Sunday, November 10, 2019

உத்திராடம் நட்சத்திரம்

உத்திராடம் நட்சத்திரம்

நான்கு கால்களைக் கொண்ட கட்டிலின் இரண்டு கால் தடத்தில் அமைந்திருக்கும் இரண்டு நட்சத்திரங்கள் உத்திராடத்தில் அடங்கும். இதை ‘முக்கால் நட்சத்திரம்’ என்கிறது ஜோதிடம். நல்ல காரியங்களும் சுபகாரியங்களும் செய்ய உகந்தது என்பதால், ‘மங்கள விண்மீன்’ என்றும் இதைச் சிறப்பிப்பார்கள். இதன் முதல் பாதம் தனுசிலும் மற்ற மூன்றும் மகர ராசியிலும் அமைகின்றன.

அறிவுப்பசி, ஆசாரம், தெய்வ பக்தி, தர்ம சிந்தனை, நேர்மை, வாய்மை மிகுந்தவர்கள். மனத்தில் பட்டதை சட்டென்று வெளிப்படுத்துவதால், சில தருணங்களில் பலருக்கும் வேண்டாதவர்கள் ஆகிவிடுவர்.நல்ல தோற்றம், பேச்சுத் திறமை, வெற்றியைத் தேடிச் செல்லும் முயற்சி ஆகியவை இவர்களின் பொதுவான குணங்கள்.

உத்திராடம் நட்சத்திரம் ( முதல் பாதம் )
இதன் அதிபதி குரு. இவர்களிடம் சாஸ்திர அறிவு மிகுந்திருக்கும். நல்லதைப் பிறருக்குச் சொல்வதில் வல்லவர்கள்- நல்ல வழிகாட்டிகள். குரு பக்தி கொண்டவர்கள். பூஜை புனஸ்காரத்தில் ஈடுபாடு கொண்டவர்கள்.

உத்திராடம் நட்சத்திரம் (இரண்டாம் பாதம்)
 இதன் அதிபதி சனி. ஆசை மிகுந்தவர்கள். ஊதாரித்தனமாக பணத்தைச் செலவழிப்பவர்கள். பிறர் கஷ்டங்களை உணராதவர்கள். அதிகாரம் செலுத்துவதில் விருப்பம் மிக்கவர்கள். சாப்பாட்டுப் பிரியர்கள். பழி வாங்கும் இயல்புடையவர்கள். தோல்வியைத் தாங்க முடியாதவர்கள்.

உத்திராடம் நட்சத்திரம் (மூன்றாம் பாதம்)
 இதற்கும் சனிபகவானே அதிபதி. 2-ம் பாதத்துக்கு உரியவர்களின் குணங்கள் அனைத்தும் இவர்களுக்கும் உண்டு. தீவிர பக்தி செய்து, உலகியல் பலன்களையும் ஐஸ்வர்யங்களையும் அடைய விரும்புபவர்கள். பிடிவாதக்காரர்கள். பிறரை மதிக்கத் தெரியாதவர்கள். தங்களது இயல்புகளை மாற்றிக்கொண்டு வாழ்ந்தால் வாழ்க்கை சிறக்கும்.

உத்திராடம் நட்சத்திரம் (நான்காம் பாதம்)
 இதன் அதிபதி குரு. கருணையும், தர்ம சிந்தனையும் இவர்களது இயல்பு. துணிச்சல் மிக்கவர்கள். தர்மத்தைக் கடைப்பிடிப்பதில் தீவிரமானவர்கள். தீமையை எதிர்த்துப் போராடுபவர்கள். பிறர் நலம் கருதி வாழ்பவர்கள்.

பெயர் நாமம் 

முதல் பாதம்: பே என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
 2-ம் பாதம்: போ என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
 3-ம் பாதம்: ஜ என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
 4-ம் பாதம்: ஜி என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது

 இவர்கள் விநாயகரை வழிபடுவதன் மூலம் வாழ்வில் வளம் பெறலாம்.

நட்சத்திர அதிதேவதை :   கணபதி
பரிகார தெய்வம்               : துர்க்கை
நட்சத்திர கணம்               : மனுஷ கணம்
விருட்சம்                              :  பலா மரம்
மிருகம்                                  : ஆண் கீரி
பட்சி                                         : வலியான்
கோத்திரம்                            : வசிஷ்டர்
அனுகூல, அதிர்ஷ்ட மலர் – தாமரை
அனுகூல தெய்வம் – சிவபெருமான்
அனுகூல, அதிர்ஷ்ட கல் – மாணிக்கம்
அனுகூல, அதிர்ஷட நிறம் – பச்சை
அனுகூல, அதிர்ஷ்ட எண் – 3


நட வேண்டிய மரம் 

1 ம் பாதம் - பலா
2 ம் பாதம் - கடுக்காய்
3 ம் பாதம் - சாரப்பருப்பு
4 ம் பாதம் - தாளை
பிறந்த நட்சத்திரத்திற்கு ஏற்ற மரத்தை நட்டு வைத்தால் நிச்சயம் நன்மை எற்படும்.

தொழில் 

மருத்துவம், கல்வி, வங்கி, ஆன்மிகம் சார்ந்த துறைகளில் இவர்கள் ஈடுபட்டால், வளமான வாழ்க்கை அமையும்.


நட்பு , திருமணம் 
ரோகிணி, அஸ்தம், திருவோணம், சுவாதி, சதயம், அனுஷம், உத்திரட்டாதி, அசுவினி, மூலம்.

பகை 
வேதை  (ஆகாத நட்சத்திரம்) – பூரம்
திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் – கார்த்திகை, புனர்பூசம், உத்திரம், விசாகம், உத்திராடம், பூரட்டாதி

நோய் 
நட்சத்திரத்திற்கு உரிய விளைவுகள்
 வயிற்றுப்புழு, உடல்வலி, படர்தாமரை, வயிற்று வலி, கரப்பான், புற்று

அகத்தியர் அருளிய  நட்சத்திர மந்திரம்

 சோகவிநாசினி ரத்னாலங்கார உத்திராட தேவி சஹாய க்ருபே.


குரு மூல மந்திரம் :   
உத்திராடம்  நட்சத்திரம்  1ம் பாதம் - தனுசு  இராசி:
ஓம் ஸ்ரீம் க்ளீம் ஐம் ஸம் அம் ஓம் ஜூம் ஸ்ரீ கொங்கணச் சித்தரே நம:

 உத்திராடம்  நட்சத்திரம்  2,3,4ம் பாதம் - மகர  இராசி:
ஓம் ஐம் க்ளீம் ஸ்ரீம் ஸ்ரீம் றீம் ஹ்ரீம் ஸ்ரீ கொங்கணச் சித்தரே நம:


காயத்திரி மந்திரம் 

ஓம் விஸ்வேதேவாய வித்மஹே 
மஹா ஷாடாய தீமஹி 
தன்னோ உத்ராஷாடா ப்ரசோதயாத்

மந்திரம் குறைந்தது 9 முறையாவது  அல்லது 108 , அதிக பட்சம் 1008 முறை ஜெபிப்பதன் மூலம் நம் வாழ்வில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் பறந்தோடும்.

No comments:

Post a Comment

sudharsan

96 தத்துவங்கள்

தத்துவங்கள் 96 1. ஆன்ம தத்துவங்கள் -24 2. உடலின் வாசல்கள் -9 3. தாதுக்கள் -7 4. மண்டலங்கள் -3 5. குணங்கள் -3 6. மலங்கள...

ஆன்மீகம்