Sunday, November 10, 2019

உத்திரட்டாதி நட்சத்திரம்

உத்திரட்டாதி





உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் அனைத்து செயல்களும் முழுமையாக முடிக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தை வலுவாக கொண்டவராய் இருப்பீர்கள். உங்களிடம் ஒப்படைக்கப்படும் எந்த காரியமும் முழுமையாக செய்துவிடுவீர்கள். உடல் ஆரோக்கியத்தை மிகவும் ஆர்வமாக பேணிக்காப்பீர்கள். எந்த சூழ்நிலையையும் சமாளிக்க்கூடிய மனநிலையை வளர்த்துவிரும்புவீர்கள். மற்றவர்களிடம் உண்மையான உழைப்பையும் நேர்மையான செயல்களையும் எதிர்பார்ப்பீர்கள். உங்களது நேர்மையான செயல்பாடுகளால் மற்றவர்களிடம் உங்களுக்கான மதிப்பை அதிகரித்து கொள்வீர்கள். மிகுந்த சுற்றத்தாரை உடையவர், கோள் சொல்லும் குணம் உடையவர், நீதிமான் பிறருக்கு உதவி செய்பவர், வித்தையில் விருப்பம் உடையவர், தாம்பூலப் பிரியர், நாடுகள் சுற்றுபவர், பரந்த காதும், பரந்த மார்பும் உடையவர், புத்திமான், பெண்களுக்கு இனியன், பொய்யன், பிறர் தொழிலை விரும்பி செய்பவர், நல்லவருக்கு நல்லவர். வழக்கை தொடுப்பதில் பலவான்.


ஏழையோ, பணக்காரனோ அனைவரையும சமமாக  நினைப்பார்கள், களங்கம் இல்லாத மனம்,  பிறருக்கு துன்பத்தை தராத குணம் உள்ளவர்கள் . கோபம் வரும்.  அந்த கோபம் உடனே மாறிவிடும். ஒருவர் மீது அன்பு வைத்துவிட்டால் அவர்களுக்காக எதையும் செய்வார்கள். எளிதில் உணர்ச்சி வசப்படுவது இவர்கள் குறை. புண்படுத்தினாலோ , சிறுமைப் படுத்தினாலோ பொறுக்க மாட்டார்கள்.  சிங்கம் போல் சீறுவார்கள். ஒரே சமயத்தில்  பல விஷயங்களில் ஞானத்தையும், அறிவையும் பெற  முடியும்.
பள்ளிப் படிப்பு  குறைவாக இருந்தாலும் அனுபவ படிப்பு  அதிகம். கற்றவர்களைக் கவரும் விதத்தில் இவர்கள்  செய்கை இருக்கும். சுறுசுறுப்பு மிக்கவர்கள் . ஒரு  செயலை துவங்கி விட்டால் முடிக்கும் வரை  விடமாட்டார்கள். இவர்கள் வாழ்க்கை திருப்பமே திருமணத்திற்கு பிறகுதான் வருகிறது.
1. உத்திரட்டாதி முதல் பாதத்தில் பிறந்தவர் கோபி, சஞ்சலமானவர், தருமவான், மயிர் நிறைந்த உடல் உடையவர், சிரேஷ்டன்.
2. உத்திரட்டாதி இரண்டாம் பாததில் பிறந்தவர் ரோஷம் உடையவர், சாது, தரித்திர்ர், நல்ல குணவான், நல்ல நடை உடையவர், அறிவுள்ளவர்.
3. உத்திரட்டாதி மூன்றாம் பாதத்தில் பிறந்தவர் பலமுள்ளவர், துன்மார்க்கர், கடவுள் பக்தி நிறைந்தவர், முன்கோபம் உடையவர், எல்லா நேரத்திலும் இன்பத்தோடு இருப்பவர், கலகம் மூட்டுவர்.


4. உத்திரட்டாதி நான்காம் பாதத்தில் பிறந்தவர் புலவர், சொல்லில் வாட்டம் உடையவர், பேதி உடையவர், குடும்பி, கோபி, கிலேசம் உள்ளவர்.

பெயர்  நாமம்
முதல் பாதம்: து என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது 
2-வது பாதம்: ஸ்ரீ என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது 
3-வது பாதம்: தி என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது 
4-வது பாதம்: த என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது 

இவர்கள் தங்களது நட்சத்திர அதிதேவதையான காமதேனுவை வழிபடுவது நல்லது.

நட்சத்திர அதிதேவதை- : காமதேனு
பரிகார தெய்வம்  : துர்க்கை
நட்சத்திர கணம்  : மனுஷ கணம்
விருட்சம்   : வேம்பு
மிருகம்   : பசு
பட்சி    : கோட்டான்
கோத்திரம்   : அகத்தியர்
அனுகூல, அதிர்ஷ்ட மலர் – கருங்குவளை
அனுகூல தெய்வம் – சனீஸ்வரன்
அனுகூல, அதிர்ஷ்ட கல் – நீலக்கல்
அனுகூல, அதிர்ஷட நிறம் – கருநீலம்
அனுகூல, அதிர்ஷ்ட எண் – 2, 6, 8
நட வேண்டிய மரம் 
1 ம் பாதம் - வேம்பு
2 ம் பாதம் - குல்மோகர்
3 ம் பாதம் - சேராங்கொட்டை
4 ம் பாதம் - செம்மரம்
பிறந்த நட்சத்திரத்திற்கு ஏற்ற மரத்தை நட்டு வைத்தால் நிச்சயம் நன்மை எற்படும்.

தொழில் 
சுரங்கம், இயந்திரங்கள், இரும்புபொருட்கள், உணவு விடுதி போன்றவற்றால் இவர்களின் வாழ்க்கை வளம் பெறும்.

நட்பு , திருமணம் 


 ரோகிணி, அஸ்தம், திருவோணம், சதயம், புனர்பூசம், ரேவதி.

பகை 
வேதை  (ஆகாத நட்சத்திரம்) – பூரம்
திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் – பரணி, பூரம், பூசம், உத்திரட்டாதி, அனுசம், பூராடம்

நோய்  
நட்சத்திரத்திற்கு உரிய விளைவுகள்
வயிற்றுப்புண், பெருநோய், நஞ்சு, சுரம், அம்மை,  சொறி, சிரங்கு, பித்தப்பை, காமாலை

அகத்தியர் அருளிய  நட்சத்திர மந்திரம்

 சங்க பதுமநிதி சகாய ரட்சக உத்திரட்டாதி தேவி சஹாய க்ருபே.

குரு மூல மந்திரம் :
உத்திரட்டாதி நட்சத்திரம்  - மீன  இராசி:
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் றீம் ஐம் க்ளீம் ஓம் சுந்தரானந்தர் என்ற வல்லபச் சித்தரே நம:

காயத்திரி மந்திரம் 

ஓம் அஹிர் புத்ந்யாய வித்மஹே 
ப்ரதிஷ்டாபநாய தீமஹி 
தன்னோ உத்ரப்ப்ரோஷ்டபத ப்ரசோதயாத்

மந்திரம் குறைந்தது 9 முறையாவது  அல்லது 108 , அதிக பட்சம் 1008 முறை ஜெபிப்பதன் மூலம் நம் வாழ்வில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் பறந்தோடும்.

No comments:

Post a Comment

sudharsan

96 தத்துவங்கள்

தத்துவங்கள் 96 1. ஆன்ம தத்துவங்கள் -24 2. உடலின் வாசல்கள் -9 3. தாதுக்கள் -7 4. மண்டலங்கள் -3 5. குணங்கள் -3 6. மலங்கள...

ஆன்மீகம்