Sunday, November 10, 2019

விசாகம் நட்சத்திரம்

17. விசாகம் நட்சத்திரம்



இது முருகப்பெருமானின் அவதார நட்சத்திரம். குயவனின் மண்பாண்ட சக்கரத்தைப் போல் அமைந்துள்ள ஐந்து நட்சத்திரங்களின் கூட்டம் இது. விசாகத்தின் முதல் மூன்று பாதங்கள் துலா ராசியிலும், 4-ம் பாதம் விருச்சிக ராசியிலும் அமையும்.

அறிவாளிகள், தெய்வபக்தி உள்ளவர்கள், கடமை உணர்வுடன் செயலாற்றுபவர்கள், ஆடம்பரப் பிரியர்கள், பணம் சேர்ப்பதில் ஆவல் கொண்டவர்கள், உணவு மற்றும் சிற்றின்பங்களில் ஈடுபாடு கொண்டவர்கள், மனித நேயமும், நியாய உணர்வும் உள்ளவர்கள், பேச்சுத் திறமை கொண்டவர்கள்.


விசாகம் நட்சத்திரம் முதல் பாதம்: 

இதன் அதிபதி செவ்வாய். இந்த பாதத்தில் பிறந்தவர்கள் சுகவாசிகளாகத் திகழ்வர். சொத்து சுகம் மட்டுமின்றி, நட்பையும் சுற்றத்தையும் விரும்புவார்கள். கோபம், எளிதில் உணர்ச்சிவசப்படுதல், பிடிவாதம், பிறரை நம்பாமை ஆகிய குணங்களும் இவர்களிடம் உண்டு.

விசாகம் நட்சத்திரம் இரண்டாம் பாதம்:

 இதன் அதிபதி சுக்கிரன். இந்தப் பாதத்தில் பிறந்தவர்கள் சுகவாசிகள். சுயநலம் மிகுந்தவர்கள். வாழ்க்கையை ரசித்து வாழ்வர். உணர்ச்சிபூர்வமாகத் திகழும் இவர்கள், நல்ல அறிவாளிகள். தன்னம்பிக்கையும், கலைகளில் ஈடுபாடும் உண்டு.

விசாகம் நட்சத்திரம் மூன்றாம் பாதம்: 

இதன் அதிபதி புதன். இதில் பிறந்தவர்கள் பக்திமான்கள். கணிதம், விஞ்ஞானத்தில் ஈடுபாடு கொண்டவர்கள். திட்டமிட்டு வாழ்பவர்கள். பிறரை நம்பமாட்டார்கள். உயர் பட்டங்கள், பதவிகளைப் பெறுவார்கள். புகழுடன் வாழ்வார்கள்.

விசாகம் நட்சத்திரம் நான்காம் பாதம்:

 இதன் அதிபதி சந்திரன். இதில் பிறந்தவர்கள் பொருளீட்டுவதில் வல்லவர்கள். தாராளமாகச் செலவு செய்வார்கள். குடும்பப் பாசம் மிக்கவர்கள். சுகமான, ஆடம்பரமான, கௌரவமான வாழ்க்கை வாழ விரும்புபவர்கள். தாராள மனப்பான்மை இருக்கும். பொதுவாழ்வில் ஈடுபாடு இருக்கும். புகழை நாடுபவர்கள்.

பெயர் நாமம் 

முதல் பாதம்: தி என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
 2-ம் பாதம்: து என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
 3-ம் பாதம்: தே என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
 4-ம் பாதம்: தோ என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது

 நட்சத்திர அதிதேவதையான சுப்பிரமணியரை வழிபடுவது இவர்களுக்கு நல்லது.



அனுகூல, அதிர்ஷ்ட மலர் – முல்லை
அனுகூல தெய்வம் – பிரம்மன்
அனுகூல, அதிர்ஷ்ட கல் – கனக புஷ்பராகம்
அனுகூல, அதிர்ஷட நிறம் – மஞ்சள்
அனுகூல, அதிர்ஷ்ட எண் – 7


நட வேண்டிய மரம் 

1 ம் பாதம் - விளா
2 ம் பாதம் - சிம்சுபா
3 ம் பாதம் - பூவன்
4 ம் பாதம் - தூங்குமூஞ்சி
பிறந்த நட்சத்திரத்திற்கு ஏற்ற மரத்தை நட்டு வைத்தால் நிச்சயம் நன்மை எற்படும்.

தொழில் 

இவர்கள் பெரும்பாலும் சொந்தமாக தொழில் செய்வதையே விரும்புவார்கள். மற்றபடி கல்வித்துறை, பதிப்பகம் போன்ற துறைகளில் இவர்கள் ஈடுபடுவது சிறந்தது.


நட்பு , திருமணம் 
பூசம், அனுஷம், உத்திரட்டாதி, அசுவினி, மகம், மூலம், உத்திரம், உத்திராடம், சித்திரை, அவிட்டம், சுவாதி, சதயம்.

பகை 
வேதை  (ஆகாத நட்சத்திரம்) – கார்த்திகை, புனர்பூசம், உத்திரம், விசாகம், உத்திராடம், பூரட்டாதி
திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் – கார்த்திகை, புனர்பூசம், உத்திரம், விசாகம், உத்திராடம், பூரட்டாதி


நோய் 

நட்சத்திரத்திற்கு உரிய விளைவுகள்
இருமல், இரைப்பு, சுவையின்மை, வெறி,  பித்தம், நீரிழிவு, வெள்ளை பெரும்பாடு.



அகத்தியர் அருளிய  நட்சத்திர மந்திரம்

குங்கும அர்ச்சித அனுதின சேவித விசாக தேவி சஹாய க்ருபே

குரு மூல மந்திரம் :

 விசாகம்  நட்சத்திரம் 1,2,3ம் பாதம்  - துலாம்  இராசி:
 ஓம் ஸ்ரீம் ருங் அங் சிங் ஹ்ரீம் ஸ்ரீ குதம்பை சித்தரே நம:


விசாகம்  நட்சத்திரம் 4ம் பாதம்  - விருச்சிக  இராசி:
ஓம் ஹ்ரீம் ஹ்ராம் ஐம் க்ளீம் ஸ்ரீம் ஸ்ரீ வான்மீகரே நம:


காயத்திரி மந்திரம் 

ஓம் இந்த்ராக்நௌச வித்மஹே 
மஹாச்ரேஷ்ட்யைச தீமஹி 
தன்னோ விசாகா ப்ரசோதயாத்

மந்திரம் குறைந்தது 9 முறையாவது  அல்லது 108 , அதிக பட்சம் 1008 முறை ஜெபிப்பதன் மூலம் நம் வாழ்வில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் பறந்தோடும்.


No comments:

Post a Comment

sudharsan

96 தத்துவங்கள்

தத்துவங்கள் 96 1. ஆன்ம தத்துவங்கள் -24 2. உடலின் வாசல்கள் -9 3. தாதுக்கள் -7 4. மண்டலங்கள் -3 5. குணங்கள் -3 6. மலங்கள...

ஆன்மீகம்