Sunday, November 10, 2019

ஆயில்யம் நட்சத்திரத்திம்

ஆயில்யம் நட்சத்திரத்திம்

பாம்பின் வடிவில் தோற்றமளிக்கும் ஆறு நட்சத்திரக் கூட்டம் ஆஸ்லேஷா அல்லது ஆயில்யம் எனப்படுகிறது. இது கடக ராசி நட்சத்திரம். இதன் தேவதை ‘நாகம்’ என்பது குறிப்பிடத்தக்கது.

திறமையானவர்கள். ஆதிக்கம் செலுத்தக்கூடியவர்கள். மனம் விரும்பியவண்ணம் வாழ நினைப்பவர்கள். தாங்கள் விரும்பியதை அடைய முயல்பவர்கள். கடுமையான சொல் பேசுபவர்கள். மாந்த்ரீகம், தாந்த்ரீகம் போன்றவற்றில் ஈடுபாடு உள்ளவர்கள்.
ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இருவேறு குணம் படைத்தவர்களாக இருப்பார்கள். நல்லவர்களாக இருக்கும் இவர்களிடம் முரட்டுத்தனமும், முன்கோபமும், எடுத்தெரிந்து பேசும் குணமும் இருக்கும். பொதுவாக இவர்கள்  இந்த குணம் பெற்றவர்கள் இல்லை. இவர்கள்  பேச்சு மற்றும் நடந்து கொள்ளும் முறையில் மற்றவர்களுக்கு அபிப்ராயம் மாறிவிடும்.
எப்போதும் முதலிடத்தில்  இருப்பதையே விருப்புவதால் பொது ஜன தொடர்புடைய  துறைகளில் இறங்கினால் பிரகாசிக்கலாம். இந்த  நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இயற்கையாகவே கெட்டிக்காரர்கள், சாமர்த்தியசாலிகள்.
ஏழை பணக்காரன், நல்லவன், கெட்டவன் பாகுபாடில்லாமல் அனைவருடனும் பழகும் தன்மை கொண்டவர்கள். இவர்கள் பலவீனமே தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்வதை விட, தேவைப்படாதவர்களுக்கு உதவி செய்வார்கள். பெரும்பாலும் இவர்களுக்கு  எதிரியாக மாறுவது உற்ற உறவுகளே. கடைசியில்  இவர்களை காப்பாற்றுவது இவர்களுக்கு அறிமுகம்  இல்லாதவர்களே. பொருளாதாரம்  உயர்ந்திருக்கும். குடும்ப வாழ்க்கை சிறந்திருக்கும்.

ஆயில்யம் நட்சத்திரம் முதல் பாதம்:
 இது குருவின் அம்சம். தைரியசாலிகள். புத்திக்கூர்மையும், ஆராய்ச்சி செய்து புதியன கண்டுபிடிப்பதில் ஈடுபாடும் உள்ளவர்கள். கோபமும் இருக்கும்; குணமும் இருக்கும். புகழ்ச்சியை விரும்புபவர்கள்.

ஆயில்யம் நட்சத்திரம் இரண்டாம் பாதம்:
 இதன் அதிபதி சனி பகவான். இந்தப் பாதத்தில் பிறந்தவர்கள் சுகபோகங்களை அனுபவிக்க ஆசைப்படுபவர்கள். அதற்காக எதையும், எப்படியும் பெற முயல்பவர்கள். அநியாயத்தையும் தவறுகளையும் நியாயப்படுத்துவார்கள்.

ஆயில்யம் நட்சத்திரம் மூன்றாம் பாதம்:
 இதன் அதிபதியும் சனி பகவான்தான். இவர்கள் அடிக்கடி கோபப்படுபவர்கள். எந்த வழியிலாவது செல்வத்தை அடைய முயற்சிப்பவர்கள். தங்களைத் தாங்களே புகழ்ந்துகொள்பவர்கள். பிறருடைய அறிவுரையைக் கேட்கமாட்டார்கள்.

ஆயில்யம் நட்சத்திரம் நான்காம் பாதம்:
 இதன் அதிபதி குரு பகவான். இவர்கள் புத்திசாலிகள். ஆனால் சோம்பேறிகள். கடுமையாக உழைக்க விருப்பமில்லாதவர்கள். குழந்தைப் பருவத்தில் கஷ்டப்படுபவர்கள். எதிர்மறையாகச் சிந்திப்பவர்கள்; திட்டமிடாமல் செயல்படுபவர்கள். ஆயில்யம் 4-ம் பாதத்தில் குழந்தைகள் பிறந்தால், பெற்றோர்களுக்கு ஏதாவது கஷ்டம் வரும் என்பதால், இந்த நட்சத்திரத்துக்கு உரிய ‘சந்திர சாந்தி’ எனும் பூஜை செய்வது சம்பிரதாயமான பரிகாரம்.

பெயர் நாமம், 
முதல் பாதம்: டி என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
 2-ம் பாதம்: டு என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
 3-ம் பாதம்: டே என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
 4-ம் பாதம்: டோ என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது 

ஆதிசேஷனை வழிபடுவதால் இவர்களுக்கு நற்பலன்கள் கைகூடும்.

நட்சத்திர அதிதேவதை -: ஆதிசேஷன்
பரிகார தெய்வம்  -: பெருமாள்
நட்சத்திர கணம்    -: ராட்சஸகணம்
விருட்சம்   -: புன்னைமரம்
மிருகம்   -: ஆண் பூனை
பட்சி   -: கிச்சிலி

அனுகூல, அதிர்ஷ்ட மலர் – வெண்காந்தள்
அனுகூல தெய்வம் – மகாவிஷ்ணு, பெருமான்
அனுகூல, அதிர்ஷ்ட கல் – மரகதம்
அனுகூல, அதிர்ஷட நிறம் – பச்சை
அனுகூல, அதிர்ஷ்ட எண் – 9


நட வேண்டிய மரம் 
1 ம் பாதம் - புன்னை
2 ம் பாதம் - முசுக்கட்டை
3 ம் பாதம் - இலந்தை
4 ம் பாதம் - பலா
பிறந்த நட்சத்திரத்திற்கு ஏற்ற மரத்தை நட்டு வைத்தால் நிச்சயம் நன்மை எற்படும்.


நட்பு , திருமணம் 
அசுவினி, மகம், மூலம், உத்திரம், உத்திராடம், மிருகசீரிடம், சித்திரை, புனர்பூசம், அனுஷம், உத்திரட்டாதி.

தொழில் 
விவசாயம் சார்ந்த தொழில்கள், நீதித்துறை, கலைத்துறை போன்றவற்றில் இவர்கள் பிரகாசிப்பார்கள்.

பகை 
வேதை  (ஆகாத நட்சத்திரம்) – மூலம்
திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் – அசுவினி, ஆயில்யம், மகம், மூலம், கேட்டை, ரேவதி


நோய் 
நட்சத்திரத்திற்கு உரிய விளைவுகள்
நீங்காமேகம், முப்பிணி, கரப்பான்,சொறிசிரங்கு, செவிப்புண், சன்னி , வாதம், இசிவு


அகத்தியர் அருளிய  நட்சத்திர மந்திரம்
சீக்ர பலப்ரத பவபய ஹாரிணி சுப ஆயில்ய தேவி சஹாய க்ருபே

குரு மூல மந்திரம் :   

ஆயில்யம் நட்சத்திரம் -  கடக இராசி:
ஓம் ஸ்ரீம் ம் -அம் - உம் ஸ்ரீ அகத்தியப் பெருமானே நம:

காயத்திரி மந்திரம்

ஓம் ஸர்பராஜாய வித்மஹே 
மஹா ரோசனாய தீமஹி 
தன்னோ ஆச்லேஷ ப்ரசோதயாத்

மந்திரம் குறைந்தது 9 முறையாவது  அல்லது 108 , அதிக பட்சம் 1008 முறை ஜெபிப்பதன் மூலம் நம் வாழ்வில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் பறந்தோடும்.



No comments:

Post a Comment

sudharsan

96 தத்துவங்கள்

தத்துவங்கள் 96 1. ஆன்ம தத்துவங்கள் -24 2. உடலின் வாசல்கள் -9 3. தாதுக்கள் -7 4. மண்டலங்கள் -3 5. குணங்கள் -3 6. மலங்கள...

ஆன்மீகம்