Sunday, November 10, 2019

பூரம் நட்சத்திரத்திம்

பூரம் நட்சத்திரத்திம் 

இரண்டு கண்களின் கருமணிகள்போல் அமைந்த இரண்டு நட்சத்திரங்கள் இதில் அடங்கும். இதுவும் சூரியன் ஆட்சி செய்யும் சிம்ம ராசியில் அடங்கும்.




நுண்கலைகளான ஓவியம், இசை, நடனம், நாடக நடிப்பு போன்றவற்றில் ஈடுபாடும் திறமையும் இருக்கும். கலைக்காக எதையும் செய்யத் துணிந்தவர்கள். பேராசை, புகழாசை, பொருளாசை கொண்டவர்கள். ஆடை அணிகலன்கள் அணிவதில் விருப்பம் கொண்டவர்கள். அழகை ஆராதிப்பவர்கள். தங்கள் புகழையே பேசிக்கொண்டிருப்பவர்கள். தான தர்மங்கள் செய்து அதனால் புகழும் பெருமையும் அடைய ஆசையுள்ளவர்கள்.

கட்டுப்பாடற்ற சுதந்திரப் பிரியர்கள். கட்டுமஸ்தான உடல் வாகை பெற்றவர்கள். சற்று குட்டையான உருவம் கொண்டவர்கள். தனித்திறமை மிக்கவர்கள். ஏதாவது ஒரு துறையில் நிபுணர்களாக இருப்பார்கள். இனிமையான பேச்சும், இளமையான தோற்றமும் உடையவர்கள். இவர்கள் யாருக்கு கீழும் வேலை செய்ய விரும்பாதவர்கள். ஏதாவது உத்தியோக வாய்ப்பு  அமைந்தால் கூட உயர் அதிகாரிகளோடு ஒத்துப் போவதில்லை.
தகுதியும், திறமையும்  இருந்தாலும் கூட சரியான வாய்ப்புகள் இவர்களுக்கு கிடைப்பதில்லை. 22, 27, 30, 32, 37 வயதுகளில், இவர்கள் தொழில் ரீதியில் மாற்றங்கள் ஏற்படும். பெரும்பாலும் இந்த  நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 45 வயதுக்கு மேல்தான் நன்மைகள் வருகிறது. முன்யோசனை உள்ளவர்கள். தாய் தந்தையர் தனக்கு சொத்து சேர்த்து வைக்கவில்லையே என்று குறைப்பட்டுக் கொள்வார்களாம். காலம் கடந்த திருமணம் அல்லது பிரச்சனைகள் தரும் மனைவி அமையும்.


பூரம் நட்சத்திரம் முதல் பாதம்:
 இதன் அதிபதி சூரியன். திறமைசாலிகள். நல்ல நினைவாற்றல் உள்ளவர்கள். பேச்சுத்திறமை மிக்கவர்கள். எதையும் எதிர்த்துப் போராடி, எப்படியாவது வெற்றியடைய வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்கள். நண்பர்களை நேசிப்பவர்கள். உடல் நலனில் கவனம் செலுத்தமாட்டார்கள்.

பூரம் நட்சத்திரம் இரண்டாம் பாதம்: 
இதன் அதிபதி புதன். நல்ல கல்வியும் திறமையும் இருந்தாலும், அடிக்கடி தோல்வியைச் சந்திப்பார்கள். தனக்கொரு நியாயம், பிறருக்கொரு நியாயம் என்ற பாகுபாடு கொண்டவர்கள். தோல்வியைக் கண்டு துவண்டுவிடுவார்கள். பிறர் உதவியை எப்போதும் எதிர்பார்த்து, பிறரைச் சார்ந்து வாழ நினைப்பவர்கள். தெய்வ பக்தி உள்ளவர்கள்.

பூரம் நட்சத்திரம் மூன்றாம் பாதம்:
 சுக்கிரன் இதன் அதிபதி. ஆசாபாசம் மிக்கவர்கள். ஓவியம், சிற்பம், புகைப்படம் எடுப்பது போன்றவற்றில் ஈடுபாடு இருக்கும். பேராசை மிக்கவர்கள். பிறரைப் பற்றிக் கவலைப்படாமல் தன் சுகத்தையும், முன்னேற்றத்தையும் பற்றி மட்டுமே சிந்திப்பவர்கள்.

பூரம் நட்சத்திரம் நான்காம் பாதம்:
 செவ்வாய் இதன் அதிபதி. அவசரப்பட்டு முடிவெடுப்பவர்கள். பணத்தைச் சேர்த்த வேகத்தில் செலவழித்து விட்டுக் கஷ்டப்படுபவர்கள். திட்டமிட்டுச் செயலாற்றும் திறமை இருக்காது. தெரியாமல் தவறுகள் செய்துவிட்டு, அதனால் பெயரும் புகழும் பாதிக்கும் சூழ்நிலை இவர்களுக்கு ஏற்படும். செவ்வாய்க் கிழமைகளில் பக்தியுடன் முருகனை வழிபட்டால், துயரங்கள் நீங்கும்.

பெயர் நமன் 

முதல் பாதம்: மோ என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
 2-ம் பாதம்: ட என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
 3-ம் பாதம்: டி என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது 
4-ம் பாதம்: டு என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது 

நட்சத்திர அதிதேவதையான அன்னை பார்வதி தேவியை இவர்கள் வழிபடுவதன் மூலம் நன்மைகள் அதிகரிக்கும்.

நட்சத்திர தேவதை :- பார்வதி
பரிகார தெய்வம்   :- துர்க்கை
நட்சத்திர குணம் -: பலா
விருட்சம்  :- அலரி 
மிருகம்  :- பெண் எலி
பட்சி   :- பெண் கழுகு
கோத்திரம்  :- அகத்தியர்

அனுகூல, அதிர்ஷ்ட மலர் – செந்தாமரை
அனுகூல தெய்வம் – சிவபெருமான்
அனுகூல, அதிர்ஷ்ட கல் – வைரம்
அனுகூல, அதிர்ஷட நிறம் – வெண்நீலம்
அனுகூல, அதிர்ஷ்ட எண் – 11


நட வேண்டிய மரம் 

1 ம் பாதம் - பலா

2 ம் பாதம் - வாகை
3 ம் பாதம் - ருத்திராட்சம்
4 ம் பாதம் - பலா

 பிறந்த நட்சத்திரத்திற்கு ஏற்ற மரத்தை நட்டு வைத்தால் நிச்சயம் நன்மை எற்படும்

தொழில் 
அரசுத்துறை, தொழிற்சாலைகள், உணவு விடுதி போன்ற தொழில்கள் இவர்களுக்கு வளர்ச்சியை தரும


நட்பு , திருமணம் 
உத்திரம், உத்திராடம், மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம், புனர்பூசம், விசாகம், அசுவினி, மகம், மூலம்


பகை 
வேதை  (ஆகாத நட்சத்திரம்) – பூராடம்
திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் – பரணி, பூசம், பூரம், அனுஷம், பூராடம், உத்திரட்டாதி

நோய் 
நட்சத்திரத்திற்கு உரிய விளைவுகள்
அண்டவாதம், முக்குற்றம், குடைச்சல், வயிற்று நோய், கீழ் வாதம் மார்பு வலி,படை



அகத்தியர் அருளிய  நட்சத்திர மந்திரம்


துர்கதி நாசினி தூபப் ப்ரகாசினி ஜெய பூரம் தேவி சஹாய க்ருபே

குரு மூல மந்திரம் :

 பூரம் நட்சத்திரம் - சிம்ம இராசி:
 ஓம் ஸ்ரீம் - ஸ்ரீம் -ஸ்ரீம் ஹ்ரீம் - ஹ்ரீம் ஸ்ரீ ராமதேவரே நம:


காயத்திரி மந்திரம் 

ஓம் அரியம்நாய வித்மஹே 
பசுதேஹாய தீமஹி 
தன்னோ பூர்வபால்குநீ ப்ரசோதயாத்


மந்திரம் குறைந்தது 9 முறையாவது  அல்லது 108 , அதிக பட்சம் 1008 முறை ஜெபிப்பதன் மூலம் நம் வாழ்வில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் பறந்தோடும்.

No comments:

Post a Comment

sudharsan

96 தத்துவங்கள்

தத்துவங்கள் 96 1. ஆன்ம தத்துவங்கள் -24 2. உடலின் வாசல்கள் -9 3. தாதுக்கள் -7 4. மண்டலங்கள் -3 5. குணங்கள் -3 6. மலங்கள...

ஆன்மீகம்