Saturday, November 9, 2019

பூரட்டாதி நட்சத்திரம்

பூரட்டாதி


பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களால் மதிக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்துடன் கூடியவராய் இருக்கும் நீங்கள் அழகாக பேசுவீர்கள். சில சமயங்களில் உங்களுடைய சாதுர்யான பேச்சினால் மற்றவர்களிடம் உங்களுக்கான மதிப்பை பெற்றுவிடுவீர்கள். பொருள் சேமிப்பை விரும்புவீர்கள். எதிர்காலத்திற்கான திட்டங்களில் தெளிவாக வரையறுத்துக் கொண்டிருப்பீர்கள். உங்களின் முயற்சி வெற்றியடைய கடுமையான உழைப்பை வெளிப்படுத்த தயங்க மாட்டீர்கள்.
உங்களிடம் ஒப்படைக்கப்படும் செயல்களை முழுமூச்சுடன் செயல்பட்டு செய்து முடிப்பீர்கள். பிறர் சொல்லைப் பொறுக்க மாட்டார், வழக்குரைப்பார், பால், நெய், இவற்றில் விருப்பம் உடையவர், பெண்களுக்கு கவுரவம் வழங்கமாட்டார். கல்விமான், ஆசி கூறுபவர், அழகுடையவர், பக்திமான். மற்றவர்களின் மனதில் இருப்பதை அறிவதில் கெட்டிக்காரர்கள். திடமான மனமும், உடல் வலிமையும் பெற்றிருப்பர். சுக சவுகர்யங்களோடு வாழ்க்கை நடத்த விரும்புவர். மனைவியை மிகவும் நேசிப்பார்கள். பெரிய மனிதர்களிடம் நட்பு பாராட்டுவர். எல்லோரிடமும் சகஜமாகப் பழகுவர். தொழிலில் அக்கறையோடு ஈடுபடுவர்.

சில சமயம் சமாதானப் பிரியர். பலசமயம் சண்டை பிரியர்கள்  இவர்கள். செய்கை எப்போதும் விநோதமாக இருக்கும் . மற்றவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாதவைகளாக இருக்கும்.
கொள்கை பிடிப்பு  உள்ளவர்களாக இருந்தாலும், அடிக்கடி சஞ்சலத்திற்கு  உள்ளாவதுண்டு.  சம்பிரதாயங்களில்  அதிக நாட்டம்  இருக்காது, தங்களுக்கு வேண்டியவர்களுக்காக எதையும்  செய்யும் மனப்போக்கு உள்ளவர்கள்.
இவர்கள் வாழ்க்கையில்  வசதி வாய்ப்பு எப்படியும் வந்துவிடும். தேவைக்கு  அதிகமாக தேடி அலைகிற குணம் இல்லை.  இவர்கள் பிறவி புத்திசாலியாக இருப்பதால் எந்த வேலையில் இருந்தாலும் பிரகாசிக்க கூடியவர்கள்.
இந்த  நட்சத்திரத்திரகாரர்ளுக்கு  குழந்தை பிறந்த  பிறகு, அப்பாவின் அந்தஸ்து அதிகரிக்கும். இவர்கள்  இளமைக் காலம் தொட்டே வளர்ச்சிப்  பாதையில் பயணிப்பார்கள். 25 முதல் 30 வயது  வரை குறிப்பிட்டு சொல்லும் அளவிற்கு முன்னேற்றம்  இருக்கும். பின் 40 வயதுக்கு மேல் பொன்னான  காலமாக அமையும். குடும்ப வாழ்க்கையில் அன்பு, அரவணைப்பும் இருக்கும். உதாரண தம்பதிகளாக இருப்பார்கள்.
1. பூரட்டாதி முதல் பாதத்தில் பிறந்தவர் பிராமணர், அகன்ற முகத்தை உடையவர், பலவான், மனைவிமேல் பிரியம் உடையவர், சண்டை செய்வோன், நல்லுணர்ச்சி உடையவர், சுகவான்.
2. பூரட்டாதி இரண்டாம் பாததில் பிறந்தவர் கடவுள்மந்திரம் அறிந்தவர், உண்மை தளராதவர், யாரிடமும் சென்று வணங்கிக் காரியத்தை முடிப்பவர்.
3. பூரட்டாதி மூன்றாம் பாதத்தில் பிறந்தவர் சந்தோஷம் உள்ளவர், பொறுமை, நல்ல நடத்தையுள்ளவர், புலவர், அயலாளிகளின் வீட்டுப் போஜனத்தில் விருப்பம் உடையவர்.




4. பூரட்டாதி நான்காம் பாதத்தில் பிறந்தவர் குணவான். சத்தியவான், குள்ளன், நட்புள்ளவர், நல்ல தொழில் உள்ளவர், சீமான்.

பெயர் நாமம்
முதல் பாதம்: ஸே என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது 
2-வது பாதம்: ஸோ என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது 
3-வது பாதம்: த என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது 
4-வது பாதம்: தி என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது 

இவர்கள் குபேரனை வழிபடுவதன் மூலம் நன்மைகள் பெருகும்.

நட்சத்திர அதிதேவதை : காமதேனு
பரிகார தெய்வம்  : துர்க்கை
நட்சத்திர குணம்  : மனுஷ குணம்
விருட்சம்   : தேமா
மிருகம்   : ஆண் சிங்கம்
பட்சி    : உள்ளான்
கோத்திரம்   : அகத்தியர்
அனுகூல, அதிர்ஷ்ட மலர் – முல்லை
அனுகூல தெய்வம் – பிரம்மா
அனுகூல, அதிர்ஷ்ட கல் – புஷ்பராகம்
அனுகூல, அதிர்ஷட நிறம் – மஞ்சள்
அனுகூல, அதிர்ஷ்ட எண் – 7

நட வேண்டிய மரம் 
1 ம் பாதம் - தேமா
2 ம் பாதம் - குங்கிலியம்
3 ம் பாதம் - சுந்தரவேம்பு
4 ம் பாதம் - கன்னிமந்தாரை
பிறந்த நட்சத்திரத்திற்கு ஏற்ற மரத்தை நட்டு வைத்தால் நிச்சயம் நன்மை எற்படும்

தொழில் 
கல்வித்துறையில் ஆசிரியராகவும், வங்கி போன்ற நிதித்துறை சார்ந்த பணிகளில் ஈடுபடுவது சிறந்தது.

நட்பு , திருமணம் 
 பூசம், அனுஷம், உத்திரம், அசுவினி, மகம், மூலம், உத்திராடம், மிருகசீரிடம், அவிட்டம், சதயம்.

பகை 
வேதை  (ஆகாத நட்சத்திரம்) – உத்திரம்
திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் – கார்த்திகை, புனர்பூசம், உத்திரம், விசாகம், உத்திராடம், பூரட்டாதி

நோய் 
நட்சத்திரத்திற்கு உரிய விளைவுகள்
ஆண்மைக்குறைவு, சீதக்கழிச்சல், குருதிக் கழிச்சல் , கடுப்பு, சூடு, பெரும்பாடு,வாந்தி, வெள்ளைப்படுதல்


அகத்தியர் அருளிய  நட்சத்திர மந்திரம்

நவநிதி தாயினி நமசிவாயினி பூரட்டாதி தேவி சஹாய க்ருபே.

குரு மூல மந்திரம் :
 பூரட்டாதி நட்சத்திரம் 1,2,3ம் பாதம்  - கும்ப  இராசி:
 ஓம் ஸ்ரீம் ஸம் அம் உம் ஐம் க்ளீம் சௌம் ஸ்ரீ கமலமுனிவரே நம:
                  
 பூரட்டாதி நட்சத்திரம் 4ம் பாதம்  - மீன  இராசி:
ஓம் க்ளீம் ஐம் சௌம் ஸ்ரீம் றீம் ஹ்ரீம் ஸ்ரீ சிவப்பிரபாகர சித்தயோகி பாம்பாட்டி சித்தரே நம:

காயத்திரி மந்திரம் 

ஓம் தேஜஸ்கராய வித்மஹே 
அஜஏகபாதாய தீமஹி 
தன்னோ பூர்வப்ரோஷ்டபத ப்ரசோதயாத்

மந்திரம் குறைந்தது 9 முறையாவது  அல்லது 108 , அதிக பட்சம் 1008 முறை ஜெபிப்பதன் மூலம் நம் வாழ்வில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் பறந்தோடும்.

No comments:

Post a Comment

sudharsan

96 தத்துவங்கள்

தத்துவங்கள் 96 1. ஆன்ம தத்துவங்கள் -24 2. உடலின் வாசல்கள் -9 3. தாதுக்கள் -7 4. மண்டலங்கள் -3 5. குணங்கள் -3 6. மலங்கள...

ஆன்மீகம்