Sunday, November 10, 2019

அவிட்டம் நட்சத்திரம்

அவிட்டம்


அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எப்போதும் சுறுசுறுப்பான மனநிலையைக் கொண்டவராய் இருப்பீர்கள். மற்றவர்களுக்கு பிரதிபலன் எதிர்பாராமல் உதவும் எண்ணம் கொண்டவர். உடல் ஆரோக்கியத்தை பேணுவதில் மிகுந்த கவனம் செலுத்துவீர்கள். மிகுந்த ஜாக்கிரதை உணர்வோடு செயல்படுவீர்கள். சிக்கனத்தில் அதிக நாட்டம் கொண்டிருப்பீர்கள். நெறியான தொழிலைச் செய்பவர், ஒருவருக்கும் பயப்படமாட்டார்கள், தியாகி, உயரமான நாசி உடையவர், ஒருவர் சொல்லையும் பொறுக்கமாட்டார். மாமிச பட்சண பிரியர், பெற்றோருக்கு விருப்பமானவர்,

பெண்களுக்கு இனியவர், செல்வம் உடையவர், அழகர், அறிவாளி, பிறரின் பொருளை அபகரிக்க மாட்டார்கள். செல்வவளமும் மக்கள் செல்வாக்கும் இவர்களுக்கு இருக்கும். கம்பீரமான தோற்றம் கொண்டிருப்பர். மனோதிடம் பெற்றிருப்பர். கோபம் இவர்களின் இயல்பாக இருந்தாலும் தேவையான விஷயங்களில் நிதானத்தையும் கடைபிடிப்பர். மனைவியின் பேச்சுக்கு மதிப்பளிப்பர்.


சிறந்த அறிவாளி. எடுத்துக் கொள்ளும் வேலைகளை சிறப்பாக செய்து முடிக்கும் திறமைசாலி.  மனம், வாக்கு,  செய்கையால் யாருக்கும் தீங்கிழைக்க நினைப்பதில்லை.  பக்திமான்கள். தன் சுய முயற்சியால் வாழ்க்கையில் வெற்றி பெறுவார்கள்.
பிறர் கருத்து தனக்கு  ஒத்து வராவிட்டால் கடைசிவரை ஒத்துக்  கொள்ளப் போவதில்லை. குடும்ப நிர்வாகத்தைப்  பொறுத்தவரை தலைமை பொறுப்பில் இருப்பார்கள். கிரகபலம் நன்றாக இருந்தால் பிறப்பு வசதியான குடும்பத்தில் அமையும். தாராள மனப்பான்மை உடையவர்கள்.
எந்த விசயமானாலும் அலசி ஆராய்ந்து  தீர்க்கமாக முடிவெடுப்பார்கள். சில சமயம் அவசர முடிவுகளை எடுத்து விட்டு ஆபத்தில் மாட்டிக் கொள்வதும் உண்டு. அந்நியர் பொருள்மீது  ஆசை இல்லாதவர்கள். மற்றவரால் மதிக்கப்படும் இவர்கள் மதிப்பான வாழ்க்கையை அமைத்துக் கொள்வார்கள்.  திருமண வாழ்க்கை திருப்தியாக அமையும். பெரும் செலவு செய்பவன் கணவனாக  வருவான் என்கிறது சாஸ்திரம் பக்தி மார்க்கத்தில் அதிகம் நாட்டம்  கொண்டவர்கள். படிப்பதிலும், தன்னை அலங்கரித்துக்  கொள்வதிலும் அதிகம் நேரம் செலவளிப்பார்கள்.
1. அவிட்டம் முதல் பாதத்தில் பிறந்தவர் காமி, பசி, பொறுக்க இயலாதவர், மனக்கிலேசம் உடையவர், நிஷ்டூரகர், ஸ்தூலதேகம் உடையவர், கறுப்பு நிறம் உடையவர்.
2. அவிட்டம் இரண்டாம் பாதத்தில் பிறந்தவர் கெட்டவர், வஞ்சகர், சத்தியவார், புத்திமான், விடாமுயற்சி உடையவர், சாஸ்திரவாதி, தருமம் உடையவர், தரித்திரம் உடையவர்.
3. அவிட்டம் மூன்றாம் பாதத்தில் பிறந்தவர் குணசீலன், இளைத்த உடல் உடையவர், திடமான மனம் உடையவர், நல்ல நடத்தை உடையவர், சிவந்த நிறம் உடையவர்.

4. அவிட்டம் நான்காம் பாதத்தில் பிறந்தவர் தனவான், குரூரன், ஸ்தூல தேகத்தை உடையவர், கர்வி, வஞ்சகன், மயிர் அழகுள்ளவர்.

பெயர் நாமம்
முதல் பாதம்: க என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது 
2-வது பாதம்: கி என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது 
3-வது பாதம்: கு என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
4-வது பாதம்: கே என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது 

இவர்கள் தங்களது நட்சத்திர அதிதேவதையான வசுக்களை வழிபடுவது நல்லது.

நட்சத்திர அதிதேவதை- :அஷ்ட  வசுக்கள்
பரிகார தெய்வம்      :முருகன்
நட்சத்திர கனம்   –   :ராட்சஸ கனம்
விருட்சம்       :வன்னி (பாலில்லா மரம்)
மிருகம்       :-பெண் சிங்கம்
பட்சி     :வண்டு
கோத்திரம்   -:புலஸ்தியர்
அனுகூல, அதிர்ஷ்ட மலர் – செண்பகமலர்
அனுகூல தெய்வம் – சுப்பிரமணியர்
அனுகூல, அதிர்ஷ்ட கல் – பவழம்
அனுகூல, அதிர்ஷட நிறம் – சிகப்பு
அனுகூல, அதிர்ஷ்ட எண் – 5

நட வேண்டிய மரம் 
1 ம் பாதம் - வன்னி
2 ம் பாதம் - கருவேல்
3 ம் பாதம் - சீத்தா
4 ம் பாதம் - ஜாதிக்காய்
பிறந்த நட்சத்திரத்திற்கு ஏற்ற மரத்தை நட்டு வைத்தால் நிச்சயம் நன்மை எற்படும்

தொழில் 
காவல்துறை, ராணுவத்துறை, அறிவியல் தொழில்நுட்பத்துறை, இரும்புத்தொழில், பிரிண்டிங் போன்ற தொழில்கள் இவர்களுக்கு ஏற்றது.

நட்பு , திருமணம் 


சுவாதி, சதயம், பூசம், அனுஷம், உத்திரட்டாதி, அசுவினி, மூலம், உத்திராடம், ரோகிணி, திருவோணம்.

பகை 
வேதை  (ஆகாத நட்சத்திரம்) – மிருகசீரிஷம்
திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் – மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம்

நோய் 
நட்சத்திரத்திற்கு உரிய விளைவுகள்
நஞ்சு,  வளி நோய் , சன்னி, முப்பிணி, ஐயப்பெருக்கு, சொறி, கபம்


அகத்தியர் அருளிய  நட்சத்திர மந்திரம்

காவிரி கங்கா கதிரல சேவித காந்த அவிட்ட தேவி சஹாய க்ருபே.

குரு மூல மந்திரம் : 
அவிட்டம்  நட்சத்திரம் 1,2ம் பாதம் - மகர  இராசி:
 ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் க்ளீம் சௌம் ஸ்ரீ கொங்கணச் சித்தரே நம:

அவிட்டம்  நட்சத்திரம் 3,4ம் பாதம் - கும்ப  இராசி:
ஓம் ஸ்ரீம் ஸ்ரீம் றீம் ஹ்ரீம் ஸ்ரீ திருமூலரே நம:

காயத்திரி மந்திரம் 


ஓம் அக்ர நாதாய வித்மஹே 
வசூபரீதாய தீமஹி 
தன்னோ சரவிஹ்டா ப்ரசோதயாத்

மந்திரம் குறைந்தது 9 முறையாவது  அல்லது 108 , அதிக பட்சம் 1008 முறை ஜெபிப்பதன் மூலம் நம் வாழ்வில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் பறந்தோடும்.

No comments:

Post a Comment

sudharsan

96 தத்துவங்கள்

தத்துவங்கள் 96 1. ஆன்ம தத்துவங்கள் -24 2. உடலின் வாசல்கள் -9 3. தாதுக்கள் -7 4. மண்டலங்கள் -3 5. குணங்கள் -3 6. மலங்கள...

ஆன்மீகம்