Thursday, November 7, 2019

மிருகசீரிடம் நட்சத்திரம்

மிருகசீரிடம் நட்சத்திரம் 

மிருகசீரிடம் நட்சத்திரத்திலும் பிறந்தவர்கள் நல்ல அறிவுபூர்வமான பேச்சுத்திறமையை உடையவராய் இருப்பீர்கள். எந்த நேரத்திலும் சுறுசுறுப்பான மனநிலையைக் கொண்டிருப்பீர்கள். சேமிப்பில் ஆர்வம் கொண்டிருப்பீர்கள். திறமையான பேச்சால் சிறந்த நிர்வாகத்திறமை கொண்டவராய் விளங்குவீர்கள். திறமையாக மற்றவர்களிடம் வேலை வாங்குவதில் சமர்த்தராய் இருப்பீர்கள். காலையில் நீராடுவதில் விருப்பம் உடையவர்.

 பரந்த கண்களையுடையவர். மயிரில் அழகுடையவர், கல்வியில் சிறந்தவர், திடமான தேகம் உடையவர், உள்மனதில் உள்ள கருத்தை வெளியிட விரும்பாதவர், பாட்டிலும் கூத்திலும் விருப்பமுடையவர். தாம்பூலப்பிரியர், நினைத்த காரியத்தை முடிப்பதில் வல்லவர், உயர்ந்த நெற்றியை உடையவர் ஞானி. விசாலமான புத்தியும், கூர்மையான அறிவும், திறமையும் பெற்றிருப்பர். செல்வம் சேர்ப்பதில் ஆர்வம் இருக்கும். மனதில் தைரியம் குடி கொண்டிருக்கும். சிலருக்கு முன்கோபம் அதிகமாக இருக்கும். தானதர்மம் செய்வதில் ஆர்வம் காட்டுவர். பிறரின் மனதைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப நடக்கும் இயல்பைப் பெற்றிருப்பர்.

1. மிருகசீரிஷம் முதல் பாதத்தில் பிறந்தவர் செல்வம் உடையவர். பகைவரை வெற்றி கொள்பவர், பருமனான சரீரம் உடையவர். கோபம் உடையவர். ஆசாரம் இல்லாதவர், இராட்சசத் தன்மை உடையவர்.
2. மிருகசீரிஷம் இரண்டாம் பாதத்தில் பிறந்தவர் வழக்குரைப் பவர், உபதேசம் செய்பவர், சாது மனத்திற்கு உகந்தவர், உண்மை பேசுபவர், பெண் போகத்தில் விருப்பம் உடையவர்.
3. மிருகசீரிஷம் மூன்றாம் பாதத்தில் பிறந்தவர் உயர்ந்த குணம் உடையவர். உத்தமன், சாது, சந்தோஷம் உடையவர், ஆசாரம் உடையவர், புத்திமார், சீமார்.
4. மிருகசீரிஷம் நான்காம் பாதத்தில் பிறந்தவர் புத்திமார், மெய்யே உரைப்பவர், சாது, தருமம், செய்பவன், காமம், கோபம், வஞ்சகம் உடையவர்.

முதல் பாதம்: வே என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
 2-ம் பாதம்: வோ என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது 
3-ம் பாதம்: க என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
 4-ம் பாதம்: கி என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது

 இவர்கள் சந்திரனை வழிபடுவது சிறப்பு. பெளர்ணமி பூஜை செய்வதும் கிரிவலம் வருவதும் நல்லது.



நட்சத்திர அதிதேவதை -: ஈஸ்வரன்
பரிகார தெய்வம்  -: முருகன்
நட்சத்திர கணம்   -: தேவகணம்
விருட்சம்   -: கருங்காலி  (பாலில்லா மரம் )
மிருகம்   -: சாரைப் பாம்பு
பட்சி   :- கோழி
கோத்திரம்  :- அகத்தியர்
அனுகூல அதிர்ஷ்ட மலர் – செண்பகப்பூ, பாரிஜாதம்
அனுகூல, அதிர்ஷ்ட கல் – மாணிக்கம்
அனுகூல, அதிர்ஷட நிறம் – சிவப்பு, செம்மை
அனுகூல, அதிர்ஷ்ட எண் – 5

நட வேண்டிய மரம். 
1 ம் பாதம் - கருங்காலி
2 ம் பாதம் - ஆச்சா
3 ம் பாதம் - வேம்பு
4 ம் பாதம் - நீர்க்கடம்பு
பிறந்த நட்சத்திரத்திற்கு ஏற்ற மரத்தை நட்டு வைத்தால் நிச்சயம் நன்மை எற்படும்.


நட்பு , திருமணம் 
சுவாதி, சதயம், பூசம், அனுஷம், உத்திரட்டாதி, அசுவினி, மகம், உத்திரம், ரோகிணி, அஸ்தம்.


தொழில் 
நிதித்துறை, கணக்கு தணிக்கை, மின்சாரம், கம்ப்யூட்டர் சார்ந்த தொழில்கள் இவர்களுக்கு வளர்ச்சி தரும். ஒரு சிலருக்கு வாழ்க்கைத் துணை வகையில் சொந்தத் தொழில் அமையவும் வாய்ப்பு ஏற்படும்.

பகை 
வேதை  (ஆகாத நட்சத்திரம்) – மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம்
திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் – மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம்

நோய் 
நட்சத்திரத்திற்கு உரிய விளைவுகள்
பித்தகுன்மம், வெள்ளை, பெருவயிறு, இருமல், திமிர்வாதம்,நீரிழிவு, பெரு நோய் 

அகத்தியர் அருளிய  நட்சத்திர மந்திரம்
 மந்திர நிவாசினி சந்திர பத்தினி ம்ருகசீரிஷ தேவி சஹாய க்ருபே

குரு மூல மந்திரம் : 
 மிருகசீரிடம் நட்சத்திரம் 1ம் பாதம் - ரிஷப இராசி:
 ஓம் ஸ்ரீம் ருங் குருங் ஸ்ரீ மச்ச முனிவரே நம:

மிருகசீரிடம் நட்சத்திரம் 2ம் பாதம் - ரிஷப இராசி:
 ஸ்ரீம் ஸம் அம் உம் ஸ்ரீ சட்டை நாதரே நம:

 மிருகசீரிடம் நட்சத்திரம் 3ம் பாதம் - ரிஷப இராசி:
 ஓம் ஸ்ரீம் ஹவாங் ஹிலாங் ஸ்ரீ பாம்பாட்டி சித்தரே நம:

 மிருகசீரிடம் நட்சத்திரம் 3ம் பாதம் - ரிஷப இராசி:
 ஸ்ரீம் றம் ஹ்ரீங் ஸ்ரீ பாம்பாட்டி சித்தரே நம:

காயத்திரி மந்திரம் 

ஓம் சசிசேகராய வித்மஹே 
மஹாராஜாய தீமஹி 
தன்னோ ம்ருகசீர்ஷா ப்ரசோதயாத்




மந்திரம் குறைந்தது 9 முறையாவது  அல்லது 108 , அதிக பட்சம் 1008 முறை ஜெபிப்பதன் மூலம் நம் வாழ்வில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் பறந்தோடும்.

மற்ற நட்சத்திர பலனை அறிய இங்கே சொடுக்கவும் 

No comments:

Post a Comment

sudharsan

96 தத்துவங்கள்

தத்துவங்கள் 96 1. ஆன்ம தத்துவங்கள் -24 2. உடலின் வாசல்கள் -9 3. தாதுக்கள் -7 4. மண்டலங்கள் -3 5. குணங்கள் -3 6. மலங்கள...

ஆன்மீகம்