சித்திரை நட்சத்திரத்ம்

இது ஒற்றை நட்சத்திரம். ஒரு வட்டத்தின் நடுப்புள்ளி போன்று தோற்றம் அளிப்பது. வெண்மையான வண்ணத்துடன் மிக அழகாகத் தோற்றம் அளிப்பதால், ‘சௌம்ய தாரா’ என்று இந்த நட்சத்திரம் அழைக்கப்படுகிறது. எல்லா சுப காரியங்களுக்கும் உகந்த நட்சத்திரம் இது.
ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் ஒரு பழமொழியைச் சொல்லி பயமுறுத்தும் சம்பிரதாயம் நம் நாட்டில் உண்டு. ஆனால், அந்தப் பழமொழிகளின் கருத்துக்கு ஆதாரம் கிடையாது. சித்திரை நட்சத்திரம் குறித்தும், ‘சித்திரை அப்பன் தெருவிலே’ எனும் பழமொழி உண்டு. இதனால் பயந்து, தகப்பனைக் காப்பாற்ற சித்திரையில் பிறக்கும் பிள்ளையை தத்துக் கொடுக்கும் பழக்கமும் தமிழகத்தில் குறிப்பிட்ட சமூகத்தவரில் காணப்படுகிறது. இது அறியாமை என்பதே ஜோதிட வல்லுநர்களின் கூற்று.

பிறந்த குழந்தை எந்த நட்சத்திரமாக இருந்தாலும், நூற்றில் இரண்டு தகப்பன்மார்கள் வெவ்வேறு காரணங்களுக்காக குடும்பத்தைப் பிரிந்து செல்ல நேரிடலாம். இது அந்தத் தகப்பனின் ஜாதகத்தைப் பொறுத்தது. ஆகவே, சித்திரையில் பிறக்கும் எல்லா குழந்தைகளின் தந்தைமார்களுக்கும் இப்படித்தான் நேரிடும் என்று பயமுறுத்துவது மூடத்தனம்.
சித்திரையின் முதல் இரண்டு பாதங்கள் கன்யா ராசியிலும், அடுத்த இரண்டு பாதங்கள் துலா ராசியிலும் அமையும்.
அழகிய தோற்றம், அன்போடு பழகும் தன்மை, பேச்சுத் திறமை, ஆடம்பரத்தில் பிரியம், தற்புகழ்ச்சியில் ஆர்வம், பொருள்களில் பற்று ஆகியவை இந்த நட்சத்திரக்காரர்களின்

சித்திரை நட்சத்திரம் முதல் பாதம்:
இதன் அதிபதி சூரியன். சிறந்த கல்வியறிவு, திறமை, கடமையுணர்வு, கடும் உழைப்பு இவர்களது இயல்புகள். துணிச்சல் குறைவானவர்கள், முடிவெடுப்பதில் குழப்பம் உள்ளவர்கள். மற்றவர்கள் வழிகாட்டுதல் இருந்தால் இவர்கள் ஜெயிப்பார்கள்.
சித்திரை நட்சத்திரம் இரண்டாம் பாதம்:
இதன் அதிபதி புதன். தெய்வபக்தி, நல்லொழுக்கம், நீதி-நேர்மை உள்ளவர்கள். தன்னம்பிக்கை குறைவு. குழப்பமான சிந்தனையால், இவர்கள் எடுத்துக்கொள்ளும் காரியங்கள் தாமதமாகும்.
சித்திரை நட்சத்திரம் மூன்றாம் பாதம்:
இதன் ஆட்சி கிரகம் சுக்கிரன். ஆசாபாசம் மிக்கவர்கள். பிறருக்கு உதவும் சுபாவம் மிகுதியாகக் காணப்படும். நல்லதையே நினைத்து, நல்லதையே செய்ய விரும்புபவர்கள். குடும்பத்தை நேசிப்பவர்கள்.
சித்திரை நட்சத்திரம் நான்காம் பாதம்:
இது செவ்வாயின் ஆட்சிக்கு உட்பட்டது. இவர்கள் தைரியசாலிகளாகவும், நல்ல பேச்சாளர்களாகவும் திகழ்வர். வெற்றி அடையும் வெறியும் உண்டு. தலைமை தாங்கும் இயல்புகள் உண்டு. நன்மை தரும் செயல்கள் அல்லது தீமை பயக்கும் செயல்கள் எதுவானாலும் எடுத்துக்கொண்ட காரியத்தைப் பிடிவாதமாக நடத்தி முடிப்பவர்கள். கோபமும் ஆவேசமும் உள்ளவர்கள்.
பெயர் நாமம்
முதல் பாதம்: பே என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
2-ம் பாதம்: போ என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
3-ம் பாதம்: ர என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
4-ம் பாதம்: ரி என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
நட்சத்திர அதிதேவதையான துவஷ்டாவை வழிபடுவது இவர்களுக்கு நல்லது.
நட்சத்திர அதிதேவதை : விஸ்வகர்மா
பரிகார தெய்வம் : முருகன்
நட்சத்திரகணம் : ராட்சஸகணம்
விருட்சம் : வில்வமரம்
மிருகம் : ஆண்புலி
பட்சி : மரங்கொத்தி
கோத்திரம் : அகத்தியர்

அனுகூல தெய்வம் – சுப்பிரமணியர்
அனுகூல, அதிர்ஷ்ட கல் – பவழம்
அனுகூல, அதிர்ஷட நிறம் – சிகப்பு
அனுகூல, அதிர்ஷ்ட எண் – 5
நட வேண்டிய மரம்
1 ம் பாதம் - வில்வம்
2 ம் பாதம் - புரசு
3 ம் பாதம் - கொடுக்காபுளி
4 ம் பாதம் - தங்க அரளி
தொழில்
நீதித்துறை, மருத்துவம், அறிவியல் சார்ந்த துறைகளில் இவர்களின் பணி வளர்ச்சி தரும்.
நட்பு , திருமணம்
சுவாதி, சதயம், பூசம், அனுஷம், உத்திரட்டாதி, மகம், மூலம், உத்திரம், உத்திராடம், அஸ்தம், திருவோணம்.
சுவாதி, சதயம், பூசம், அனுஷம், உத்திரட்டாதி, மகம், மூலம், உத்திரம், உத்திராடம், அஸ்தம், திருவோணம்.
பகை
வேதை (ஆகாத நட்சத்திரம்) – மிருகசீரிஷம், அவிட்டம்திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் – மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம்
நட்சத்திரத்திற்கு உரிய விளைவுகள்
மேகம், மந்தம், குன்மம், கண் இருள், சுக்கில நட்டம், உடல்கடுப்பு
அகத்தியர் அருளிய நட்சத்திர மந்திரம்
குரு மூல மந்திரம் :
சித்திரை நட்சத்திரம் 1,2ம் பாதம் - கன்னி இராசி
ஸ்ரீம் ஸம் அம் ஐம் க்ளீம் ஸ்ரீ கரூர் சித்தரே நம:
சித்திரை நட்சத்திரம் 3,4ம் பாதம் - துலாம் இராசி:
ஸ்ரீம் -ஹ்ரீம் ஸ்ரீம் றீம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீ குதம்பை சித்தரே நம:
காயத்திரி மந்திரம்
ஓம் மஹா த்வஷ்டாயை வித்மஹே
ப்ரஜாரூபாயை தீமஹி
தன்னோ சைத்ரா ப்ரசோதயாத்
மந்திரம் குறைந்தது 9 முறையாவது அல்லது 108 , அதிக பட்சம் 1008 முறை ஜெபிப்பதன் மூலம் நம் வாழ்வில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் பறந்தோடும்.
No comments:
Post a Comment