Sunday, November 10, 2019

அனுஷம் நட்சத்திரம்


அனுஷம் நட்சத்திரம்


வானத்தில் அமைந்துள்ள 3 நட்சத்திரங்களின் கூட்டமே அனுஷம். இதன் அமைப்பு, ஒரு மன்னனின் வெண்கொற்றக் குடை போல் தோற்றம் அளிக்கும். இந்த நட்சத்திரத்துக்கு அனுராதா, ம்ருதுதாரா ஆகிய பெயர்களும் உண்டு. அனுஷ நட்சத்திர நாளை ‘வெள்ளை நாள்’ என்கிறது ஜோதிட சாஸ்திரம். உழைப்பையும் உயர்வையும் தரும் உத்தம நட்சத்திரம் இது. விருச்சிக ராசியைச் சேர்ந்த இந்த நட்சத்திரத்தின் தேவதை சூரியன்; ராசி அதிபதி செவ்வாய்.

விருச்சிக ராசியைச் சேர்ந்த அனுஷம் மகா நட்சத்திரமாகும். இதில் பிறப்பவர்களுக்கு முதலில் சனி தசை நடக்கும். இதன் காலம் 19 வருஷம். திருமணப் பொருத்தங்கள் பார்க்கும்போது, அனுஷத்துக்கு மற்றெல்லா நட்சத்திரங்களும் பொருந்தும் என்பார்கள். இது இந்த நட்சத்திரத்தின் தனிச்சிறப்பு.


பசி பொறுக்காதவர்கள். வெள்ளை மனம் கொண்டவர்கள். அன்பு, பாசம், நேசம் மிகுந்தவர்கள். அதிகம் பேசமாட்டார்கள். உண்மையைப் பேசுபவர்கள். தர்ம சிந்தனை உள்ளவர்கள். புகழ் அடைபவர்கள். வெளிநாட்டில் வாழ்வதில் விருப்பம் உள்ளவர்கள். தன்னம்பிக்கை கொஞ்சம் குறைவு; ஆனால், ஆழ்ந்த அறிவு உண்டு.


அனுஷம் நட்சத்திரம் முதல் பாதம்: 

சூரிய ஆதிக்கம் உள்ளதால், புத்திக்கூர்மையும், வைராக்கியமும் மிகுந்திருக்கும். ஞாபக சக்தியும் உண்டு. நூலறிவு பெறுவதில் ஆர்வம் இருக்கும்.

அனுஷம் நட்சத்திரம் இரண்டாம் பாதம்: 

புதனின் ஆதிக்கம் உள்ளவர்கள். அழகான தோற்றமும், கலையுணர்வும் கொண்டவர்கள். அலங்காரத்தில் 



விருப்பமும், இசைக் கருவிகள் வாசிப்பதில் வல்லமையும் உண்டு. பொறுப்பும் பாசமும் உள்ளவர்கள்.

அனுஷம் நட்சத்திரம் மூன்றாம் பாதம்:
 சுக்ர ஆதிக்கம் உள்ளவர்கள். பாசமும் நேசமும் மிகுந்தவர்கள். குடும்பப் பொறுப்புகள் அறிந்து நடப்பவர்கள். உழைப்புக்கு அஞ்சாதவர்கள். பிறருக்கு உதவிசெய்து மகிழ்பவர்கள்.

அனுஷம் நட்சத்திரம் நான்காம் பாதம்: 

இதன் அதிபதி செவ்வாய். இவர்களின் வாழ்வில் ஏற்றத்தாழ்வுகளும், தடை-தாமதங்களும் இருக்கும். தீவிர முயற்சிக்குப் பிறகே முன்னேற்றம் கிடைக்கும். தாழ்வு மனப்பான்மை இருக்கும்.


பெயர் நாமம் 

முதல் பாதம்: ந என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது 
2-ம் பாதம்: நி என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
 3-ம் பாதம்: நு என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது 
4-ம் பாதம்: நே என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது

 நட்சத்திர அதிதேவதையான மகா லட்சுமியை வழிபடுவது இவர்களுக்கு நல்லது.


நட்சத்திர அதிதேவதை – : லக்ஷ்மி

பரிகார தெய்வம்    :- துர்க்கை & காளி
நட்சத்திர கணம் –  : தேவ கணம்
விருட்சம் –    : மகிழ மரம் (பாலில்லாத மரம்)
மிருகம்    :- பெண் மான்
பட்சி –   : வானம்பாடி
கோத்திரம்   :- அகத்தியர
அனுகூல, அதிர்ஷ்ட மலர் – குவளை
அனுகூல தெய்வம் – எமதர்மன், சூரியன்
அனுகூல, அதிர்ஷ்ட கல் – நீலக்கல்
அனுகூல, அதிர்ஷட நிறம் – நீலம், கருப்பு
அனுகூல, அதிர்ஷ்ட எண் – 8


நட வேண்டிய மரம் 

1 ம் பாதம் - மகிழம்
2 ம் பாதம் - பூமருது
3 ம் பாதம் - கொங்கு
4 ம் பாதம் - தேக்கு
நீங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு ஏற்ற மரத்தை நட்டு வைத்தால் நிச்சயம் நன்மை எற்படும்.

தொழில்

சொந்தமாகத் தொழில் செய்வதையே விரும்புவார்கள். சிலர் மருத்துவம் சார்ந்த துறைகளில் ஈடுபடுவர். இவர்களில் சிலருக்கு இசைத்துறையில் புகழ் பெறும் வாய்ப்பு கிடைக்கும்.


நட்பு , திருமணம் 
 ரோகிணி, அஸ்தம், திருவோணம், சுவாதி, சதயம், விசாகம்,ரேவதி.




பகை 
வேதை  (ஆகாத நட்சத்திரம்) – பரணி
திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் – பரணி, பூரம், பூசம், அனுஷம், பூராடம், உத்திரட்டாதி


நோய்

 நட்சத்திரத்திற்கு உரிய விளைவுகள்
மேகச்சூடு, நீர் வேட்கை , இளைப்பு, வெட்டை, நாட்பட்டபுண்






அகத்தியர் அருளிய  நட்சத்திர மந்திரம்

சந்திர ப்ரகாசினி கந்தர்வ கானமய அனுஷ தேவி சஹாய க்ருபே

குரு மூல மந்திரம் :   

 அனுஷம்  நட்சத்திரம்  - விருச்சிக  இராசி:
 ஓம் ஐம் க்ளீம் சௌம் ஸ்ரீம் ஸ்ரீ வான்மீகரே நம:


காயத்திரி மந்திரம் 

ஓம் மித்ரதேயாயை வித்மஹே 
மஹா மித்ராய தீமஹி
 தன்னோ அனுராதா ப்ரசோதயாத்




மந்திரம் குறைந்தது 9 முறையாவது  அல்லது 108 , அதிக பட்சம் 1008 முறை ஜெபிப்பதன் மூலம் நம் வாழ்வில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் பறந்தோடும்.

1 comment:

sudharsan

96 தத்துவங்கள்

தத்துவங்கள் 96 1. ஆன்ம தத்துவங்கள் -24 2. உடலின் வாசல்கள் -9 3. தாதுக்கள் -7 4. மண்டலங்கள் -3 5. குணங்கள் -3 6. மலங்கள...

ஆன்மீகம்