Sunday, November 10, 2019

மூலம் நட்சத்திரம்

மூலம் நட்சத்திரம்

அமர்ந்திருக்கும் சிங்கத்தைப் போல் தோற்றமளிக்கும் ஐந்து நட்சத்திரங்களின் கூட்டம் இது. தனுசு ராசியில் பூரண நட்சத்திரமாக இது அமைகிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களிடம் சிங்கத்தின் இயல்புகள் இருக்கும். ‘ஆண் மூலம் அரசாளும்; பெண் மூலம் நிர்மூலம்’ என்பர். ஆனால், ஏற்கெனவே சொன்னதுபோல், இதற்கெல்லாம் ஜோதிட சாஸ்திரத்தில் ஆதாரம் இல்லை.

அதேபோன்று, ‘மூலத்து மாமியார் மூலையிலே’ என்றும் சொல்வழக்கு உண்டு. அதாவது, மூல நட்சத்திரத்தில் பிறந்த ஆணையோ, பெண்ணையோ மணந்தால், மாமனார் உயிர்நீத்து விடுவார்; அதனால், மாமியார் விதவையாகி, மூலையில் உட்கார்ந்து விடுவார் எனும் பொருளில் அப்படிச் சொல்வார்கள். ஆனால், இதுவும் மூடநம்பிக்கையே! மாமனாரின் மரணத்தை நிர்ணயிப்பது அவரது ஆயுட்பலமும், அவர் மனைவியின் மாங்கல்ய பலமும், அவரது மூத்த பிள்ளையின் ஜாதகத்தில் தெரியும் கர்ம பலனும்தான் என்று சாஸ்திரம் தெளிவாகக் கூறுகிறது. இதில் மருமகனையோ மருமகளையோ மூல நக்ஷத்திரத்தை வைத்துக் காரணம் காட்டுவதும் பயப்படுவதும் அறியாமை.

தனுசு ராசியில் குருவை அதிபதியாகக் கொண்டவர்கள். அறிவையும் புகழையும் பெற பெரிதும் முயற்சிப்பார்கள். கொள்கைப் பிடிப்பு உள்ளவர்கள். நல்லவர்கள்; வல்லவர்கள். அதேநேரம் கர்வமும் மிகுந்திருக்கும். போராடுவதற்குத் தயங்காதவர்கள். இந்த நட்சத்திரத்துக்கு உரிய பறவை சக்ரவாக பக்ஷி. ஆதலால், இவர்களுக்கு இசையிலும் மற்ற கலைகளிலும் நாட்டம் இருக்கும். ‘யானைக்கு வாலாக இருப்பதைவிடவும் ஈக்கு தலையாக இருப்பது மேல்’ எனும் தத்துவத்தில் நம்பிக்கை கொண்டவர்கள்.

ஜாதக அம்சங்கள் உயர்வாக இருந்தால், பிறருக்கு உதவுவதில் நாட்டமும் தர்ம சிந்தனையும் அதிகம் இருக்கும். உணர்ச்சிவசப்படுதலும், கோபமும் உண்டு. ஆழ்ந்த தெய்வ பக்தியும், குடும்பத்தில் பாசமும் இவர்களது சிறப்பான குணங்கள். இந்த நட்சத்திரக் காரர்களுக்கு கேது தசை முதல் தசையாக அமையும்.

மூலம் நட்சத்திரம் முதல் பாதம்: 
செவ்வாய் இதன் அதிபதி. சுதந்திரமானவர்கள். நினைத்ததைச் செய்து முடிக்க விரும்புபவர்கள். பாசமுள்ளவர்கள். வாக்கைக் காப்பாற்றுபவர்கள். பிடிவாதமும் கோபமும் உள்ளவர்கள். உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள்.

மூலம் நட்சத்திரம் இரண்டாம் பாதம்: 
இதன் அதிபதி சுக்கிரன். எல்லாவற்றுக்கும் ஆசைப்படுபவர்கள். கௌரவத்தை விரும்புபவர்கள். வீடு- வாகன யோகம் உள்ளவர்கள். குடும்பத்தில் பற்றுள்ளவர்கள். சொன்னதைச் செய்பவர்கள்; செய்ய முடிந்ததை மட்டுமே சொல்பவர்கள். ஓவியம், இசையில் ஈடுபாடு கொண்டவர்கள்.

மூலம் நட்சத்திரம் மூன்றாம் பாதம்: 
இதன் அதிபதி புதன். அறிவாளி, திறமைசாலிகள். ஒன்றுக்கு மேற்பட்ட தொழில் செய்து பொருளீட்டுபவர்கள். தெய்வ பக்தியும் ஆன்மிகத் தேடலும் கொண்டவர்கள். நட்பு, காதல், பாசம் போன்ற சிறப்பான குணங்கள் இவர்களிடம் இருக்கும். எதற்கும் அஞ்சாத போராளிகள். கொள்கைப்பிடிப்பு உள்ளவர்கள்; சாதனையாளர்கள்; கலைகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர்கள். புதுமை விரும்பிகள்; நியாய உணர்வு உள்ளவர்கள். கோபமும் உண்டு, குணமும் உண்டு. பேச்சு, எழுத்தில் திறமை மிகுந்தவர்கள்.

மூலம் நட்சத்திரம் நான்காம் பாதம்:
 இதன் அதிபதி சந்திரன். தலைமை தாங்கும் குணம் உண்டு. உயர் பதவி மற்றும் பொருளீட்டுவதில் ஆசை இருக்கும். அனைவரையும் நேசிப்பவர்கள். நல்ல நண்பராகத் திகழும் இவர்கள் நேர்மையான எதிரியாகவும் திகழ்வார்கள். பிடிவாதமும் கோபமும் உடையவர்கள். வாதத்திறமையும் கடமை உணர்வும் மிகுந்தவர்கள்.


பெயர் நாமம் 

முதல் பாதம்: எ என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
 2-ம் பாதம்: யோ என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
 3-ம் பாதம்: ப என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது 
4-ம் பாதம்: பி என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது 

ருத்திரனையும், பிரஜாபதியையும் இவர்கள் வழிபடுவது நல்லது.

நட்சத்திர அதிதேவதை : சிவன்
பரிகார தெய்வம்  : விநாயகர்
நட்சத்திர கணம்  : ராட்ஷச கணம்
விருட்சம்   : மா மரம்
மிருகம்   : பெண் நாய்
பட்சி   : செம்போத்து
கோத்திரம்  : அகத்தியர்
ஆயில்யம், மகம், கேட்டை, மூலம், ரேவதி
அனுகூல, அதிர்ஷ்ட மலர் – செவ்வல்லி
அனுகூல தெய்வம் – இந்திரன்
அனுகூல, அதிர்ஷ்ட கல் – வைடூரியம்
அனுகூல, அதிர்ஷட நிறம் – கரும்பச்சை
அனுகூல, அதிர்ஷ்ட எண் – 1

நட வேண்டிய மரம் 

1 ம் பாதம் - மராமரம்
2 ம் பாதம் - பெரு
3 ம் பாதம் - செண்பக மரம்
4 ம் பாதம் - ஆச்சா
பிறந்த நட்சத்திரத்திற்கு ஏற்ற மரத்தை நட்டு வைத்தால் நிச்சயம் நன்மை எற்படும்.

தொழில்

பார்மசி, விவசாயம் சார்ந்த வியாபாரம் (காய்கறி, பழம், தானியங்கள்), கல்வித்துறை சார்ந்த பணி, ஆன்மிகம் சார்ந்த பணிகளில் இவர்கள் ஈடுபடுவது சிறந்தது.


நட்பு , திருமணம் 


ரோகிணி, அஸ்தம், திருவோணம், சுவாதி, சதயம், அனுஷம், உத்திரட்டாதி, ரேவதி

பகை 

வேதை  (ஆகாத நட்சத்திரம்) – ஆயில்யம் திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் – அசுவினி,

நோய் 

நட்சத்திரத்திற்கு உரிய விளைவுகள்
 ஆண்மைக்குறைவு, சீதக்கழிச்சல், குருதிக் கழிச்சல் கடுப்பு , சூடு ,பெரும்பாடு, வாந்தி, வெள்ளை

அகத்தியர் அருளிய  நட்சத்திர மந்திரம்

சங்கர தேசிக சாந்த பூரண அன்ன மூல தேவி சஹாய க்ருபே.

குரு மூல மந்திரம் :      

மூலம்  நட்சத்திரம்  - தனுசு  இராசி:
ஓம் ஐம் க்ளீம் சௌம் ஸ்ரீம் ஹ்ரீம் ஹ்ராங் ருங் - குருங் ஸ்ரீ பதஞ்சலி மகரிஷியே நம:


காயத்திரி மந்திரம்
 

ஓம் ப்ராஜாதிபாயை வித்மஹே
 மஹப்ராஜையை தீமஹி 
தன்னோ மூலாப் ப்ரசோதயாத்

மந்திரம் குறைந்தது 9 முறையாவது  அல்லது 108 , அதிக பட்சம் 1008 முறை ஜெபிப்பதன் மூலம் நம் வாழ்வில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் பறந்தோடும்.

No comments:

Post a Comment

sudharsan

96 தத்துவங்கள்

தத்துவங்கள் 96 1. ஆன்ம தத்துவங்கள் -24 2. உடலின் வாசல்கள் -9 3. தாதுக்கள் -7 4. மண்டலங்கள் -3 5. குணங்கள் -3 6. மலங்கள...

ஆன்மீகம்