Monday, October 28, 2019

நவகிரஹங்களின் முழு விபரம் ( ராகு )

8.ராகு 


இவர் அசுரத்தலையும் , நாக உடலும் உடையவர். மிக்க வீரம் உடையவர். கருநாகம் என்று அழைக்கப் படுபவர்.
திக்கு                        : தென் மேற்கு
அதிதேவதை          : பசு
ப்ரத்யதி தேவதை  : பாம்பு
தலம்                         : காளத்தி
நிறம்                         : கருமை
வாகனம்                  : நீல சிம்மம், ஆடு 
தானியம்        : உளுந்து
மலர்                : மந்தாரை
வஸ்திரம்      : கருப்பு நிற ஆடை
ரத்தினம்        : கோமேதகம்
அன்னம்         : உளுத்தம்பருப்புப்பொடி சாதம்
உறவு               : ஜாதகரின் தந்தை வழி தாத்தா பாட்டியை குறிக்கும்.
உலோகம்           : தாமிரம் மற்றும் கருங்கல்
நட்சத்திரம்   : சதயம், சுவாதி, திருவாதிரை.
தேவதை     : பத்ரகாளி 
குணம்       : குரூரன் 
அசன வடிவம் : கொடி 
சமித்து        : அருகு 
சுவை         : புளிப்பு 
ராகம்         : ராமமனோஹரி 
ஆட்சி         : ஆட்சி வீடு இல்லை 
உச்சம்         : விருட்சகம் 
நீச்சம்          : ரிசபம் 
திரிகோணம்    : கும்பம் 
உறுப்பு         : முழங்கால் 
பால்           : பெண் 
தசை களம்     : 18 வருடம் 
கோசார களம்  : 1.1/2 வருடம் 
நட்பு கிரகம்    : சனி, சுக்கிரன் 
பகை கிரகம்   : சூரியன், சந்திரன், செவ்வாய்.
சம கிரகம்     : புதன் , குரு.
உப கிரகம்      : வியதிபாதன்.
ஸ்தலம்       : திரு நாகேஸ்வரம்.
தொழில்         : தொழில்நுட்ப அறிவு, எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் சம்பந்தப்பட்ட தொழில்கள், கமிஷன் வியாபாரம், மதுபானம் தயாரித்தல், ஆகாய விமானம், வேதியியல் ரசாயனங்கள் தயாரித்தல், உரம், பூச்சி மருந்து தயாரித்தல் ஆகியவற்றில் ஈடுபட்டால் நல்ல லாபம் பெறலாம்.


நவக்கிரகங்களில் மிகவும் வலிமையானவர் ராகு பகவான். ஒளி கிரகங்களான சூரிய - சந்திரர்களை தன் பிடியில் சிக்க வைத்து, அவர்களின் சக்தியை செயலிழக்க செய்யும் அளவுக்கு வலிமை மிக்கவர்.
கலியுகத்தில் மிகவும் வலுவாக செயல்படும் கிரகமும் ராகுதான். இவர் மனித தலையும், பாம்பின் உடலும் கொண்டவர். பாதி மனிதன் பாதி மிருகம். மெய், வாய், கண், மூக்கு, காது ஆகிய ஐம்புலன்களே, ஒருவரின் சிந்தனை உறுப்புகள். இந்த ஐம்புலன்களும், மனித உடலில் தலைப்பகுதியில் உள்ளன.

ராகுவிற்கு மனித தலை. அதில் உள்ள ஐம்புலன்களை இயக்கி, புறச் சிந்தனைகளை உருவாக்கி உலக பற்றோடு வாழ வைப்பதே ராகுவின் வேலை. உலக பற்றோடு இருக்கும் மனிதனே தவறு செய்வான். ஐம்புலன்களையும் அடக்கினால் மட்டுமே அகச் சிந்தனைகள் உருவாகும். ஐம்புலன்களையும் அடக்க பாடம் கற்பிப்பவரே ராகு பகவான். இவர் உறவுகளில் தாய் மற்றும் தந்தை வழி தாத்தாக்களை குறிப்பார். இடங்களில் பொந்துகள், குழிகள், படரும் கொடிகளையும், உறுப்புகளில் தோலையும் குறிக்கிறார்.

ராகு பகவானுக்கு சொந்த வீடு கிடையாது. ஆனால் தான் இருக்கும் வீட்டையே, சொந்த வீடாக எடுத்துக் கொள்ளும் தன்மை கொண்டவர். தன்னோடு சேர்ந்திருக்கும் கிரகங்களின் பலனைக் கொடுப்பவர். ராகு சென்ற பிறவியில் நிறைவேறாத ஆசை அல்லது அளவே இல்லாத ஆசைகளைச் சொல்பவர்.

பாம்புகள் புற்றில் வசித்தாலும், அந்த புற்றுகள் பாம்பினால் உருவாக்கப்படுவதில்லை. கறையான் புற்று மற்றும் பொந்துகளில் வசிக்கும். அடுத்தவர் சொத்தை அபகரிப்பது மட்டுமல்லாமல், அவர்களை அழிப்பதும்தான் ராகுவின் வேலை.

ஜாதகத்தில் கேந்திர, திரிகோணங்களில் இருக்கும் ராகுவும், சுயசாரம் பெறும் ராகுவும், தசா புத்தி காலங்களில் அதிக வலுப்பெற்று பூர்வ ஜென்ம கர்ம வினைக்கு ஏற்ற பலனை முழுமையாக அனுபவிக்கச் செய்கிறது. மறை ஸ்தானங்களில் உச்சம் பெறாத ராகு, விபரீத ராஜ யோகத்தையும் தரும்.

அதே நேரத்தில் ஒருவரது ஜாதகத்தில் அதிக கிரகங்கள் ராகு சாரம் பெற்று இருந்தாலோ, அல்லது கிரகண காலத்தில் ஒருவர் பிறந்திருந்தாலோ அந்த ஜாதகர் மீளாத் துயரத்தில் தவிப்பார். நயவஞ்சகர்களுடன் பழகும் நிலை, வெளி நாட்டிற்கு சென்று பிழைக்க வேண்டிய சூழ்நிலை, சிறை தண்டனை, விஷம் அருந்த செய்தல், கூட்டுமரணம், திடீர் ஏற்றம், திடீர் சரிவு, விதவையுடன் தொடர்பு, மாந்திரீகம், மற்றவர்களின் வாழ்வை கெடுத்தல், அன்னிய மொழி பேசுதல், வழக்குகள், புத்திர தோஷம், பித்ரு தோஷம், விஷக்கடி போன்ற பிரச்சினைகளால் பாதிப்படையச் செய்வார். அசுப கிரக தசா புத்தி, அந்தர காலங்களில் ஏற்ற, இறக்கங்கள் மிகுதியாக இருக்கும்.

இந்தப் பிரச்சினைகளில் இருந்து மீண்டு வருவதற்கு அல்லது ராகுவின் பாதிப்பை ஓரளவு சரி செய்வதற்கு, கும்பகோணம் அருகில் உள்ள திருநாகேஸ்வரம் சென்று வழிபாடு செய்து வரலாம். கும்பகோணம் அய்யாவாடி பிருத்தியங்கரா தேவி வழிபாடு, துர்க்கை, காளி போன்ற தெய்வங்களின் வழிபாடும் நன்மை வழங்கும். வளர்ந்து வரும் புற்றுக்கு சென்று வழிபாடு செய்யலாம். கால பைரவர் வழிபாடு, பஞ்சமி திதியில் கருடனை வழிபடுவது, சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகரை வழிபடுவது போன்றவையும், ராகு பகவானின் பாதிப்புகளில் இருந்து உங்களை மீட்டெடுக்கும்.


ராகு காயத்ரி :
ஓம் நாகத்வஜாய வித்மஹே பத்ம ஹஸ்தாய தீமஹி
தந்நோ ராகு ப்ரசோதயாது.......
மூல மந்திரம் :


ஓம் க்ரீம் க்ரீம் ஹீம் டம் டங்கதாரிணே ராஹவே ரம் ஹ்ரீம் ஸ்ரீம் பைம் ஸ்வாஹா


ராகுவை வணங்கினால் பயணத்தால் நன்மை கிடைக்கும். 

நவகிரகங்களைப் சுற்றி வழிபடும் போது அந்தந்த கிரகத்திற்கும் உரித்தான எண்ணிக்கையில் சுற்றி வழிபட வேண்டும். அதாவது  முதலில் ஒன்பது முறை சுற்றி வணங்கிய பின் அந்தக் கிரக அனுக்கிரகத்துக்காக மேலும் விசேஷமாகச் சுற்றி வந்து வழிபடுதல்  வேண்டும்.

நவகிரகங்களை வழிபடுவது நல்லது என்றாலும், எந்த ஒரு கோயிலிற்குச் சென்றாலும் மூலவரை வழிபடாமல் வெறும் நவகிரக  வழிபாட்டை மற்றும் மேற்கொள்வது தவறானது. நவக்கிரகங்களின் நாயகனாக விளங்குபவர் சூரியன். நமது ஐந்து மதத்தின் ஆறு  பிரிவுகளில் ஒன்றான செளரம் என்பது சூரியனையே முழுமுதல் கடவுளாக கொண்டாடுகிறது. இருகரங்களில் தாமரை ஏந்தி,  வலம் புறம் உஷா, இடது புறம் பிரத்யுஷா என இரு மனைவியருடன் ஏழு குதிரை பூட்டிய ரதத்தில் கம்பீரமாய் வலம்  வருபவர்.

ராகு பகவான் - 4 சுற்றுகள் அடிப்பிரதட்சிணம் செய்ய வேண்டும் 

No comments:

Post a Comment

sudharsan

96 தத்துவங்கள்

தத்துவங்கள் 96 1. ஆன்ம தத்துவங்கள் -24 2. உடலின் வாசல்கள் -9 3. தாதுக்கள் -7 4. மண்டலங்கள் -3 5. குணங்கள் -3 6. மலங்கள...

ஆன்மீகம்