Sunday, November 10, 2019

உத்திரம் நட்சத்திரத்திம்

உத்திரம் நட்சத்திரத்திம்

இது இரட்டை நட்சத்திரம். பூர நட்சத்திரம் போலவே இரு கண் விழிகள்போல் அமைந்தவை. நேர் கோட்டில் அமையாமல், சற்று ஏற்றத்தாழ்வுகளுடன் அமைந்தவை. இதன் முதல் பாதம் சிம்ம ராசியிலும் 2, 3, 4 பாதங்கள் கன்னி ராசியிலும் அமையும். முதல் பாதத்திற்கு ராசிநாதன் சூரியன். மற்ற மூன்று பாதங்களின் ராசிநாதன் புதன்.

திறமைசாலிகள். கல்வியறிவும், சமயோசித புத்தியும் கொண்டவர்கள். ஆசாபாசங்கள் அதிகமிருந்தாலும், பிறருக்கு உதவ வேண்டும் என்ற தர்ம சிந்தனை இருக்கும். கோபம் இருந்தாலும், தன்னடக்கமும் இருக்கும். ‘தான் நினைத்ததுதான் சரி’ என்ற பிடிவாத குணமும் உண்டு. தெய்வபக்தி, நேர்மை உள்ளவர்கள்.

வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். செய்யும் காரியங்கள் அனைத்திலும், உண்மையாகவும், ஈடுபாட்டோடும் செய்வார்கள். மிகவும் சாதுர்யம் மிக்கவர்கள். பெரும்பாலும் பொதுஜன தொடர்புடைய
துறைகளிலேயே பிரகாசிப்பார்கள். ஒருமுறை  முடிவு   செய்தால் அந்த முடிவை மாற்றிக்  கொள்ளும் மனப்போக்கு இல்லாதவர்கள். சுயமுயற்சியில் தனம்  தேடும் ஆற்றல் மிக்கவர்கள்.
முற்பகுதி வாழ்க்கையில்  அதிக முன்னேற்றம் இருக்காது. 38 வயதுக்கு மேல்தான் சகல சம்பத்துக்களும் சேரும். திருமண வாழ்க்கை நல்ல விதமாகவே  அமையும். தைரியமானவர்கள், கர்வம் நிறைந்தவர்கள். தாய் அன்பு மிக்கவர்கள். இவர்கள் செய்யும் காரியங்களுக்கு சரியான காரணம் இருக்கும்.

உத்திரம் நட்சத்திரம் முதல் பாதம்: 
இந்தப் பாதத்தின் அதிபதி குருபகவான். அறிவாற்றல், திறமை, உழைப்பு, நியாய உணர்வு மிக்கவர்கள். சாஸ்திரங்களில் ஈடுபாடும், நம்பிக்கையும் இருக்கும். குருவை நாடி ஞானம் பெற நினைப்பவர்கள். உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள். சூது, கபடம், பழிவாங்கும் வெறி போன்ற தீய குணங்கள் இருக்காது. அன்பும், பண்பும், சகோதர பாசமும் உள்ளவர்கள்.

உத்திரம் நட்சத்திரம் இரண்டாம் பாதம்:
 இதனை ஆட்சி செய்பவர் சனி. பொருளும், புகழும் சேர்ப்பதில் ஈடுபாடு மிக்கவர்கள். தலைமைக் குணங்கள் மேலோங்கி நிற்கும். சுயநலம் மிக்கவர்கள். அவசரக்காரர்கள். ஈட்டிய பொருளை இழந்து தவிப்பவர்கள்.

உத்திரம் நட்சத்திரம் மூன்றாம் பாதம்: 
இதற்கும் அதிபதி சனியே. 2-ம் பாதத்துக்கு உரியவர்களின் இயல்பும் குணங்களும் இவர்களுக்கும் இருக்கும். கர்வம், ஆணவம், ‘தான்’ என்ற அகம்பாவம் மிக்கவர்கள். எனவே, பலரால் விரும்பப்படாதவர்கள். வெற்றிக்காக எதையும் செய்பவர்கள்.

உத்திரம் நட்சத்திரம் நான்காம் பாதம்: 
இதன் அதிபதி குரு. நிதானமானவர்கள். அடக்கமானவர்கள். வளைந்து கொடுத்து வாழத் தெரிந்தவர்கள். கல்வியில் சிறந்தவர்கள். திறமைசாலிகள். நல்ல உழைப்பாளிகள். தர்மசிந்தனை உள்ளவர்கள்.

பெயர் நாமம் 

முதல் பாதம்: டே என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
 2-ம் பாதம்: டோ என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
 3-ம் பாதம்: ப என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது 
4-ம் பாதம்: பி என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது 

இவர்கள் சூரியனை வழிபடுவது நல்லது.

நட்சத்திர தேவதை -: சூரியன்
பரிகார தெய்வம்   :- சிவன்
நட்சத்திர குணம் :- மனுஷ குணம்
விருட்சம்  :- அலரி
மிருகம்  :- ஆண் எருது
பட்சி   :- மரம்கொத்தி
கோத்திரம்  :- வசிஷ்டர்
அனுகூல, அதிர்ஷ்ட மலர் – செந்தாமரை
அனுகூல தெய்வம் – லக்ஷமி
அனுகூல, அதிர்ஷ்ட கல் – வைரம்
அனுகூல, அதிர்ஷட நிறம் – சிகப்பு
அனுகூல, அதிர்ஷ்ட எண் – 12

நட வேண்டிய மரம் 
1 ம் பாதம் - ஆலசி
2 ம் பாதம் - வாதநாராயணன்
3 ம் பாதம் - எட்டி
4 ம் பாதம் - புங்கமரம்
 பிறந்த நட்சத்திரத்திற்கு ஏற்ற மரத்தை நட்டு வைத்தால் நிச்சயம் நன்மை எற்படும்.

தொழில் 
அரசுத் துறை, கடல் சார்ந்த தொழில்கள், ஷேர் மார்க்கெட் போன்ற துறைகளில் இவர்களின் பணி சிறப்பாக அமையும்.

நட்பு , திருமணம் 
ரோகிணி, அஸ்தம், திருவோணம், சுவாதி, சதயம், பூசம், அனுஷம், உத்திரட்டாதி, மகம், மூலம்.

பகை 
வேதை  (ஆகாத நட்சத்திரம்) – உத்திராட்டாதி
திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் – கார்த்திகை, புனர்பூசம், உத்திரம், விசாகம், உத்திராடம், பூரட்டாதி

நோய் 
நட்சத்திரத்திற்கு உரிய விளைவுகள்
நஞ்சு, சுரமூர்ச்சை, வெள்ளை வெட்டை, குன்மம், நரம்புச் சிலந்தி



அகத்தியர் அருளிய  நட்சத்திர மந்திரம்

ஞானமய மோஹினி சாஸ்திர ஸ்வரூபிணி உத்திர தேவி சஹாய க்ருபே

குரு மூல மந்திரம்

உத்திரம் நட்சத்திரம் 1ம் பாதம் - சிம்ம இராசி:
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் -றீம் - ஸ்ரீ இராம தேவரே நம:

உத்திரம் நட்சத்திரம் 2ம் பாதம் - கன்னி  இராசி:
ஓம் ஐம் கிளீம் ஸ்ரீம் ஸ்ரீம் ஸ்ரீ கரூர் சித்தரே நம:

உத்திரம் நட்சத்திரம் 3ம் பாதம் - கன்னி  இராசி:
ஐம் ஸ்ரீம் ஹ்ரீம் ரீம் கருவூராரே நம:

உத்திரம் நட்சத்திரம் 4ம் பாதம் - கன்னி  இராசி:
ஓம் ஹ்ரீம் ஐயுஞ் சவ்வும் க்லீயும் கருவூர் சித்தரே நம:


காயத்திரி மந்திரம்

ஓம் மஹாபகாயை வித்மஹே 
மஹாச்ரேஷ்டாயை தீமஹி 
தன்னோ உத்ரபால்குநீ ப்ரசோதயாத்

மந்திரம் குறைந்தது 9 முறையாவது  அல்லது 108 , அதிக பட்சம் 1008 முறை ஜெபிப்பதன் மூலம் நம் வாழ்வில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் பறந்தோடும்.

No comments:

Post a Comment

sudharsan

96 தத்துவங்கள்

தத்துவங்கள் 96 1. ஆன்ம தத்துவங்கள் -24 2. உடலின் வாசல்கள் -9 3. தாதுக்கள் -7 4. மண்டலங்கள் -3 5. குணங்கள் -3 6. மலங்கள...

ஆன்மீகம்