Sunday, November 10, 2019

அஸ்தம் நட்சத்திரம்

அஸ்தம் நட்சத்திரம்

அஸ்தம் என்றால் ‘உள்ளங்கை’ என்று பொருள். ஐந்து நட்சத்திரங்களின் கூட்டமானது நமது கை விரல்களின் நுனிகளைக் குறிப்பதுபோல அமைந்துள்ளன. கன்னி ராசியைச் சேர்ந்த இதன் ராசிநாதன், புதன்.

நல்ல அறிவு, விடாமுயற்சி, கடுமையான உழைப்பு, அளவு கடந்த தன்னம்பிக்கை இவர்களது குணாதிசயங்கள். பொறுமையாக இருந்து காரியத்தைச் சாதிப்பவர்கள். ‘அடக்கம் அமரருள் உய்க்கும்’ என்ற வாசகத்துக்கு ஏற்ப பணிந்து நடந்து, பெரிய பதவிகளைப் பெறுபவர்கள். அன்பு, காதல், இரக்கம் போன்ற குணச்சிறப்புகள் இவர்களுக்கு உண்டு. மனம் லயிக்காத காரியத்தைச் செய்யமாட்டார்கள்.

ஹஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அமைதியானவர்கள்.  ஆனால் ஆடம்பரப் பிரியர்கள்.   எப்படிப்பட்ட குணாதிசயம் பெற்றவர்களையும் கவர்ந்திழுக்கும் ஆற்றல் மிக்கவர்கள்.
நேர்மையானவர்கள்.  கடின உழைப்பாளிகள்.  தாங்களாக பிறருக்கு துன்பம் தர நினைப்பதில்லை. மீறி துன்பம் தந்தவர்களை பழிவாங்காமல் விடுவதில்லை.
கீழ்ப்படிந்து நடப்பது  இவர்களுக்கு பிடிக்காது.  அதனால் சுயதொழிலில்தான் பிரகாசிப்பார்கள்.  மற்ற நட்சத்திரங்களில் பிறந்தவர்கள்  போலில்லாமல் உயர்வு தாழ்வை சந்திப்பார்கள்.
ஒருநேரம் முன்னேறி முதலிடத்தில் இருக்கும்போது, அடுத்து என்ன நடந்தது  என்று யூகித்து அறிவதற்குள் கீழே விழுந்து விடுவார்கள்.  மறுபடியும் மேலே போவார்கள்.  அதனால் நிரந்தர ஏழையாகவும் இல்லாமல், நிரந்தர பணக்காரராகவும்  இல்லாமல் இருப்பார்கள்.

அஸ்தம் நட்சத்திரம் முதல் பாதம்: 
இது செவ்வாயின் அம்சம். பொய் புரட்டு இல்லாதவர்கள். வெளிப்படையாகப் பேசுபவர்கள். வீண் ஆடம்பரத்தை விரும்பாதவர்கள். நல்லவர்கள். அஸ்தம் 

அஸ்தம் நட்சத்திரம் இரண்டாம் பாதம்: 
இது சுக்கிரனின் அம்சம். கவர்ச்சியான தோற்றத்தை விரும்புபவர்கள். சுக போகங்களில் நாட்டமுள்ளவர்கள். பயந்த சுபாவம் உள்ளவர்கள். நீதி, நேர்மையில் நாட்டம் மிக்கவர்கள்.

அஸ்தம் நட்சத்திரம் மூன்றாம் பாதம்: 
 இதன் அதிபதி புதன். தெய்வ பக்தியும், நேர்மையான குணமும் உள்ளவர்கள். அறிவுப் பசி உள்ளவர்கள். பேச்சுத் திறமையும், வியாபாரத் திறமையும் உள்ளவர்கள். கலைத்துறையிலும் ஈடுபாடு இருக்கும்.

அஸ்தம் நட்சத்திரம் நான்காம் பாதம்: 
இதன் அதிபதி சந்திரன். மனத்தின் விருப்பப்படி வாழ நினைப்பவர்கள். ஆசை, பாசம், நேசம் மிக்கவர்கள். தயை, இரக்கம் உள்ளவர்கள். பகிர்ந்துண்டு வாழ்வதில் மகிழ்ச்சி பெறுபவர்கள். தலைமை தாங்கும் குணங்கள் உண்டு.

பெயர் நாமம் 

முதல் பாதம்: பு என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது 
2-ம் பாதம்: ஷ என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
 3-ம் பாதம்: நா என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
 4-ம் பாதம்: டா என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது

 நட்சத்திர அதிதேவதையான சாஸ்தாவை வழிபடுவதன் மூலம் இவர்கள்  நன்மைகள் பெறலாம்.

நட்சத்திர அதிதேவதை : ஆதித்யன்
பரிகார தெய்வம்  : பெருமாள்
நட்சத்திரகணம்  : தேவகணம்
விருட்சம்   : வேலமரம்
மிருகம்   : பெண் எருமை
பட்சி   : பருந்து
கோத்திரம்   : அகத்தியர்
அனுகூல, அதிர்ஷ்ட மலர் – அல்லி
அனுகூல தெய்வம் – பார்வதி
அனுகூல, அதிர்ஷ்ட கல் – முத்து
அனுகூல, அதிர்ஷட நிறம் – வெள்ளை
அனுகூல, அதிர்ஷ்ட எண் – 4

நட வேண்டிய மரம் 
1 ம் பாதம் - ஆத்தி
2 ம் பாதம் - தென்னை
3 ம் பாதம் - ஓதியன்
4 ம் பாதம் - புத்திரசீவி
 பிறந்த நட்சத்திரத்திற்கு ஏற்ற மரத்தை நட்டு வைத்தால் நிச்சயம் நன்மை எற்படும்.

தொழில் 
கலைத்துறை, வியாபாரம், பதிப்புத்துறை போன்ற துறைகளில் இவர்கள் பிரகாசிப்பார்கள்.


நட்பு , திருமணம் 


மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம், புனர்பூசம், விசாகம், ரேவதி, உத்திரம், உத்திராடம்.

பகை 
வேதை  (ஆகாத நட்சத்திரம்) – சதயம்
திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் – ரோகிணி, திருவாதிரை, அஸ்தம், சுவாதி, திருவோணம், சதயம்



நோய் 
நட்சத்திரத்திற்கு உரிய விளைவுகள்
மூலவாயு, மூலக்கிராணி , இரத்த மூலம்,வயிற்றுக் கடுப்பு, வெப்பு , புண் ,மலக்கட்டு


அகத்தியர் அருளிய  நட்சத்திர மந்திரம்

ஹரிஹர சகாய ஆனந்த பூஜித லாப ஹஸ்த தேவி சஹாய க்ருபே


குரு மூல மந்திரம் :   
அஸ்தம்  நட்சத்திரம்  - கன்னி  இராசி:
ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் க்ளீம் சௌம் ஸ்ரீ கரூர்தேவ நம:


காயத்திரி மந்திரம் 

ஓம் ப்ரயச்சதாயை வித்மஹே 
ப்ரக்ருப்ணீதாயை தீமஹி 
தன்னோ ஹஸ்தா ப்ரசோதயாத்

மந்திரம் குறைந்தது 9 முறையாவது  அல்லது 108 , அதிக பட்சம் 1008 முறை ஜெபிப்பதன் மூலம் நம் வாழ்வில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் பறந்தோடும்.

No comments:

Post a Comment

sudharsan

96 தத்துவங்கள்

தத்துவங்கள் 96 1. ஆன்ம தத்துவங்கள் -24 2. உடலின் வாசல்கள் -9 3. தாதுக்கள் -7 4. மண்டலங்கள் -3 5. குணங்கள் -3 6. மலங்கள...

ஆன்மீகம்