Monday, October 21, 2019

தேங்காய் சகுனம்

தேங்காய் சகுனம் 

ஜோதிடத்தில், சகுன ஜோதிடம் என்று தனி உட்பிரிவு உள்ளது. பஞ்ச பட்சி சாஸ்திரம், சகுன ஜோதிடம் ஆகியவற்றில் சிறந்து விளங்கியவர்கள் கடந்த காலங்களில் வாழ்ந்தனர். இதில் சகுன ஜோதிடத்தில் தேங்காய் வருகிறது.
சகுன ஜோதிடத்திற்கு பல உதாரணங்கள் கூறலாம். மாடு வைத்துள்ளவர்கள் தங்கள் மாட்டின் கண்ணில் நீர் வடிந்தால், அந்தக் குடும்பத்தின் தலைவருக்கு கடுமையான உடல் உபாதை அல்லது பெரும் நஷ்டம், பொருள் இழப்பு ஏற்படும். புதிய முதலீடுகளை அவர் தவிர்க்க வேண்டும்.
சகுன ஜோதிடத்தைப் பொறுத்தவரை தேங்காய் என்பது ஒரு மனிதனாகவே கருதப்படுகிறது. தெங்கு+காய்=தேங்காய். நம்மை நாமே இறைவனுக்கு அர்ப்பணிப்பதன் அர்த்தமாகவே கோயிலில் தேங்காய் உடைக்கிறோம்.
இந்தத் தேங்காய் உடையும் விதத்தில் சகுன ஜோதிடம் பல விடயங்களை உணர்த்துகிறது. தேங்காயின் ஓடு மட்டும் தனியாக வந்தால், சம்பந்தப்பட்டவருக்கு உடனடியாக பொருள் நஷ்டம் உண்டு என்று அர்த்தம்.
ஒருவேளை தேங்காய் அழுகியிருந்தால், சம்பந்தப்பட்டவருக்கு கடுமையான உடல்நலக் குறைவு, நோய் ஏற்படும். குறிப்பாக தேங்காய் அழுகியுள்ள சதவீதத்திற்கு ஏற்ப அவரது உடலில் பாதிப்பு ஏற்படும் என சகுன ஜோதிடம் கூறுகிறது.
இதேபோல் அழுகியுள்ள பகுதியின் சதவீதத்திற்கு ஏற்ப பாதிப்பு ஏற்படும் நாள் தொலைவில் உள்ளதா? அருகில் உள்ளதா? என்பதையும் தெரிந்து கொள்ளலாம். தேங்காய் அழுகினால் ஒரு சிலருக்கு உடனடி மரணம் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
இதுபோன்ற சம்பவங்கள் நிகழும் போது சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவக் காப்பீடு எடுத்துக் கொள்வது நல்லது. அதுமட்டுமின்றி உடல் நலத்திலும், உணவுக் கட்டுப்பாட்டிலும் கவனம் செலுத்த வேண்டும். பயணங்களை தவிர்க்கலாம். தவிர்க்க முடியாத நிலையில் மிகவும் பாதுகாப்பான வழியில் பயணம் செய்யலாம்.
உதாரணமாக நீண்ட தூர பயணத்திற்கு இரு, நான்கு சக்கர வாகனங்களைப் பயன்படுத்துவதை விட, அரசுப் பேருந்து அல்லது ரயிலில் பயணம் மேற்கொள்ளலாம். உறவினர்கள் மோதல், பங்காளிப் பிரச்சனையும் ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனம் தேவை.

ஒரு சிலர் ஊரை விட்டுச் செல்ல வேண்டிய நிலையும் ஏற்படும்.பொதுவாக சனி ஓரையில் தேங்காய் அழுகியிருப்பது தெரியவந்தால் சம்பந்தப்பட்டவர் ஊர் விட்டு ஊர் செல்ல நேரிடும்.
அதற்கு விநாயகருக்கு 108 தேங்காய் உடைத்து பூஜை செய்யுங்கள் நல்லது நடக்கும் .

இறைவனுக்கு உடைக்கப்படும் தேங்காய் அழுகியிருந்தால் முதலில் உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். மருத்துவக் காப்பீடு எடுத்துக் கொள்வது நல்லது. அதற்கு அடுத்தபடியாக பொருள் இழப்புகள் ஏற்படுவதை சமயோசிதமாக தடுக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
திருட்டு பயமும் உள்ளதால் விலையுயர்ந்த பொருட்களை வீட்டில் வைப்பதற்கு பதிலாக வங்கி பெட்டகத்தில் பத்திரப்படுத்துவது நல்லது.
  • தேங்காய் சரிபாதியாக உடைந்தால் குடும்பத்தில் இருக்கும் மனக்கசப்புகள் நீங்கி குடும்ப ஒற்றுமை ஏற்படும்.
  • தேங்காயின் மேல்பகுதி அதாவது கண்பாகம் உள்ள பகுதி பெரிதாகவும், அடிப்பகுதி சிறியதாகவும் உடைந்தால் இல்லத்தில் செல்வம் பெருகும்.

  • கண்பகுதி சிறியதாகவும் கீழ்ப்பகுதி பெரியதாகவும் உடைந்தால் குடும்பத்தில் உள்ள பிரச்னைக்கு உரிய விஷயங்கள் தீர்ந்து இல்லத்தில் அமைதி பெருகும்.
  • தேங்காய் உடைக்கும்போது ஒரு சிறிய பாகம் அதனுள் விழுந்தால், அதிர்ஷ்ட வாய்ப்புகள் நிச்சயம் உருவாகும்.

  • சகுனத்துக்கு உடைக்கும் தேங்காயின் உட்புறம் பூ இருப்பின் நினைத்த காரியம் கண்டிப்பாக நிறைவேறும்.

  • தேங்காய் நீளவாக்கில் இரண்டாக உடைந்தால் பிரச்னைகள் உருவாகும்.
  • சிதறு தேங்காய் உடைக்கும்பொழுது சகுனம் பார்க்க வேண்டியதில்லை.



No comments:

Post a Comment

sudharsan

96 தத்துவங்கள்

தத்துவங்கள் 96 1. ஆன்ம தத்துவங்கள் -24 2. உடலின் வாசல்கள் -9 3. தாதுக்கள் -7 4. மண்டலங்கள் -3 5. குணங்கள் -3 6. மலங்கள...

ஆன்மீகம்