Sunday, November 10, 2019

சுவாதி நட்சத்திரம்

சுவாதி நட்சத்திரம்

தேவ கணத்தைச் சேர்ந்தது இந்த நட்சத்திரம். மாதுளை முத்து போன்று சிவந்து காணப்படும். இது ஒரு வைரக்கல் நடுவில் ஜொலிப்பது போன்று தோற்றமளிக்கும். இதுவும் ஒற்றை நட்சத்திரமே! பௌர்ணமி தினங்களில் ஆக்ஸிஜன் எடுக்க கடலின் மேற்பரப்புக்குச் சிப்பிகள் வரும்போது, விண்ணிலுள்ள பனித் துளிகள் அதில் விழுந்து முத்தாகும் நிகழ்வு, சுவாதி நட்சத்திரத்து நாளில்தான் சாத்தியமாகும் என்று ரஸகுளிகை சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

அழகும், தெய்வ பக்தியும் மிகுந்தவர்கள். கூரிய அறிவு, ஞாபக சக்தி, கலைகளில் ஆர்வம், தன்னம்பிக்கை, தாராள மனப்பான்மை, இரக்க சிந்தனை கொண்டவர்கள். ஓரளவு தர்ம நியாயத்தைக் கடைப்பிடிப்பவர்கள். அதேநேரம் கோபம், பாசம், சுயநலமும் இவர்களிடம் உண்டு. இந்த நட்சத்திரத்தின் நான்கு பாதங்களும் துலா ராசியில் அமையும். துலாக்கோல் போல் நல்லது- கெட்டதை சீர்தூக்கிப் பார்த்து, தீயதை அகற்றி நல்லதைக் கடைப்பிடித்து, வாழ்வில் உயர்பவர்கள்.

சுவாதி நட்சத்திரம் முதல் பாதம்: 
இதன் ஆட்சிக் கிரகம் குரு. புத்திசாலிகள். தைரியசாலிகள், நியாயவாதிகள், பேச்சுத்திறன் உடையவர்கள், பல மொழிகளைக் கற்பார்கள். கவிதைத் திறமை இருக்கும். அழகை ஆராதிப்பவர்கள். திட்டமிட்டுச் செயல்படுபவர்கள்.




சுவாதி நட்சத்திரம் இரண்டாம் பாதம்: 



இதனை ஆட்சி செய்பவர் சனி. இந்த பாதத்தைச் சேர்ந்தவர்கள் கடும் உழைப்பால் பொருளீட்டுவர். அதிகாரம் செய்வார்கள். சுயநலம் கொண்டவர்கள். சாதிக்கத் துடிப்பவர்கள். சொத்து சேர்க்கவும் விரும்புவர். தலைமைப் பண்பு மிகுந்தவர்கள். நல்ல நண்பர்களாகத் திகழ்வர்.





சுவாதி நட்சத்திரம் மூன்றாம் பாதம்: 
இதற்கும் அதிபதி சனி பகவான்தான். இந்த பாதத்தைச் சேர்ந்தவர்களுக்கு கர்வம் இருக்கும். ஆழமானவர்கள்; கோபமும் மூர்க்கத்தனமும் உண்டு. அவசரமாகச் சிந்தித்து, அவசரமாக செயல்பட்டுத் தவறிழைப்பார்கள். உணர்ச்சிவசப்படுபவர்கள். ஆனால் பாசமும், கடமை உணர்ச்சியும் மிக்கவர்கள்.

சுவாதி நட்சத்திரம் நான்காம் பாதம்: 
இதன் அதிபதி குரு. நல்ல நடத்தை, புகழைத் தேடும் உத்வேகம் உண்டு. மற்றவர்கள் மெச்ச வாழ்வார்கள். நட்பு, உறவுகளிடம் பற்றும் பாசமும் மிக்கவர்கள். ஆடம்பரத்தை விரும்புவார்கள். தெய்வ பக்தி, கடமையுணர்வு மிக்கவர்கள். உழைத்து உயர்பவர்கள்.

பெயர் நாமம் 

முதல் பாதம்: ரு என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
 2-ம் பாதம்: ரே என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
 3-ம் பாதம்: ரோ என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
 4-ம் பாதம்: தா என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது

 நட்சத்திர அதிதேவதையான வாயு பகவானை வழிபடுவது இவர்களுக்கு நல்லது.


நட்சத்திர அதிதேவதை : வாயு பகவான்
பரிகார தெய்வம்    :- மஹாலக்ஷ்மி, துர்க்கை
நட்சத்திர கணம்    -: தேவ கணம்
விருட்சம்    :- மருதம் (பாலில்லா மரம்)
மிருகம்    :- ஆண் எருமை
பட்சி    :- தேனீ
கோத்திரம்   -: அகத்தியர்

அனுகூல, அதிர்ஷ்ட மலர் – மாந்தாரை
அனுகூல தெய்வம் – காளி மாதா
அனுகூல, அதிர்ஷ்ட கல் – கோமேதகம்
அனுகூல, அதிர்ஷட நிறம் – கருமஞ்சள்
அனுகூல, அதிர்ஷ்ட எண் – 6


நட வேண்டிய  மரம் 

1 ம் பாதம் - மருது
2 ம் பாதம் - புளி
3 ம் பாதம் - மஞ்சள் கொன்றை
4 ம் பாதம் - கொழுக்கட்டை மந்தாரை
பிறந்த நட்சத்திரத்திற்கு ஏற்ற மரத்தை நட்டு வைத்தால் நிச்சயம் நன்மை எற்படும்.


நட்பு , திருமணம் 
புனர்பூசம், விசாகம், அஸ்தம், திருவோணம், சித்திரை, அவிட்டம், ரேவதி




தொழில் 
அரசு நிர்வாகம், காவல் துறை போன்றவற்றில் உயர் பதவி வகிக்கும் யோகம் உண்டு. ஒருசிலர் அலங்காரப் பொருட்கள் விற்பனையிலும், உணவு விடுதி நடத்துவதிலும் ஈடுபட்டிருப்பார்கள் இதனால் இவர்கள் முன்னேற்றம் அடைவர்.

பகை 

வேதை  (ஆகாத நட்சத்திரம்) – ரோகிணி
திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் – ரோகிணி, 
சுவாதி, திருவாதிரை, சதயம், திருவோணம், உத்திரம்


நோய் 

நட்சத்திரத்திற்கு உரிய விளைவுகள்
நீரிழிவு, வெள்ளை, மயக்கம், இருமல், நீர் வேட்கை , பெருநோய் புழுநோய்,    வயிற்று நோய்





அகத்தியர் அருளிய  நட்சத்திர மந்திரம்

சக்ரிணி ராக விவர்திநி ஞானமய சுவாதி தேவி சஹாய க்ருபே

குரு மூல மந்திரம் : 

சுவாதி  நட்சத்திரம்  - துலாம்  இராசி:
ஓம் க்ளீம் ஸ்ரீம் றீம் ஸ்ரீ குதம்பை சித்தரே நம:

காயத்திரி மந்திரம் 

ஓம் காமசாராயை வித்மஹே 
மகாநிஷ்டாயை தீமஹி 
தன்னோ சுவாதி ப்ரசோதயாத்


மந்திரம் குறைந்தது 9 முறையாவது  அல்லது 108 , அதிக பட்சம் 1008 முறை ஜெபிப்பதன் மூலம் நம் வாழ்வில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் பறந்தோடும்.





No comments:

Post a Comment

sudharsan

96 தத்துவங்கள்

தத்துவங்கள் 96 1. ஆன்ம தத்துவங்கள் -24 2. உடலின் வாசல்கள் -9 3. தாதுக்கள் -7 4. மண்டலங்கள் -3 5. குணங்கள் -3 6. மலங்கள...

ஆன்மீகம்