Sunday, November 10, 2019

திருவோணம் நட்சத்திரம்

திருவோணம் நட்சத்திரம்


ஸ்ரீமகாவிஷ்ணுவின் நட்சத்திரம். கேரளத்தில் வாமன அவதாரத்துக்குக் காரணமான மகாபலியைப் போற்றும் வகையில், ஓணம் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. இதனை சிரவணம் என வடமொழியில் குறிப்பிடுவர்.

திரிபுரத்தை எரிக்க சிவபெருமான் போரிட்டபோது, அவர் அமைத்த தேரிலும் ஆயுதங்களிலும் பல்வேறு தேவர்களும் சிவபெருமானுக்குச் சேவை செய்ததாக சிவபுராணம் கூறுகிறது. அதில் மேருமலை வில்லாக, 

மகாவிஷ்ணு அஸ்திரமானார். அதன் கூரான முனையில் அக்னியும் மறு முனையில் யமனும் அமர்ந்திருந்தனர். திரிபுரம் எரித்து அசுர சம்ஹாரம் நிகழ்ந்தது என்பது புராண வரலாறு. திருவோணமும் ஓர் அம்பு அல்லது அஸ்திர வடிவில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

திருவோணம் நட்சத்திரம் முதல் பாதம்:
செவ்வாய் இதன் அதிபதி. இதில் பிறந்தவர்கள் சௌகரியத்தை விரும்புவர். தனக்காக எவ்வளவு வேண்டுமானாலும் செலவழிப்பவர்கள், பிறருக்கு செலவழிக்க யோசிப்பார்கள். உடல்நலக் குறைவு அவ்வப்போது ஏற்படும். காரியம் சாதிப்பதில் வல்லவர்கள்.

திருவோணம் நட்சத்திரம் இரண்டாம் பாதம்: 
சுக்கிரன் இதனை ஆட்சி செய்பவர். இவர்கள் சுகத்தை விரும்புபவர்கள். திறமைசாலிகள். தலைமை தாங்கும் இயல்பும், தெய்வபக்தி உள்ளவர்கள். பெரியோர்களை மதிப்பவர்கள்.

திருவோணம் நட்சத்திரம் மூன்றாம் பாதம்: 
புதன் இதன் அதிபதி. நிறைவான ஞானம், பக்தி உடையவர்கள். யோகி போல வாழ்பவர்கள். தர்மம் செய்வதிலும் கலைகளிலும் ஈடுபாடு கொண்டவர்கள். கோபம், குணம் இரண்டும் இருக்கும்.

திருவோணம் நட்சத்திரம் நான்காம் பாதம்:
 சந்திரன் இந்தப் பாதத்தை ஆட்சி செய்கிறார். இவர்கள் சௌகரியமும், சௌபாக்கியமும் பெற்று வாழ்பவர்கள். பாசமும் நேசமும் மிக்கவர்கள். குடும்பத்தை நேசிப்பவர்கள். நட்பு மிக்கவர்கள். நியாயவாதிகள். உடனடிக் கோபமும் உடனடி சாந்தமும் இவர்கள் இயல்பு.

பெயர் நாமம் 

முதல் பாதம்: ஜு என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
2-ம் பாதம்: ஜே என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது 
3-ம் பாதம்: ஜோ என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது 
4-ம் பாதம்: சு என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது 

மகாவிஷ்ணுவை வழிபட்டால் இவர்களுக்கு நன்மைகள் பெருகும்.

நட்சத்திர அதிதேவதை-  : விஷ்ணு
பரிகார தெய்வம்   :- அம்மன்
நட்சத்திர கனம் :- மனுஷ கனம்
விருட்சம்     :- எருக்கு
மிருகம்      :- பெண் குரங்கு
பட்சி       : நாரை அல்லது மாடப்புறா
கோத்திரம்    : அகத்தியர்
அனுகூல, அதிர்ஷ்ட மலர் – அல்லி

அனுகூல தெய்வம் – பார்வதி

அனுகூல, அதிர்ஷ்ட கல் – முத்து, நீலக்கல்
அனுகூல, அதிர்ஷட நிறம் – பச்சை
அனுகூல, அதிர்ஷ்ட எண் – 4


நட வேண்டிய  மரம் 
1 ம் பாதம் - வெள்ளெருக்கு
2 ம் பாதம் - கருங்காலி
3 ம் பாதம் - சிறுநாகப்பூ
4 ம் பாதம் - பாக்கு
பிறந்த நட்சத்திரத்திற்கு ஏற்ற மரத்தை நட்டு வைத்தால் நிச்சயம் நன்மை எற்படும்

தொழில்
சுரங்கம், பெட்ரோலியம், இயந்திரத் தொழில் போன்ற துறைகளில் இவர்கள் ஈடுபட்டால் வளர்ச்சி அடைவர்.


நட்பு , திருமணம் 
மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம், புனர்பூசம், விசாகம், உத்திராடம், ரேவதி.




பகை 

வேதை  (ஆகாத நட்சத்திரம்) – திருவாதிரை

திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் – ரோகிணி, திருவாதிரை, அஸ்தம், சுவாதி, திருவோணம், சதயம்

நோய் 

நட்சத்திரத்திற்கு உரிய விளைவுகள் ஐயநோய், ஐவகை வலி , மூட்டு, வீக்கம், வளி நோய்  அக்கினி மாந்தம் , மலக்கட்டு


அகத்தியர் அருளிய  நட்சத்திர மந்திரம்

மணிமய பூஜித சாந்த சொரூபிணி திருவோண தேவி சஹாய க்ருபே.

குரு மூல மந்திரம் :     

திருவோணம்  நட்சத்திரம்  - மகர  இராசி:
ஓம் ஐம் சௌம் க்ளீம் ஹம் ஸ்ரீம் றம் டம் ஸ்ரீ கொங்கணச் சித்தரே நம:


காயத்திரி மந்திரம்

ஓம் மஹா ச்ரோணாய வித்மஹே 
புண்யஸ்லோகாய தீமஹி 
தன்னோ ச்ரோணா ப்ரசோதயாத்

மந்திரம் குறைந்தது 9 முறையாவது  அல்லது 108 , அதிக பட்சம் 1008 முறை ஜெபிப்பதன் மூலம் நம் வாழ்வில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் பறந்தோடும்.

No comments:

Post a Comment

sudharsan

96 தத்துவங்கள்

தத்துவங்கள் 96 1. ஆன்ம தத்துவங்கள் -24 2. உடலின் வாசல்கள் -9 3. தாதுக்கள் -7 4. மண்டலங்கள் -3 5. குணங்கள் -3 6. மலங்கள...

ஆன்மீகம்