Saturday, February 9, 2019

சிவன் 108 போற்றி





சிவாலயங்களில் சுவாமி பவனி வரும் போது, பக்தர்கள் இந்த 108 போற்றியை பாடியபடி வலம் வரலாம். திங்கள்கிழமைகளில் காலை, மாலையில் விளக்கேற்றியதும் வீட்டில் வைத்தும் ஒருவர் சொல்ல, குடும்பத்திலுள்ள மற்றவர்கள் தொடர்ந்து சொல்லலாம். பத்து நிமிட நேரமே ஆகும்.

1.ஓம் அகிலேஸ்வரா போற்றி
2.ஓம் அகிலாண்டீஸ்வரா போற்றி
3.ஓம் அர்த்தநாரீஸ்வரா போற்றி
4.ஓம் அம்பிகேஸ்வரா போற்றி
5.ஓம் அமுதீஸ்வரா போற்றி
6.ஓம் அமரேஸ்வரா போற்றி
7.ஓம் அனாதீஸ்வரா போற்றி
8.ஓம் அருணாசலேஸ்வரா போற்றி
9.ஓம் அத்தீஸ்வரா போற்றி
10.ஓம் அந்தகேஸ்வரா போற்றி
11.ஓம் அசரேஸ்வரா போற்றி
12.ஓம் ஆதீஸ்வரா போற்றி
13.ஓம் ஆனந்தீஸ்வரா போற்றி
14.ஓம் அவர்த்தேஸ்வரா போற்றி
15.ஓம் ஏகாம்பரேஸ்வரா போற்றி
16.ஓம் ஓங்காரேஸ்வரா போற்றி
17.ஓம் கடம்பேஸ்வரா போற்றி
18.ஓம் கங்கேஸ்வரா போற்றி
19.ஓம் கபாலீஸ்வரா போற்றி
20.ஓம் கார்த்தமேஸ்வரா போற்றி
21.ஓம் காரணீஸ்வரா போற்றி
22.ஓம் காளத்தீஸ்வரா போற்றி
23.ஓம் காமேஸ்வரா போற்றி
24.ஓம் கும்பேஸ்வரா போற்றி
25.ஓம் குற்றாலீஸ்வரா போற்றி
26.ஓம் குஸ்மேஸ்வரா போற்றி
27.ஓம் குமாரேஸ்வரா போற்றி
28.ஓம் குஞ்சேஸ்வரா போற்றி
29.ஓம் குபேரேஸ்வரா போற்றி
30.ஓம் கேதாரீஸ்வரா போற்றி
31.ஓம் கோதுமேஸ்வரா போற்றி
32.ஓம் கோட்டீஸ்வரா போற்றி
33.ஓம் கோகானேஸ்வரா போற்றி
34.ஓம் சங்கரேஸ்வரா போற்றி
35.ஓம் சத்தியகிரீஸ்வரா போற்றி
36.ஓம் சர்வேஸ்வரா போற்றி
37.ஓம் சரண்யேஸ்வரா போற்றி
38.ஓம் சங்கமேஸ்வரா போற்றி
39.ஓம் சக்கரேஸ்வரா போற்றி
40.ஓம் சந்திரேஸ்வரா போற்றி
41.ஓம் சண்டகேஸ்வரா போற்றி
42.ஓம் சப்தேஸ்வரா போற்றி
43.ஓம் ஜம்புகேஸ்வரா போற்றி
44.ஓம் ஜலகண்டேஸ்வரா போற்றி
45.ஓம் ஜாப்பீஸ்வரா போற்றி
46.ஓம் சிவனேஸ்வரா போற்றி
47.ஓம் சித்தேஸ்வரா போற்றி
48.ஓம் சிம்ஹேஸ்வரா போற்றி
49.ஓம் ஜீவனேஸ்வரா போற்றி
50.ஓம் சுந்தரேஸ்வரா போற்றி
51.ஓம் சூலேஸ்வரா போற்றி
52.ஓம் ஸூமேஸ்வரா போற்றி
53.ஓம் சூரியேஸ்வரா போற்றி
54.ஓம் ஜெகதீஸ்வரா போற்றி
55.ஓம் செப்பேஸ்வரா போற்றி
56.ஓம் சையகேஸ்வரா போற்றி
57.ஓம் சைலேஸ்வரா போற்றி
58.ஓம் சொக்கேஸ்வரா போற்றி
59.ஓம் சோமலிங்கேஸ்வரா போற்றி
60.ஓம் சோமேஸ்வரா போற்றி
61.ஓம் ஞானேஸ்வரா போற்றி
62.ஓம் தர்ப்பாரண்யேஸ்வரா போற்றி
63.ஓம் தர்மகேஸ்வரா போற்றி
64.ஓம் தணிகாசலேஸ்வரா போற்றி
65.ஓம் தாருவணீஸ்வரா போற்றி
66.ஓம் தானேஸ்வரா போற்றி
67.ஓம் தாரணேஸ்வரா போற்றி
68.ஓம் திரியம்பகேஸ்வரா போற்றி
69.ஓம் தியாகேஸ்வரா போற்றி
70.ஓம் தீக்ஷினேஸ்வரா போற்றி
71.ஓம் தீனேஸ்வரா போற்றி
72.ஓம் துந்தரேஸ்வரா போற்றி
73.ஓம் நந்திகேஸ்வரா போற்றி
74.ஓம் நந்தீஸ்வரா போற்றி
75.ஓம் நத்தேஸ்வரா போற்றி
76.ஓம் நடேஸ்வரா போற்றி
77.ஓம் நாகேஸ்வரா போற்றி
78.ஓம் நாடுகேஸ்வரா போற்றி
79.ஓம் நீலகண்டேஸ்வரா போற்றி
80.ஓம் நீலேஸ்வரா போற்றி
81.ஓம் பத்மேஸ்வரா போற்றி
82.ஓம் பரமேஸ்வரா போற்றி
83.ஓம் பட்டீஸ்வரா போற்றி
84.ஓம் பத்திகேஸ்வரா போற்றி
85.ஓம் பாரதீஸ்வரா போற்றி
86.ஓம் பாண்டேஸ்வரா போற்றி
87.ஓம் பிரகதீஸ்வரா போற்றி
88.ஓம் பீமேஸ்வரா போற்றி
89.ஓம் பீதாம்பரேஸ்வரா போற்றி
90.ஓம் பீமசங்கரேஸ்வரா போற்றி
91.ஓம் புரானேஸ்வரா போற்றி
92.ஓம் புண்டரிகேஸ்வரா போற்றி
93.ஓம் புவனேஸ்வரா போற்றி
94.ஓம் பூதேஸ்வரா போற்றி
95.ஓம் பூரணகேஸ்வரா போற்றி
96.ஓம் மண்டலீஸ்வரா போற்றி
97.ஓம் மகேஸ்வரா போற்றி
98.ஓம் மகா காளேஸ்வரா போற்றி
99.ஓம் மங்களேஸ்வரா போற்றி
100.ஓம் மணலீஸ்வரா போற்றி
101.ஓம் மவுலீஸ்வரா போற்றி
102.ஓம் யோகேஸ்வரா போற்றி
103.ஓம் வைத்தீஸ்வரா போற்றி
104.ஓம் ராமேஸ்வரா போற்றி
105.ஓம் ரோகணேஸ்வரா போற்றி
106.ஓம் லிங்கேஸ்வரா போற்றி
107.ஓம் லோகேஸ்வரா போற்றி
108.ஓம் வேங்கீஸ்வரா போற்றி

காளிதேவி 108 போற்றி!





காளிதேவி 108 போற்றி!











காளிதேவியை மனதில் நினைத்து இந்த போற்றியை கூறி காளியை வழிபட்டால் மனபலம் கூடும். கோயில்களில் காளி, துர்க்கை சந்நிதிக்கு முன்பு விளக்கேற்றி இந்த போற்றியை கூறிவந்தால் நன்மை பெருகும் நினைத்தது கைகூடும்.


ஓம் காளியே போற்றி
ஓம் அனுக்கிரகம் அருள்பவளே போற்றி
ஓம் அல்லல் தீர்ப்பவளே போற்றி
ஓம் அஷ்டபுஜம் கொண்டவளே போற்றி
ஓம் அகநாசினியே போற்றி
ஓம் அளத்தற்கு அரியவளே போற்றி
ஓம் அங்குசம் ஏந்தியவளே போற்றி
ஓம் ஆதாரசக்தியே போற்றி
ஆலகாலத் தோன்றலே போற்றி
 ஓம் இளங்காளியே போற்றி
 ஓம் இடுகாட்டில் இருப்பவளே போற்றி
 ஓம் இஷ்டதேவதையே போற்றி
 ஓம் இடர் களைபவளே போற்றி
 ஓம் ஈறிலாளே போற்றி
 ஓம் ஈரெண் முகத்தாளே போற்றி
 ஓம் உயிர்ப்பிப்பவளே போற்றி
 ஓம் உக்ரகாளியே போற்றி
 ஓம் உஜ்ஜைனி காளியே போற்றி
 ஓம் உதிரம் ஏற்பவளே போற்றி
 ஓம் ஊழிசக்தியே போற்றி
 ஓம் எழுதலைக்காளியே போற்றி
 ஓம் எலுமிச்சை பிரியையே போற்றி
 ஓம் ஓங்காரியே போற்றி
 ஓம் கருங்காளியே போற்றி
 ஓம் காருண்யதேவியே போற்றி
 ஓம் கபாலதாரியே போற்றி
 ஓம் கல்யாணியே போற்றி
 ஓம் காக்கும் அன்னையே போற்றி
 ஓம் காளராத்ரியே போற்றி
 ஓம் காலபத்னியே போற்றி
 ஓம் குங்குமகாளியே போற்றி
 ஓம் குலம் காத்தருள்வாய் போற்றி
 ஓம் சமரில் வெல்பவளே போற்றி
 ஓம் சத்திய தேவதையே போற்றி
 ஓம் சம்ஹார காளியே போற்றி
 ஓம் சண்டமுண்ட சம்ஹாரிணியே போற்றி
 ஓம் சிம்ம வாகினியே போற்றி
 ஓம் சிறுவாச்சூர் தேவியே போற்றி
 ஓம் சிவசக்தியே போற்றி
 ஓம் சீற்றம் கொண்டவளே போற்றி
 ஓம் சுடலைக்காளியே போற்றி
 ஓம் சுந்தர மாகாளியே போற்றி
 ஓம் சூலம் கொண்டவளே போற்றி
 ஓம் செங்காளியே போற்றி
 ஓம் செல்வம் தருபவளே போற்றி
 ஓம் சேர்வாரை காப்பாய் போற்றி
 ஓம் சொர்க்கம் தருவாய் போற்றி
 ஓம் சோமகாளியே போற்றி
 ஓம் சோகம் தீர்ப்பவளே போற்றி
 ஓம் தனகாளியே போற்றி
 ஓம் தட்சிணகாளியே போற்றி
 ஓம் தசமுகம் கொண்டவளே போற்றி
 ஓம் தாண்டவமாடினாய் போற்றி
 ஓம் தாருகனை அழித்தாய் போற்றி
 ஓம் திரிபுரசுந்தரியே போற்றி
 ஓம் தில்லைக்காளியே போற்றி
 ஓம் தீமையை அழிப்பாய் போற்றி
 ஓம் தீயவர் பகைவியே போற்றி
 ஓம் நல்லவர் துணைவியே போற்றி
 ஓம் நலன்கள் தருவாய் போற்றி
 ஓம் நவக்கிரக நாயகியே போற்றி
 ஓம் நம்பிக்கை நட்சத்திரமே போற்றி
 ஓம் நாளெலாம் அருள்வாய் போற்றி
 ஓம் நால்திசையும் காப்பாய் போற்றி
 ஓம் நாடாளும் தேவியே போற்றி
 ஓம் நாகாபரணம் அணிந்தாய் போற்றி
 ஓம் நிர்மலமாய் நின்றாய் போற்றி
 ஓம் நித்தியகாளியே போற்றி
 ஓம் நிக்ரஹ காளியே போற்றி
 ஓம் பல்பெயர் கொண்டாய் போற்றி
 ஓம் பராசக்தி தாயே போற்றி
 ஓம் பஞ்சகாளியே போற்றி
 ஓம் பஞ்சம் தீர்ப்பாய் போற்றி
 ஓம் பயங்கரவடிவே போற்றி
 ஓம் பத்ரகாளியே போற்றி
 ஓம் பாதாளகாளியே போற்றி
 ஓம் பாசாங்குசம் ஏந்தினாய் போற்றி
 ஓம் பாலபிஷேகம் ஏற்பாய் போற்றி
 ஓம் பாரெல்லாம் காப்பாய் போற்றி
 ஓம் பூதகாளியே போற்றி
 ஓம் பூவாடைக்காரியே போற்றி
 ஓம் பூக்குழி ஏற்பவளே போற்றி
 ஓம் பெருங்கண்ணியே போற்றி
 ஓம் பேராற்றலே போற்றி
 ஓம் பொன்வளம் தருவாய் போற்றி
 ஓம் பொல்லாரை அழிப்பாய் போற்றி
 ஓம் மதுரகாளியே போற்றி
 ஓம் மடப்புரத்தாளே போற்றி
 ஓம் மகாகாளியே போற்றி
 ஓம் மகாமாயையே போற்றி
 ஓம் மங்களரூபியே போற்றி
 ஓம் மந்திரத்தாயே போற்றி
 ஓம் மருந்தாய் வருவாய் போற்றி
 ஓம் மாற்றம் தருவாய் போற்றி
 ஓம் முக்கண்ணியே போற்றி
 ஓம் மும்மூர்த்தி தலைவியே போற்றி
 ஓம் மூவுலகம் ஆள்வாய் போற்றி
 ஓம் மோகம் தீர்ப்பாய் போற்றி
 ஓம் மோட்சம் தருவாய் போற்றி
 ஓம் வளம் தரும் தேவியே போற்றி
 ஓம் வரங்கள் அருள்வாய் போற்றி
 ஓம் விரிசடையாளே போற்றி
 ஓம் விண்ணகத்தலைவியே போற்றி
 ஓம் வீரபத்ரகாளியே போற்றி
 ஓம் வீணரை அழிப்பாய் போற்றி
 ஓம் வெக்காளியே போற்றி
 ஓம் வேதனை களைவாய் போற்றி
 ஓம் காளி ஜெய் காளி ஓம் காளி
ஜெய்காளி ஓம்காளி ஜெய்காளி போற்றி போற்றி! 

ஸ்ரீ பைரவர் 108 போற்றி



 ஸ்ரீ   பைரவர் 108 போற்றி



தேய்பிறை அஷ்டமி திதியில் இந்த 108 போற்றியை சொல்லி பைரவர் வழிபாடு செய்தால் கஷ்டங்கள் படிப்படியாக குறையும். அந்த 108 போற்றியை கீழே பார்க்கலாம்.

தேய்பிறை அஷ்டமி திதியில் பைரவர் வழிபாடு செய்வது பயத்தைப் போக்கி, வாழ்வில் தன்னம்பிக்கையைத் தரும். இந்த நாளில் மாலை 4.30- 6 மணிக்குள் திருவிளக்கேற்றி வீட்டிலேயே இந்த போற்றியைச் சொல்லலாம். பைரவர் சன்னதி முன்பு கூட்டாக அமர்ந்து, ஒருவர் சொல்ல மற்றவர்கள் திருப்பிச் சொல்லலாம்.


01. ஓம் பைரவனே போற்றி
02. ஓம் பயநாசகனே போற்றி
03. ஓம் அஷ்டரூபனே போற்றி
04. ஓம் அஷ்டமித் தோன்றலே போற்றி
05. ஓம் அயன்குருவே போற்றி

06. ஓம் அறக்காவலனே போற்றி
07. ஓம் அகந்தையழிப்பவனே போற்றி
08. ஓம் அடங்காரின் அழிவே போற்றி
09. ஓம் அற்புதனே போற்றி
10. ஓம் அசிதாங்க பைரவனே போற்றி

11. ஓம் ஆனந்த பைரவனே போற்றி
12. ஓம் ஆலயக்காவலனே போற்றி
13. ஓம் இன்னல் பொடிப்பவனே போற்றி
14. ஓம் இடுகாட்டில் இருப்பவனே போற்றி
15. ஓம் உக்ர பைரவனே போற்றி

16. ஓம் உடுக்கை ஏந்தியவனே போற்றி
17. ஓம் உதிரம் குடித்தவனே போற்றி
18. ஓம் உன்மத்த பைரவனே போற்றி
19. ஓம் உறங்கையில் காப்பவனே போற்றி
20. ஓம் ஊழ்வினை தீர்ப்பவனே போற்றி

21. ஓம் எல்லை தேவனே போற்றி
22. ஓம் எளிதில் இரங்குபவனே போற்றி
23. ஓம் கபாலதாரியே போற்றி
24. ஓம் கங்காளமூர்த்தியே போற்றி
25. ஓம் கர்வ பங்கனே போற்றி

26. ஓம் கல்பாந்த பைரவனே போற்றி
27. ஓம் கதாயுதனே போற்றி
28. ஓம் கனல்வீசும் கண்ணனே போற்றி
29. ஓம் கருமேக நிறனே போற்றி
30. ஓம் கட்வாங்க தாரியே போற்றி

31. ஓம் களவைக் குலைப்போனே போற்றி
32. ஓம் கருணாமூர்த்தியே போற்றி
33. ஓம் கால பைரவனே போற்றி
34. ஓம் காபாலிகர் தேவனே போற்றி
35. ஓம் கார்த்திகையில் பிறந்தவனே போற்றி

36. ஓம் காளாஷ்டமிநாதனே போற்றி
37. ஓம் காசிநாதனே போற்றி
38. ஓம் காவல்தெய்வமே போற்றி
39. ஓம் கிரோத பைரவனே போற்றி
40. ஓம் கொன்றைப்பிரியனே போற்றி

41. ஓம் சண்ட பைரவனே போற்றி
42. ஓம் சட்டை நாதனே போற்றி
43. ஓம் சம்ஹார பைரவனே போற்றி
44. ஓம் சங்கடம் தீர்ப்பவனே போற்றி
45. ஓம் சிவத்தோன்றலே போற்றி

46. ஓம் சிவாலயத்து இருப்போனே போற்றி
47. ஓம் சிக்ஷகனே போற்றி
48. ஓம் சீர்காழித்தேவனே போற்றி
49. ஓம் சுடர்ச்சடையனே போற்றி
50. ஓம் சுதந்திர பைரவனே போற்றி

51. ஓம் சிவ அம்சனே போற்றி
52. ஓம் சுவேச்சா பைரவனே போற்றி
53. ஓம் சூலதாரியே போற்றி
54. ஓம் சூழ்வினை அறுப்பவனே போற்றி
55. ஓம் செம்மேனியனே போற்றி

56. ஓம் க்ஷேத்ரபாலனே போற்றி
57. ஓம் தட்சனை அழித்தவனே போற்றி
58. ஓம் தலங்களின் காவலனே போற்றி
59. ஓம் தீது அழிப்பவனே போற்றி
60. ஓம் துர்சொப்பன நாசகனே போற்றி

61. ஓம் தெற்கு நோக்கனே போற்றி
62. ஓம் தைரியமளிப்பவனே போற்றி
63. ஓம் நவரச ரூபனே போற்றி
64. ஓம் நரசிம்ம சாந்தனே போற்றி
65. ஓம் நள்ளிரவு நாயகனே போற்றி

66. ஓம் நரகம் நீக்குபவனே போற்றி
67. ஓம் நாய் வாகனனே போற்றி
68. ஓம் நாடியருள்வோனே போற்றி
69. ஓம் நிமலனே போற்றி
70. ஓம் நிர்வாணனே போற்றி

71. ஓம் நிறைவளிப்பவனே போற்றி
72. ஓம் நின்றருள்வோனே போற்றி
73. ஓம் பயங்கர ஆயுதனே போற்றி
74. ஓம் பகையளிப்பவனே போற்றி
75. ஓம் பரசு ஏந்தியவனே போற்றி

76. ஓம் பலிபீடத்து உறைவோனே போற்றி
77. ஓம் பாபம் தீர்ப்பவனே போற்றி
78. ஓம் பால பைரவனே போற்றி
79. ஓம் பாம்பணிந்த தெய்வமே போற்றி
80. ஓம் பிரளயகாலனே போற்றி

81. ஓம் பிரம்ம சிரச்சேதனே போற்றி
82. ஓம் பூஷண பைரவனே போற்றி
83. ஓம் பூதங்களின் நாதனே போற்றி
84. ஓம் பெரியவனே போற்றி
85. ஓம் பைராகியர் நாதனே போற்றி

86. ஓம் மல நாசகனே போற்றி
87. ஓம் மகோதரனே போற்றி
88. ஓம் மகா பைரவனே போற்றி
89. ஓம் மலையாய் உயர்ந்தவனே போற்றி
90. ஓம் மகா குண்டலனே போற்றி

91. ஓம் மார்த்தாண்ட பைரவனே போற்றி
92. ஓம் முக்கண்ணனே போற்றி
93. ஓம் முக்தியருள்வோனே போற்றி
94. ஓம் முனீஸ்வரனே போற்றி
95. ஓம் மூலமூர்த்தியே போற்றி

96. ஓம் யமவாதனை நீக்குபவனே போற்றி
97. ஓம் யாவர்க்கும் எளியவனே போற்றி
98. ஓம் ருத்ரனே போற்றி
99. ஓம் ருத்ராட்சதாரியே போற்றி
100. ஓம் வடுக பைரவனே போற்றி

101. ஓம் வடுகூர் நாதனே போற்றி
102. ஓம் வடகிழக்கு அருள்வோனே போற்றி
103. ஓம் வடைமாலைப் பிரியனே போற்றி
104. ஓம் வாரணாசி வேந்தே போற்றி
105. ஓம் வாமனர்க்கு அருளியவனே போற்றி

106. ஓம் விரும்பியதை அருள்வோனே போற்றி
107. ஓம் விபீஷண பைரவனே போற்றி
108. ஓம் வீழாமல் காப்பவனே போற்றி போற்றி!

96 தத்துவங்கள்


தத்துவங்கள் 96








1. ஆன்ம தத்துவங்கள் -24
2. உடலின் வாசல்கள் -9
3. தாதுக்கள் -7
4. மண்டலங்கள் -3
5. குணங்கள் -3
6. மலங்கள் -3
7. வியாதிகள் -3
8. விகாரங்கள் -8
9. ஆதாரங்கள் -6
10. வாயுக்கள் -10
11. நாடிகள் -10
12. அவத்தைகள் -5
13. ஐவுடம்புகள் -5

ஆன்ம தத்துவங்கள் 24
ஆன்ம தத்துவங்கள் 24ம் ஐந்து பிரிவுகளை உடையது. அவை,
1. பூதங்கள் - 5 (நிலம்,நீர்,காற்று,ஆகாயம்,நெருப்பு)
2. ஞானேந்திரியங்கள் -5 (மெய்,வாய்,கண்,மூக்கு,செவி)
3. கர்மேந்திரியங்கள் -5 (வாய்,கை,கால்,மலவாய்,கருவாய்)
4. தன்மாத்திரைகள் -5 (சுவை,ஒளி,ஊறு,ஓசை,நாற்றம்)
5. அந்தக்கரணங்கள் -4 ((மனம்,அறிவு,நினைவு,முனைப்பு)
பூதங்கள் 5
1. நிலம் உலகம் (மண்) மனிதன் (எலும்பு,மாமிசம்,தோல்,நரம்பு,உரோமம்)
2. நீர் உலகம் (நீர்) மனிதன் (உமிழ்நீர்,சிறுநீர்,வியர்வை,இரத்தம்,விந்து,)
3. காற்று உலகம் (வாயு) மனிதன் (சுவாசம்,வாயு)
4. ஆகாயம் உலகம் (வானம்) மனிதன் (வான் போல பரந்து விரிந்த மூளை)
5. நெருப்பு உலகம் (சூரியஒளி)மனிதன்(பசி,தூக்கம்,தாகம்,உடலுறவு,அழுகையின்போது உடல்வெப்பம் அதிகரிக்கும்)
ஞானேந்திரியங்கள் 5
1. மெய்(உடம்பு) காற்றின் அம்சமாதலால் குளிர்ச்சி,வெப்பம்,மென்மை,வன்மை அறியும்
2. வாய்(நாக்கு) நீரின் அம்சமாதலால் உப்பு,புளிப்பு.இனிப்பு,கைப்பு,கார்ப்பு,துவர்ப்பு என அறுசுவையறியும்
3. கண் நெருப்பின் அம்சமாதலால் நிறம்,நீளம் உயரம்,குட்டை,பருமன்,மெலிவு என பத்து தன்மையறியும்
4. மூக்கு மண்ணின் அம்சமாதலால் வாசனை அறியும்
5. செவி வானின் அம்சமாதலால் ஓசையறியும்
கர்மேந்திரியங்கள் 5
1. வாய் (செயல்) சொல்வது
2. கை (செயல்) கொடுக்கல்,வாங்கல்,பிடித்தல்,ஏற்றல்
3. கால் (செயல்) நிற்றல்,நடத்தல்,அமர்தல்,எழுதல்
4. மலவாய் (செயல்) மலநீரை வெளியே தள்ளுதல்
5. கருவாய் (செயல்) விந்தையும்,சுரோணிதத்தையும்,சிறுநீரையும் வெளியேத் தள்ளும்
தன்மாத்திரைகள் 5
1. சுவை சுவையறிதல்
2. ஒளி உருவமறியும்
3. ஊறு உணர்வறியும்
4. ஓசை ஓசையறியும்
5. நாற்றம் மணமறியும்
அந்தக்கரணங்கள் 4
1. மனம்
2. புத்தி
3. சித்தம்
4. அகங்காரம்
உடலில் வாசல்கள் 9
1. கண்கள்-2
2. செவிகள் -2
3. முக்குத்துவாரங்கள் -2
4. வாய் -1
5. மலவாயில் -1
6. குறிவாசல் -1
தாதுக்கள் 7
1. சாரம் - (இரசம்)
2. செந்நீர் (இரத்தம்)
3. ஊன் (மாமிசம்)
4. கொழுப்பு
5. எலும்பு
6. மூளை
7. வெண்ணீர் (விந்து,சுரோணிதம்)
மண்டலங்கள் 3
1. அக்னி மண்டலம்
2. ஞாயிறு மண்டலம்
3. திங்கள் மண்டலம்
குணங்கள் 3
1. மனஎழுச்சி (களிப்பு,அகங்காரம்,போகம்,வீரம்,ஈகை)
2. மயக்கம் (பற்று,தூக்கம்,சம்போகம்,திருட்டு,மோகம்,கோபம்)
3. நன்மை (வாய்மை,கருணை,பொய்யாமை,கொல்லாமை,அன்பு,அடக்கம்)
மலங்கள் 3
1. ஆணவம் (நான் என்ற மமதை)
2. மாயை (பொருட்களின் மீது பற்று வைத்து அபகரித்தல்)
3. வினை (ஆணவம்,மாயையினால் வரும் விளைவு)
பிணிகள் 3
1. வாதம்
2. பித்தம்
3. கபம்
விகாரங்கள் 8
1. காமம்,
2. குரோதம்,
3. உலோபம்,
4. மோகம்,
5. மதம்,
6. மாச்சரியம்,
7. துன்பம்,
8. அகங்காரம்
ஆதாரங்கள் 6
1. மூலம்
2. தொப்புள்
3. மேல்வயிறு
4. நெஞ்சம்
5. கழுத்து புருவநடு
6. டம்பம் (தற்பெருமை)
வாயுக்கள் 10
1. உயிர்க்காற்று
2. மலக்காற்று
3. தொழிற்காற்று
4. ஒலிக்காற்று
5. நிரவுக்காற்று
6. விழிக்காற்று
7. இமைக்காற்று
8. தும்மல்காற்று
9. கொட்டாவிக்காற்று
10. வீங்கல்காற்று
நாடிகள் 10
1. சந்திரநாடி அல்லது பெண்நாடி
2. சூரியநாடி அல்லது ஆண்நாடி
3. நடுமூச்சு நாடி
4. உள்நாக்கு நரம்புநாடி
5. வலக்கண் நரம்புநாடி
6. இடக்கண் நரம்புநாடி
7. வலச்செவி நரம்புநாடி
8. இடதுசெவி நரம்புநாடி
9. கருவாய் நரம்புநாடி
10. மலவாய் நரம்புநாடி
அவத்தைகள் 5
1. நனவு (ஐம்புலன் வழி அறியப்படும்)
2. கனவு
3. உறக்கம் (சொல்லப்புலப்படாத நித்திரைநிலை)
4. பேருறக்கம் (மூர்ச்சையடைதல்)
5. உயிர்அடக்கம் (கோமா,ஆழ்மயக்கநிலை)
ஐவுடம்புகள் 5
1. பருஉடல்
2. வளியுடல்
3. அறிவுடல்
4. மனஉடல்
5. இன்பஉடல்
குண்டுக்குறியிட்ட வரிசையின் உறுப்பினர்
சித்தர்கள் குறிப்பிடும் இந்த 96 தத்துவங்களில் (உடலின் வேதியியலில்) ஏதாவது மாற்றம் ஏற்படின் நோய் ஏற்படுகிறது. ஐம்பூதங்களும் சரிவர இயங்காவிடில் இயக்கம் பாதிக்கும். உதாரணமாக நீர் ஒருவர் உடலிலிருந்து அதிகமாக வெளியேறக் கூடாது. வெப்பம் அளவாய் இருக்க வேண்டும். அது போல் நாடிகள் சரிவர இயங்க வேண்டும். இதுதவிர, மூச்சு விடும் அளவிலும் ஒழுங்குமுறை இருக்கவேண்டும்.
குண்டுக்குறியிட்ட வரிசையின் உறுப்பினர்
மனிதனின் ஒருநாள் சுவாச எண்ணிக்கை 21600 என்றும் இது கூடுவதும் குறைவதும் என்று நிலை மாறினால் ஆயுள் குறையும் என்றும் , 21600 முறை தினமும் மூச்சுவிடக்கூடிய மனிதன் 1 120 ஆண்டுகள் வாழ முடியும் என்றும் சித்தர்கள் கணித்துள்ளனர். முறையற்ற வாழ்க்கைப்போக்கை மேற்கொள்பவர்களுக்கு சுவாசம் அதிகரித்து ஆயுள் குறைகிறது என்கிறார் திருமூலர்(திருமந்திரம்-729). முறையான மூச்சுப் பயிற்சியை மேற்கொண்டு நடுமூச்சைச்சார்ந்து சுவாசிக்கக் கற்றால் 166 ஆண்டுகள் வரையிலும் வாழலாம் என்கிறார் இப்பாடலில்.
குண்டுக்குறியிட்ட வரிசையின் உறுப்பினர்
முதுமையில் அல்லது நோயினால் இறக்கும் தருவாயில் உள்ள ஒருவருக்கு மரணம் எத்தனை நாட்களுக்குள் ஏற்படும் என்பதையும் துல்லியமாகக் கணித்துள்ளனர். மற்றவர் புருவத்தைப் பார்த்தால் தெரியாதவர்களுக்கு 9 நாளிலும்,காது கேட்காவிட்டால் 7 நாளிலும்,நட்சத்திரம் தெரியாதவர்களுக்கு 5 நாளிலும்,மூக்குநுனி தெரியாதவர்களுக்கு 3 நாளிலும், இரண்டு கண்களையும் கையால் அமுக்கினால் கண்ணீர் வராதவர்களுக்கு 10 நாளிலும் மரணம் வரலாம் என்கிறார்கள் சித்தர்கள். சித்தர்கள் ஆன்மீகவாதிகள் போல வெளிப்பார்வைக்குத் தோன்றினாலும் உண்மையில் அவர்கள் விஞ்ஞானிகளே. மெய்ஞானத்தோடு இணைத்து உடல்அறிவியலை எளிய மக்களுக்குப் புரியும்படி எடுத்துரைத்துள்ளார்கள்.
குறிப்புகள்
1.உயிரினங்கள் ஒருநிமிடத்திற்கு விடும் மூச்சு அளவு
தேரை (1-1) (நிமிடம்) 500-1000 வாழும் ஆண்டு
திமிங்கிலம் (3-4) 200-250 வாழும் ஆண்டு
ஆமை (4-5) 150-155 வாழும் ஆண்டு
யானை (11-12) 100-120 வாழும் ஆண்டு
பாம்பு (7-8) 126-130 வாழும் ஆண்டு
குரங்கு (31-32) 20-30 வாழும் ஆண்டு
முயல் (38-39) 8-10 வாழும் ஆண்டு
பண்டையமனிதர் (12-13) 100-120 வாழும் ஆண்டு
இக்காலமனிதர் (16-17) 60-80 வாழும் ஆண்டு

sudharsan

96 தத்துவங்கள்

தத்துவங்கள் 96 1. ஆன்ம தத்துவங்கள் -24 2. உடலின் வாசல்கள் -9 3. தாதுக்கள் -7 4. மண்டலங்கள் -3 5. குணங்கள் -3 6. மலங்கள...

ஆன்மீகம்