Saturday, November 9, 2019

பூராடம் நட்சத்திரம்

பூராடம் நட்சத்திரம்

தனுர் ராசியில் அமையும் மற்றொரு நட்சத்திரம் பூராடம். ‘பூர்வாஷாடா’ என்றும் அழைக்கப்படும் பூராடம் இரண்டு நட்சத்திரங்கள் சேர்ந்தது. வான்வெளியில் ஒரு சாய்ந்த கம்பு போல் தோற்றம் தரும். இதனை ‘அர்த்ததாரா’ என்கிறது ஜோதிட சாஸ்திரம். முழுமையான நட்சத்திரமான இது, பெண்குணத்தைக் கொண்ட மனித கணத்தை சேர்ந்தது.

பூராடத்தின் கழுத்தில் நூலாடாது’ என்றொரு வழக்கு சொல் உண்டு. அதாவது, பூராட நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் அதிக காலம் சுமங்கலியாக இருக்கமாட்டார்கள் என்ற பொருளில் அப்படிச் சொல்வார்கள். இதற்கு ஜோதிட சாஸ்திரத்தில் எந்த ஆதாரமும் இல்லை. பூராட நட்சத்திரத்தில் பெண்ணைப் பெற்ற பெற்றோருக்கு பயம் தேவையில்லை. எத்தனையோ பெண்கள் பூராடத்தில் பிறந்து தக்க வயதில் திருமணமாகி, நல்ல குழந்தைச் செல்வங்களுடன் வாழ்ந்துவருவதையும் நாம் காணவே செய்கிறோம்.

பூராடத்தில் பிறந்தவர்கள் நல்ல புத்திமான்கள். பொறுமையாக இருந்து காரியத்தை சாதிக்கும் வல்லமை உள்ளவர்கள். எடுப்பான தோற்றம் உள்ளவர்கள். சாமர்த்தியசாலிகள். எதையும் கூர்ந்து கவனித்து, ஆராய்ந்து முடிவெடுப்பவர்கள். இவர்களால் தோல்வியைத் தாங்க முடியாது. எனவே, தோல்வி நேராதவண்ணம் திட்டமிட்டு செயலாற்றும் இவர்கள், மற்றவருக்கும் வழிகாட்டியாகத் திகழ்வார்கள்.

பூராடம் நட்சத்திரம் முதல் பாதம்: 
பூராடம் முதல் பாத அதிபதி சூரியன். அபார தன்னம்பிக்கை இவர்களின் பலம். எதையும் தான் செய்தால் மட்டுமே சரியாக இருக்கும் என நம்புபவர்கள். அதற்கேற்ப, எதையும் குறையின்றி தவறின்றி பூரணமாகச் செய்து முடிக்க விரும்புவார்கள். உழைப்பாளிகள். நியாயம், நேர்மை உள்ளவர்கள். எனினும், இவர்கள் 8 மணி நேரம் உழைத்தால் 6 மணி நேரத்துக்கான பலனே கிடைக்கும்! கடும் உழைப்பும் போதுமென்ற மனமும் இவர்கள் வாழ்வை வளம் பெறச் செய்யும்.

பூராடம் நட்சத்திரம் இரண்டாம் பாதம்: 
இதன் அதிபதி புதன். இரக்க குணமும், பிறருக்கு உதவும் மனமும் இவர்களின் தனிச்சிறப்பு இறை வழிபாட்டில் ஈடுபாடு உள்ளவர்கள். இனிமையான பேச்சு, கவர்ச்சியான தோற்றம் கொண்டவர்கள். சகல சௌபாக்கியங்களும் இவர்களுக்குக் கிடைக்கும்.

பூராடம் நட்சத்திரம் மூன்றாம் பாதம்: 
இதன் அதிபதி சுக்கிரன். ஆசை, பாசம், கோபதாபம், விரும்பியதை அடைய நினைக்கும் ஆவேசம் – பிடிவாதம் ஆகியவை இவர்களது குணங்கள். சில தருணங்களில் இவர்களின் இந்த இயல்புகளே வெற்றிக்கு அடிகோலும். ஒழுக்கம், நேர்மை, முன்ஜாக்கிரதை மிகுந்தவர்கள். எதிர்மறைச் சிந்தனைகள் மிகும்போது, இவர்களின் இயல்பான தன்னம்பிக்கைக் குறையும்.

பூராடம் நட்சத்திரம் நான்காம் பாதம்: 
இதன் அதிபதி செவ்வாய். கோபமும் ஆவேசமும் உள்ளவர்கள். பிறரை அடக்கி ஆள விரும்புபவர்கள். தலைமைப் பண்பு மிகுந்திருக்கும். எப்போதும் தங்களின் தனித்தன்மையை நிலைநாட்டுவதற்காக, பிறரை எளிதில் தங்களுடன் பழக விடமாட்டார்கள். தங்களின் காரியத்தைச் சாதிக்க எதையும் செய்ய தயங்காதவர்கள். செய்த தவறுகளையே மீண்டும் செய்து அதனால் துன்பத்துக்கு ஆளாவர். பெரியோர்களின் நல்லுரைகளும் உபதேசங்களும் இவர்களுக்குப் பிடிக்காது. தங்களிடம் உள்ள குறைகளைத் தெரிந்துகொண்டு, அவற்றைத் தவிர்த்து வாழ்ந்தால், எல்லா செல்வங்களும் இவர்களை வந்தடையும்.


பெயர் நாமம் 

முதல் பாதம்: பு என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
 2-ம் பாதம்: த என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது 
3-ம் பாதம்: ப என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
 4-ம் பாதம்: ட என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது

 நட்சத்திர அதிதேவதையான வருணனை வழிபடுவதன் மூலம் இவர்களுக்கு வாழ்வில் வசந்தம் உண்டாகும்.

நட்சத்திர அதிதேவதை :- வருணன்
பரிகார தெய்வம்  :- துர்க்கை
நட்சத்திர கணம்  -: மனுஷ கணம்
விருட்சம்   : வஞ்சி
மிருகம்   -: ஆண் குரங்கு
பட்சி   : -கௌதாரி
கோத்திரம்  : புலஸ்தியர்
அனுகூல, அதிர்ஷ்ட மலர் – வெண்தாமரை
அனுகூல தெய்வம் – லக்ஷ்மி
அனுகூல, அதிர்ஷ்ட கல் – வைரம்
அனுகூல, அதிர்ஷட நிறம் – வெண்நீலம்
அனுகூல, அதிர்ஷ்ட எண் – 2


நட வேண்டிய மரம் 

1 ம் பாதம் - வஞ்சி
2 ம் பாதம் - கடற்கொஞ்சி
3 ம் பாதம் - சந்தானம்
4 ம் பாதம் - எலுமிச்சை
பிறந்த நட்சத்திரத்திற்கு ஏற்ற மரத்தை நட்டு வைத்தால் நிச்சயம் நன்மை எற்படும்.

தொழில் 

இவர்களுக்கு விவசாயம், ஏற்றுமதி – இறக்குமதி, போக்குவரத்து போன்ற துறைகள் முன்னேற்றம் தரும்.

பகை 

வேதை  (ஆகாத நட்சத்திரம்) – பூசம்
திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் – பரணி, பூரம், பூசம், அனுஷம், பூராடம், உத்திரட்டாதி


நோய் 

 நட்சத்திரத்திற்கு உரிய விளைவுகள்
நீர் வேட்கை, நீரிழிவு, புண், திமிர்வாதம், மேகவெட்டை சுரம் , அஸ்திசுரம் , வாதம்



அகத்தியர் அருளிய  நட்சத்திர மந்திரம்

அனுதின சேவித அச்சுத வரப்பிரசாத பூராட தேவி சஹாய க்ருபே.

குரு மூல மந்திரம் : 

பூராடம்  நட்சத்திரம்  - தனுசு  இராசி:
 ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் க்ளீம் சௌம் ஸ்ரீ பதஞ்சலி மமுனிவரே நம:


காயத்திரி மந்திரம் 
ஓம் சமுத்ரகாமாயை வித்மஹே 
மஹாபிஜிதாயை தீமஹி 
தன்னோ பூர்வாஷாடா ப்ரசோதயாத்

மந்திரம் குறைந்தது 9 முறையாவது  அல்லது 108 , அதிக பட்சம் 1008 முறை ஜெபிப்பதன் மூலம் நம் வாழ்வில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் பறந்தோடும்.

No comments:

Post a Comment

sudharsan

96 தத்துவங்கள்

தத்துவங்கள் 96 1. ஆன்ம தத்துவங்கள் -24 2. உடலின் வாசல்கள் -9 3. தாதுக்கள் -7 4. மண்டலங்கள் -3 5. குணங்கள் -3 6. மலங்கள...

ஆன்மீகம்