் :     

திருவோணம்  நட்சத்திரம்  - மகர  இராசி:
ஓம் ஐம் சௌம் க்ளீம் ஹம் ஸ்ரீம் றம் டம் ஸ்ரீ கொங்கணச் சித்தரே நம:


காயத்திரி மந்திரம்

ஓம் மஹா ச்ரோணாய வித்மஹே 
புண்யஸ்லோகாய தீமஹி 
தன்னோ ச்ரோணா ப்ரசோதயாத்

மந்திரம் குறைந்தது 9 முறையாவது  அல்லது 108 , அதிக பட்சம் 1008 முறை ஜெபிப்பதன் மூலம் நம் வாழ்வில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் பறந்தோடும்.

sudharsan

96 தத்துவங்கள்

தத்துவங்கள் 96 1. ஆன்ம தத்துவங்கள் -24 2. உடலின் வாசல்கள் -9 3. தாதுக்கள் -7 4. மண்டலங்கள் -3 5. குணங்கள் -3 6. மலங்கள...

ஆன்மீகம்